Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கால்பந்து நட்சத்திரம்
நாங்கள் பலவற்றை இழந்தோம், நிறையப் பாதிப்புக்குள்ளானோம், எனினும் ….

“எங்களது இருப்பிடத்தை அந்த கும்பல் சுற்றிவைத்த போது நாம் செய்வதறியாது, திகைத்து நின்றோம். சிங்களவர்கள் எம்மை துன்புறுத்திய காலம் அது. ஆயினும் எம்மை பாதுகாத்தவர்களும் சிங்களவர்களே என்பதை மறக்க முடியாது”. என்கிறார் ராசையா.

26.01.2018  |  
அனுராதபுரம் மாவட்டம்
Rasaiah in front of his barbershop today.

அனுராதபுரத்தில் இருந்து ஒரு முன்னாள் கால்பந்து நட்சத்திரம் உள்நாட்டுப் போரின்போது தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது அவரது சொந்த ஊருக்கு திரும்பியுள்ள அவர், தான் உயிர்பிழைப்பதற்கு அவரது விளையாட்டுத்துறை எவ்வாறு உதவியது என்பதை விளக்குகிறார்.

கிருஷ்ண பிள்ளை தேவசகாயம் ஒரு காலத்தில் தனதூரில் மிகவும் பிரபல்யமான கால்பந்தாட்ட வீரர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தில், புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் கல்லூரியில் கால்பந்தாட்ட  அணியின் கேப்டனாக இருந்தார்.

ராசையா ஒரு காலத்தில் தனதூரில் மிகவும் பிரபல்யமான கால்பந்தாட்ட வீரர்.

ஊரில் எல்லோரும் இவரை, ராசையா என்ற இவரது புனைப்பெயர் பெயர்கொண்டே அழைப்பர். இவர் பயிற்சியாளராக ஆகு முன், பிரதேச கால்பந்தாட்ட அணிக்கு தலைமை வகித்துள்ளார், அதேநேரம் தேசிய ரீதியிலும் விளையாடியுள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் யுத்தம் அனைத்தையும் மாற்றிவிட்டிருந்தது. அணியிலிருந்து பலர், அபயம் தேடி, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்தனர். ராசையா அவ்வாறு செய்யவில்லை.

ராசையாவின் தந்தை ஒரு வைத்தியர் அனுராதபுரத்தில் அவர் ஒரு சிகையலங்கார நிலையத்தையும்( சலூனையும்) நடத்திவந்தார். இங்கு எந்த பேதமும் இன்றி அனைவரும் வந்து சென்றனர் என்று ராசையா கூறுகின்றார்.

“அப்போதெல்லாம் கால்பந்தாட்டமென்றால் எனக்கு உயிர்” என்று ராசையா ஞாபகப்படுத்தினார்.

“1985 ஆம் ஆண்டில், ஆயுதமேந்திய குழுவொன்று எமது சலூனுக்குள் புகுந்தது. அப்போது சிங்கள நண்பர்களால் உயிர் காக்கப்பட்டோம்” என்று ராசையா விளக்கினார். ராசையா கால்பந்தாட்ட போட்டியொன்றின்போது சந்தித்த சீதா என்ற சிங்கள பெண்ணை அப்போது மணமுடித்திருந்தார்.

“ஒருமுறை நான் எனது நண்பர்கள் சிலருடன் விளையாட்டுப் போட்டியொன்றை பார்க்கச் சென்றேன், அங்குதான் இவரை சந்தித்தேன். இவர் மிகவும் நல்லவர், பிரபல்யமானவரும் கூட. அவரது நற்குணங்களை அறிந்து நான் அவரை ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார் ராசையாவின் மனைவியான சீதா ரஞ்சனி குணவர்த்தன.

1985 ஆம் ஆண்டில், சிங்கள நண்பர்கள சிலர் இவரது குடும்பத்தை பாதுகாப்பான ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றதுடன், அவர்களை இராணுவ முகாமுக்கு செல்லவும்   உதவினர்.

“எங்களது இருப்பிடத்தை அந்த கும்பல் சுற்றிவைத்த போது நாம் செய்வதறியாது, திகைத்து நின்றோம். சிங்களவர்கள் எம்மை துன்புறுத்திய காலம் அது. ஆயினும் எம்மை பாதுகாத்தவர்களும் சிங்களவர்களே என்பதை மறக்க முடியாது”. என்கிறார் ராசையா.

ராசையாவும் சீதாவும் மகனும்.

அவர்கள் குடும்பத்தோடு தப்பி ஓடியிருந்தபோதும், ராசையாவை  ஒரு கால்பந்தாட்ட வீரன் என்று அடையாளம் கண்ட ராணுவ அதிகாரி ஒருவர், அரச அதிகாரிகளின் துணையோடு அவர்களுக்கென ஒரு வதிவிடத்தை அமைத்துக் கொடுத்தார். பல வாரங்களாக காட்டில் படுத்துறங்கியவர்களுக்கு இப்போது ஓர் இல்லம் உள்ளது.

இறுதியில் ராசையாவும் சீதாவும் – இவர்களுக்கு இப்போது இரண்டு பிள்ளைகள் இருந்தனர் – மட்டக்களப்பு வந்து சேர்ந்தனர். ராசையா அங்கு  சலூன் ஒன்றை  அமைத்து வாழ்க்கையை ஓட்டிவந்தார். இதன்போது, ராசையா ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று அறிந்துகொண்ட உள்ளூர் விளையாட்டுக் கழகம், அவரை தம் பயிற்சியாளராக இணைத்துக் கொண்டது. ராசையா அதில் விளையாடவும் செய்தார்.

1991 ஆம் ஆண்டில், ராசையா குடும்பத்தினர் மீண்டும் அனுராதபுரத்தில் குடியேறினர். அவர்கள் விட்டுச் சென்ற எதுவுமே அப்போது அங்கிருக்கவில்லை. தம் தொழிலை மீண்டும் ஆரம்பிக்க முடியாதிருந்த ராசையாவுக்கு, மறுபடியும் சிங்கள நண்பர்கள் உதவினர். இன்று ராசய்யாவின் முன்னேற்றம் அனுராதபுரம் விமான நிலைய வீதியில் மற்றுமொரு சலூன் திறக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இப்போது அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடைசிப் பிள்ளை அனுராதபுரம் திரும்பிய பிறகு கிடைத்தது.

“நாங்கள் பலவற்றை இழந்தோம், நிறையப் பாதிப்புக்குள்ளானோம், எனினும் நாம் வெறுப்பை வளர்த்துக்கொள்ளவில்லை. எம்முடன் கோபமாக இருந்தோர் மீதும் நாம் பொறுமையும் இரக்கமும் கொண்டோம்; நம்மைத் தொந்தரவு செய்த்தகவர்கள் எவரையும் நாம் வெறுக்கவில்லை. இப்போது எமது பிள்ளைகள் ஒன்றாக வளர்ந்து வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் ராசையா.