Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கேலிச்சித்திரம்.
இனக்களுக்கிடையேயான இயல்புகளை பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது.

‘தெற்கிலுள்ள சாதாரண விவசாயிக்கு உள்ள பிரச்சினை தான் வடக்கிலுள்ள விவசாயிக்கும் உள்ளது. அன்றாடம் தனது வயிற்றுப் பிழைப்பினை எவ்வாறு நடத்துவது என்று யோசிப்பவர்களாகவே இன்னும் எம் நாட்டு மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இனப்பிரச்சினையோ, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பிலே தலையிட்டுப் பேச வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு பேசவும் அவர்களுத் தெரியாது. உண்மையில் நாட்டில் இனப்பிரச்சினையை தூண்டிவிடுபவர்கள் அரசியல் வாதிகளே. தங்களது இருப்பினைத் தக்கவைப்பதும் வாக்கு வங்கியை நிரப்புவதுமே அவர்களுக்குத் தேவை.”என்கிறார் கேலிச்சித்திரக் கலைஞர் அவந்த ஆட்டிகல. தனது கேலிச்சித்திரங்களில் […]

10.11.2017  |  
கொழும்பு மாவட்டம்

‘தெற்கிலுள்ள சாதாரண விவசாயிக்கு உள்ள பிரச்சினை தான் வடக்கிலுள்ள விவசாயிக்கும் உள்ளது. அன்றாடம் தனது வயிற்றுப் பிழைப்பினை எவ்வாறு நடத்துவது என்று யோசிப்பவர்களாகவே இன்னும் எம் நாட்டு மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இனப்பிரச்சினையோ, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பிலே தலையிட்டுப் பேச வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு பேசவும் அவர்களுத் தெரியாது. உண்மையில் நாட்டில் இனப்பிரச்சினையை தூண்டிவிடுபவர்கள் அரசியல் வாதிகளே. தங்களது இருப்பினைத் தக்கவைப்பதும் வாக்கு வங்கியை நிரப்புவதுமே அவர்களுக்குத் தேவை.”என்கிறார் கேலிச்சித்திரக் கலைஞர் அவந்த ஆட்டிகல.
தனது கேலிச்சித்திரங்களில் (காட்டூன்களிலும்) பெரும்பாலும் எழுத்துக்களின் பயன்பாட்டை மிகவும் குறைந்தளவிலேயே பயன்படுத்தி வரும் அவந்த ஆட்டிகல “எழுத்துக்களால் அல்லாது உருவங்களால் ஒரு செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஆசைப்படுகின்றேன்.” என்கிறார். உள்ளுர் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கும் அவந்த அந்தப்பத்திரிகைக்கு பக்கவடிவமைப்பாளர் பதவியிலேயே நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் படிப்படியாக அவரது திறமையை சரியாகப்பயன்படுத்தி கேலிச்சித்திர கலைஞராக உருவானதையும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் நல்லிணக்கம் தொடர்பில் அவரிடம் வினாவினோம். “எமது நாடு பல்லின மக்களைக் கொண்டது. ஒரு விடயம் தொடர்பில் விளக்குகின்றபோது குறிப்பிட்ட ஒரு மொழிசார்ந்து அதன் எழுத்துக்களை பயன்படுத்துவது வரையறுக்கப்பட்ட மக்களை மட்டுமே அது சென்றடைகின்றது, ஆனால் உருவங்களை பயன்படுத்துவதானது, மொழி கடந்து நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் பார்த்துப் புரிந்துகொள்ளக் கூடியதாய் இருக்கும். இதன் மூலமும் ஒரு சிறியதொரு நல்லிணக்கம் ஏற்படலாம் அல்லவா….. அதையே கேலிச்சித்திரத்தினூடாக செய்ய விளைகிறேன்” என்கிறார்.

 

/
“இராணுவ அதிகாரி வடக்கிலுள்ள ஒருவரைச் சுடும்போது தெற்கில் உள்ளவர்கள் கைகொட்டிச் சிரித்து வேடிக்கை பார்க்கின்றார்கள். அதே துப்பாக்கி முனை அவர்களை நோக்கித் திரும்புகையில் அதிர்ச்சியுடன் ஆவேசம் அடைபவர்களாக உள்ளார்கள். அவ்வாவறிருக்கையில் நாட்டின் இராணுவமோ நிர்வாகமோ பாராளுமன்ற அமைச்சர்கள், ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது அவர்களது உத்தரவிற்கு அமைவாகவே நாட்டின் செயற்பாடுகள் அமைகின்றன. அவர்களது நிர்வாகச் செயற்பாடுகளே நாட்டில் உள்ள மக்களிடத்தில் பிரிவினை வாதத்தினை மேலோங்கச் செய்கின்றது. என்பதைச் நாசுக்காகவும் கேளிக்கையாகவும் பலமுறை சொல்லியிருக்கிறேன்” என்கிறார். அவந்தவின் கேலிச்சித்திரங்கள் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் சிறந்த கேலிச்சித்திரத்திற்;கான விருதினை தொடர்ந்து 3 வருடங்கள் பெற்றுள்ளன. இந்த கேலிச்சித்திரங்களை பார்த்து ரசிக்க, ‘அவந்த ஆட்டிக்கல’ என்ற முகப்புத்தகப்பக்கம் எமக்கு உதவுகிறது.
இந்த கேலிச்சித்திரங்கள் அல்லது கருத்தோவியங்கள் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான இயல்புகளை பிரச்சினைகளை நுணுக்கமாக மிக இலகுபடுத்தி சித்தரிப்பனவாக உள்ளன.
அவந்த கேகாலை மாவட்டத்தில் உள்ள ‘கலபிட மட’ என்ற ஊரில் மின்சார வசதி கூட அற்ற சூழலில் வளர்ந்தவர். தந்தை புகையிரத திணைக்களத்தின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஒரு அதிகாரி. புத்தகங்கள் பத்திரிகைகள் வாசிப்பதற்கோ பார்ப்பதற்கோ வீட்டில், பஞ்சம் இல்லை. பள்ளிக்காலத்திலேயே கேலிச்சித்திரம் வரைவதிதல் பெருமளவு ஆர்வம் கொண்டு செயற்பட்டுள்ளார்.
இவரது கேலிச்சித்திரங்கள் பெரும்பாலும் சிறுபான்மைச் சமூகங்களை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது.
“என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகின்ற ஒரு கேள்வி,ள ஏன் நீங்கள் சிங்கள இனவாதத்துக்கு எதிராகவும் சிறுபான்மையினத்தைப்பற்றியும் பல கேலிச் சித்திரங்களை வரைவதற்கான காரணம் என்ன என்று, இதனை என்னுடைய பத்திரிகை ஆசிரியரே பலமுறை என்னைக் கேட்டிருக்கின்றார். அதற்கு நான் அளிக்கின்ற ஒரு பதில்தான் ‘மற்றைய இனத்தை நான் விமர்சிப்பதற்கு முன்னர் நான் என்னுடைய மதத்தை இனத்தை விமர்சித்திருக்க வேண்டும்’ என்பதே எனது கருத்து. ஒருவர் தன்னுடைய விடயம் தொடர்பில் நன்கு அறிந்து விமர்சித்த பின்னரே மற்றையவர்களுடைய விடயங்களை விமர்சிக்க வேண்டும் என்பதே அதன் கருத்து.

 

/

 

அரசியல்வாதிகளே வரப்பிரசாதங்களுக்காவும் அரசியல் சலுகைக்காகவும் தமக்கான நன்மையை நிலைநாட்டும் பொருட்டும் இனங்களுக்கிடையிலான பிரச்சினையைத் தூண்டும் வகையில் கதைப்பதுடன் அதனை தீர்ப்பதற்கான வழிசொல்வதைப் போலவும் காட்டிக்கொள்கின்றனர். சொல்லப்போனால் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிவிடுகின்றனர். இதைப் பல இடங்களில் சுட்டிக்காட்டி கேலிச்சித்திரம் வரைந்துள்ளேன்.
இனத்துவ சமரசம் பேசும் எமது இலக்கிய வெளிப்பாடுகளும் பெரும்பான்மை என்ற எண்ணத்தில் இருந்து வழுவாது சமரசம் பேசுவதும் கவனிக்கத்தக்கது. உதாரணமாகஎமது நாட்டு திரைப்படங்களாகட்டும் குறுந்திரைப்படங்களாகட்டும். வடக்கிலிருந்து வரும் தமிழ்ப் பெண்ணும் தெற்கிலிருந்து வரும் ஒரு சிங்கள ஆணும் காதலித்து திருமணம் செய்வதாகத்தான் காட்டப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதிக்க எண்ணம் நிலைதது நிற்பதற்காக வழியாகத்தான் அது அமைகிறது. சாதாரணமாக பொழுது போக்கிற்காகப் பார்க்கின்ற ஒரு விடயத்தில் கூட இவர்கள் மத்தியில் சம சந்தர்ப்பத்தினைக் கொண்டு வர முடியவில்லை. இவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளேன். மற்றையவரின் வலியை புரிந்து கொள்ளாத வரை நல்லிணக்கம் என்ற ஒன்றை எமது நாட்டில் அல்ல சர்வதேச ரீதியிலும் ஏற்படுத்த முடியாது.

 

/

“உண்மையில் உலக நாடுகளின் அரசியலும் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை குறைப்பதற்கு மாறாக செயற்படுகின்றது. அதனை விஸ்தரிக்கும் விதமாகவே ஊடகங்கள் செயற்படுகின்றன. இவை அனைத்தும் திட்டமிடப்பட்ட வகையில் செயற்படுகின்ற செயற்படுகவே நான் கருதுகின்றேன். இன்றைய நிலைப்பாட்டில் ஒவ்வொரு நாடுகளும் ஒன்றை ஒன்று போட்டித்தன்மையுடன் பார்க்கும் தன்மை வளர்ந்து விட்டது. இந்நிலைமை மாறவேண்டுமானால் உலகநாடுகள் அனைத்தும் ஒரு ஏற்றுக் கொள்ளக் கூடிய புதியதொரு அரசியல் முறைமையை அமைக்க வேண்டும்” என்கின்றார் அவந்த.