Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கேள்வி கேட்பவர்கள் வெட்கப்படவேண்டும்.
“அரசியலில் ஈடுபடத் தகுதியான பெண்கள் உள்ளனரா”?

இலங்கை முழுவதற்கும் 8.000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 2000 பேர் பெண்களாக இருக்க வேண்டும்.

06.02.2018  |  
கொழும்பு மாவட்டம்

2016 ஆம் ஆண்டு அரசாங்கம் நிறைவேற்றியுள்ள சட்டத்திற்கமைய உள்ளுராட்சி சபைகளுக்கான அபேட்சகர்களில் கால்வாசிப்பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இந்தமாதம் நடைபெறவுள்ள தேர்தல் புதிய தேர்தல் முறை மாற்றத்திற்கமைய நடைபெற இருக்கின்றது. தொகுதிவாரி முறையிலும் விகிதாசார முறையின் அடிப்படையிலுமே புதிய தேர்தல் நடைபெற இருக்கின்றது.

இந்த யதார்த்த நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக பெண்கள் விடயம் தொடர்பான கொழும்பை மையமாகக் கொண்ட மகளிர் அமைப்பின் பெண்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளரான குமுதினி சாமுவெலை த கட்டமரானுக்காக சந்தித்தோம்.

த கட்டமரான் : உள்ளுராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களுள் கால்வாசி 
பெண்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது. 
ஆனாலும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கூறுகையில் இந்த 
விடயமானது ஒரு கஷ்டமான காரியமாகும் என்று தெரிவித்துள்ளார்

குமுதினி சாமுவெல் : பழைய முறையின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் முதலாவது முறையில் அல்லது முதல் கட்டமாக வெற்றி பெற்றவுடன் 10 சத வீதம் பெண்களை நியமிக்க வேண்டும். பெண்கள் போட்டியிடும் பகுதிகளில் வெற்றி பெறுவார்களா என்பதை கூறுவது மிகவும் கஷ்டாக இருக்கின்றது.

குமுதினி சாமுவெல்

அப்படியாயின் விகிதாசாரப் பிரதிநிதித்துவப் பட்டியலின் நிலை என்ன. எல்லா அரசியல் கட்சிகளும் அவர்களது விகிதாசாரப் பிரதிநிதித்துவ பட்டியலில் அரைவாசியை பெண்களைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவது பட்டியலில் ஆசனங்கள் உறுதியானவுடன் விகிதாசார பிரதிநிதித்துவத்தை பயன்படுத்தி இரண்டாவது பட்டியலில் இருந்து பெண்களை உட்படுத்த முடியும்.

த கட்டமரான் : ஆனால் கட்சிகள் பெண்களை நியமிக்க இணங்காவிட்டால் 
அரசியல் ரீதியான நெருக்கடி ஒன்று ஏற்படுமா?

குமுதினி சாமுவெல் :  தற்போதைய நிலையில் இரண்டாவது பட்டியலான விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்படி ஆண்களை நியமிப்பதற்கான அதிகமான வாய்ப்பு இருந்து வருகின்றது. ஆனாலும் அரசியல் கட்சிகள் இந்த புதிய சட்டத்தை விரும்பவில்லை என்று கூற முடியாது. அவர்கள் அதனை நிறைவேற்ற வேண்டும். அது சட்டமாகும்.

அங்கே இரண்டு விதமான நிலைமைகள் ஏற்படலாம் சிறிய கட்சிகள் ஒரு அல்லது இரண்டு ஆசனங்களை வெற்றி பெற்றால் அப்போது ஒரு கஷ்டமான நிலை ஏற்படலாம்.

த கட்டமரான் : அதைச் சற்று விரிவாக விளக்க முடியுமா?

குமுதினி சாமுவெல் : இலங்கை முழுவதற்கும் 8.000 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 2000 பேர் பெண்களாக இருக்க வேண்டும். சில பிரதேசங்களில் மிகவும் சிறிய அளவிலான சமூகங்களைக் கொண்ட பகுதிகளில் இந்த விடயம் கடினமானதாகும். சிறிய கட்சிகள் உள்ள இடங்களிலும் அவை வெற்றி பெற்றால் இது கடினமாக விடயமாகும். ஆனாலும் குறிப்பாக பெரிய பிரதேசங்களான கொழும்பு பேன்ற இடங்களில் 25 வீதம் பெண்களை உள்ளடக்க முடியும்.

த கட்டமரான் : உள்ளுர் அரசியலில் ஈடுபடுத்தும் வகையில் 
உண்மையாகவே போதுமான அளவு தகுதியான பெண்கள் இருக்கின்றனரா 
என்ற கேள்வி விமர்சகர்கள் மூலம் எழுப்பப்படுகின்றது.

குமுதினி சாமுவெல் : நான் இந்த கருத்தை முற்றாக நிரகரிக்கின்றேன். அனைவரும் அயிரக்காணக்கான பெண்களைப் பற்றி பேசுகின்றனர். ஆனாலும் அது அவ்வளவு இலகுவான காரியமாக இல்லை. கிரம சபையில் 12 அங்கத்தவர்களே இருக்கலாம். அப்போது பட்டியலின் அடிப்படையில் தேட வேண்டியது 03 பெண்களையாகும். ஒரு அரசியல் கட்சி கிரமம் ஒன்றில் தகுதியான 03 பெண்கள் இல்லை என்று கூறுவதானால் அவர்களது கருத்து தொடர்பாக அவர்களே வெட்கப்பட வேண்டும். அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்.

த கட்டமரான் : பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதானது ஏற்கனவே 
அரசியலில் இருந்து வருகின்ற மற்றொரு பெரிய பிரச்சினையான 
ஆண் ஆதிகத்தையும் குடும்ப ஆதிக்கத்தையும் உடைப்பதற்கு போதுமான 
செல்வாக்கை செலுத்தாது என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

சாமுவெல் :  நீங்கள் உள்நாட்டு அரசியலை அவதானித்தால் இந்த விடயம் மிகவும் தெளிவானதாக இருக்கின்றது. பெரும்பாலான அரசியல் கட்சிகளால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் ஆண்களாகவும் மற்றும் ஒரே அரசியல்வாதியின் உறவினர்களாகவும் உள்ளனர். மற்றொரு முக்கியமான மோச மான விடயமாக இருந்துவருவது சில அரசியல்வாதிகள் தேர்தலில் கட்சிகளுக்கு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கு இலகுவாகும் வகையில் ஏற்கனவே பிரபல்ய மான ஆண்களை அல்லது பெண்களை அறிமுகம் செய்கின்றனர். அவ்வாறு அறிமுகம் செய்திருப்பவர்களை அவதானிக்கையில் அவர்களுக்கு தேவையான அடிப்படைத் தகைமை கூட இல்லாத நிலை காணப்படுகின்றது. ஏற்கனவே அரசியலில் பதவிகளில் இருப்பவர்களும் அதிகமானவர்களுக்கு இவ்வாறான எந்த தகைமையும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இவர்களை தேர்தலில் வாக்களித்து தெரிவு செய்யும் போது நாங்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

உங்களது வினாவுக்கு மீண்டும் செல்வாதாயின் சில இடங்களில் ஏற்கனவே குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்துள்ளனர். அதிகமான சந்தர்ப்பங்களில் இது நடக்கின்ற விடயமாகும். உள்நாட்டு அரசிலில் நிலவும் இந்த மோசமான நிலையை மாற்றியமைக்க அரசியல் கட்சிகள் போராட முன்வர வேண்டும்.