Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தேன் வேட்டை
குடாபொகுண கிராமத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று.

மல்வத்தை காடுகளில் ரீங்காரமிடும் தேனீக்களுக்கு அவர்களது தேன் கூட்டுக்கு பக்கத்தில் ஒழிந்திருப்பது யார் என்பது தெரியாது. தேனிக்கள் நினைக்கின்றன அவற்றால் சேமிக்கப்படுகின்ற தேன் கூடுகளில் பாதுகாப்பாக இருக்கின்றது என்று. குடாபொகுண என்ற கிராமத்தில் வாழும் மக்களது திறமைகளைப் பற்றி அந்த தேனீக்கள் ஒருபோதும் அறிந்ததில்லை.

19.01.2018  |  
பொலநறுவை மாவட்டம்

மிகவும் சாதாரணமான நிலையில் வாழும் இலங்கையர்களைக் கொண்ட ஒரு கிராமம் அது. அவர்களது வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரையில் அதிக செல்வாக்கு செலுத்துவதாக தேன் இருக்கின்றது.

மல்வத்தை காடுகளில் ரீங்காரமிடும் தேனீக்களுக்கு அவர்களது தேன் கூட்டுக்கு பக்கத்தில் ஒழிந்திருப்பது யார் என்பது தெரியாது. தேனிக்கள் நினைக்கின்றன அவற்றால் சேமிக்கப்படுகின்ற தேன் கூடுகளில் பாதுகாப்பாக இருக்கின்றது என்று. குடாபொகுண என்ற கிராமத்தில் வாழும் மக்களது திறமைகளைப் பற்றி அந்த தேனீக்கள் ஒருபோதும் அறிந்ததில்லை.

கிரமாத்தவர்கள் பரம்பரை பரம்பரையாக தேன் எங்கிருந்து பெறுவது என்பதை அறிந்து வைத்துள்ளனர். இலங்கையில் வட மத்திய பிரதேசமான பொலநறுவை மாவட்டத்தில் ஒரு புறம் மலைச்சாரல்களாலும் மறுபுறம் ஓடும் நதியாலும் இன்னுமொரு புறம் காடுகளாலும் சூழப்பட்டதாக அந்தக் கிரமம் அமைந்திருக்கின்றது. பல மதங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்களாக அவர்கள் இங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தொழிலால் ஒன்றுபட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களது பிரதான தொழில்களாக இருப்பவை, பிரம்புக் கூடை, பெட்டி இழைப்பது, மீன்பிடித் தொழில், தேன் எடுப்பது என்பவையாகும்.

குடாபொகுன கிராமத்தில் வசிக்கும் மிகவும் மூத்தவரான செல்வநாயகம்

“ஏப்ரில் மாதம் நாங்கள் தேன் சேகரிப்பதற்காக காட்டிற்கு போவோம்” என்று குடாபொகுன கிராமத்தில் வசிக்கும் மிகவும் மூத்தவரான செல்வநாயகம் கூறுகின்றார். தேன் சேகரிப்பதற்கு தேவையான வாளி, கைக் கோடரி, தேன் கூட்டிற்குள் புகையை ஏற்படுத்தவதற்காக சுருட்டு அல்லது சிகரட் என்பவற்றையும் உடன் எடுத்துக்கொண்டு காட்டிற்கு சென்றால் அங்கு சில சமயங்களில் ஒருநாள் இரவு தங்க வேண்டியும் ஏற்படுகின்றது. இரண்டு அல்லது மூன்று தேன் கூடுகள் கிடைத்துவிட்டால் ஏழு அல்லது எட்டு போத்தல்கள் அளவில் தேன் கிடைக்கும். அன்றைய நாளைக்கு அது போதுமானதாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குடாபொகுன கிராமவாசிகளில் சிலர் காட்டில் பல நாட்கள் தங்குபவர்களாகவும் இருக்கின்றனர். ஆனாலும் வன பரிபாலன அதிகாரிகள் இந்தக் கிரமத்தவர்களது தொழிலை அனுமதிப்பதில்லை. ஆனாலும் அவர்கள் அதிகாரிகளது கண்ணில் படாமல் இந்த வேலையைச் செய்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் தேன் கிடைக்கும் வரையில் பல நாட்கள் காட்டில் தங்க வேண்டி ஏற்படுவதால் சிறிய கூடாரங்;களை அமைத்து அல்லது மரங்களுக்கு கீழ் பாதுகாப்பை ஏற்படுத்தி தங்குகின்றனர். அத்தகைய சந்தர்ப்பங்களில் தீப்பெட்டி, அரிசி மற்றும் சமையலுக்கு தேவையான பலசரக்குப்; பொருட்கள் என்பவற்றையும் உடன் எடுத்து செல்கின்றனர்.

“காட்டில் உள்ள நீரோடையில் மீன் பிடித்து சமைப்பதோடு கிழங்கு வகைகளையும் சமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். அவ்வாறு எதையாவது சமைத்தால் அதுதான் சாப்பாடு” என்று செல்வநாயகம் கூறுகின்றார்.

மிகவும் கடினமான வேலையாக அமைவது காட்டில் தேன் கூடுகளை கண்டு பிடிப்பதாகும். காட்டில் அலைந்து திரிவதோடு மலர்கள் மலர்ந்துள்ள இடங்களில் அமர்ந்து அங்கு வரும் தேனீக்களது ரீங்கார ஓசையை தேடிக்கொண்டிருப்போம். அந்த ஓசை கேட்டால் தேன் கூடு இருக்கும் என்று கருதும் திசைக்கு கூட்டை கண்டு பிடிக்கும் வரையில் நடந்து திரிய வேண்டும். தேன் கூட்டை கண்டுபிடித்து விட்டால் அந்த கூட்டிற்குள் இருக்கும் தேனீக்களை விரட்ட சுருட்டு அல்லது சிகரட் புகையை செலுத்துவோம். அதன் மூலம் தேனீக்கள் பறந்து வெளியே சன்றுவிட்டால் எங்களுக்குத்தான் வெற்றி. எங்கள் நோக்கமும் தேவையும் நிறைவேறிவிட்டது என்றே கூறலாம்.

/

அத்துடன் தேன் கூட்டம் மாலையில் தேன் எடுத்துக் கொண்டு ரீங்காரமிட்டவாறு பறந்து செல்வதை அவதானித்து அந்த திசையில் நாமும் நடந்து சென்று தேன் கூட்டடை கண்டு பிடித்து தேன் எடுப்பதை எமது சந்ததியினர் வழக்கமாக கொண்டுள்ளனர் என்று மற்றுமொரு கிராமவாசியான யோகேஸ்வரன் கூறுகின்றார். அவ்வாறு தேன் கூட்டை கண்டு பிடித்தால் நாங்கள் அந்த தேன் கூடு இருக்கின்ற மரத்தடியில் இரவில் உறங்கி அதிகாலையில் தேனீக்கள் பறந்து சென்றவுடன் தேனை சேகரித்து எடுப்போம்.

இந்த தொழிலில் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் ஈடுபடுகின்றனர்.

“மீன்பிடித்தலும் தேன் எடுப்பதும் மரபு ரீதியான தொழிலாகும்” என்று மரங்களில் ஏறி தேனீக்களை விரட்டி தேன் எடுக்கும் கிராமவாசியான சரஸ்வதி இந்திராணி என்ற பெண் கூறுகின்றார். அவர் திருமணம் முடிப்பதற்கு முன்னர் தாய் மற்றும் தந்தையுடன் இந்த தொழிலை செய்து வந்ததோடு திருமணத்தின் பின்னர் கணவனுடன் அதே தொழிலை செய்வதாகவும் தெரிவிக்கின்றார்.

“முன்னைய சந்ததியினர் பெண்களை திருமணம் முடித்து கொடுக்கும்போது சீதனம் கொடுக்கவில்லை. ஆனாலும் தேன் பரிகரிக்க தெரிந்த பெண்ணே சிறந்த சீதனமாகும்” என்று இந்திராணி கூறுகின்றார்.

ஓகஸ்ட்; மாதமாகும் போது காட்டில் தேன் எடுக்கும் வேலைகள் முடிவடைந்து விடுவதால் அதன் பின்னர் தொழிலாக செய்வது மீன் பிடித் தொழிலையாகும்.

கிராம வாழ்க்கையின் முக்கியமான அம்சமாக அமைவது தேன் சேகரிப்பதாகும். அதிகமான கிராமவாசிகள் வாழ்ந்து வருவது அல்லது குடித்தனம் நடத்துவது மிகவும் சாதாரணமாக கட்டப்பட்ட கூரடாரங்களிலாகும். அவர்களது வாழ்க்கையில் தனித்துவம் பேணப்படுவதில்லை. மிகவும் கஷ்டமான வாழ்க்கை. திருமணம் முடித்த பெண்கள் கணவனுடன் தேன் எடுப்பதற்காக காட்டிற்கு சென்று திரும்புவதாயின் அது ஒரு தனியான இனிமையான வாழ்க்கைதான்.

இந்த கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால் இறந்த பூடவுடலின் உதட்டில் தேன் வைப்பது ஒரு மரபாக இருந்து வருகின்றனது. புதிதாக பிறக்கும் குழந்தையின் நாக்கிலும் தேன் தடவுவது மரபாக இருந்து வருகின்றது. அவர்களது கடவுளுக்கு வைத்து பூஜிக்கும் மிகவும் விருப்பமான பொருளும் தேன் ஆகும்.