Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பேராசிரியர் அ. சண்முகதாஸ் & கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
யப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்புண்டு !!!

தமிழ் மொழி இந்திய அரசின் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற ஒரு பண்டைய மொழியாகும். இது இந்தியாவின் பல்வேறு மொழிக் குடும்பங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. தென்னிந்திய மொழிகளான தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளின் மூலமொழியாகவும் கருதப்படுகின்றது. வடமொழி, கிரேக்க மொழிகளுடன் தொடர்புடையதாகவும் இருந்திருக்கின்றது. இதே போன்று தமிழ் மொழி ஜப்பானிய மொழியுடன் தொடர்புடையது என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணப்பல்லைக்கழகத்தின் முன்னாள் தமிழ்துறை தலைவரும் பேராசிரியருமான அ. சண்மகதாஸ் மற்றும் அவரது துணைவியார் […]

17.02.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

தமிழ் மொழி இந்திய அரசின் செம்மொழி அந்தஸ்தைப் பெற்ற ஒரு பண்டைய மொழியாகும். இது இந்தியாவின் பல்வேறு மொழிக் குடும்பங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது. தென்னிந்திய மொழிகளான தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளின் மூலமொழியாகவும் கருதப்படுகின்றது. வடமொழி, கிரேக்க மொழிகளுடன் தொடர்புடையதாகவும் இருந்திருக்கின்றது. இதே போன்று தமிழ் மொழி ஜப்பானிய மொழியுடன் தொடர்புடையது என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணப்பல்லைக்கழகத்தின் முன்னாள் தமிழ்துறை தலைவரும் பேராசிரியருமான அ. சண்மகதாஸ் மற்றும் அவரது துணைவியார் கலாநிதி மனோன்மணி சணமுகதாஸ் ஆகியோராவர். இவர்களுடன் அவர்களின் தமிழ் யப்பானிய மொழி ஆய்வுகள் தொடர்பாக கட்டுமரம் சஞ்சிகைக்காக உரையாடினோம்.

/
“1981ம் ஆண்டு மதுரையிலே நடைபெற்ற ஐந்தாவது உலக தமிழராட்சி மாநாட்டுக்கு நானும் எனது துணைவியாரும் மதுரைக்குச் சென்றிருந்தோம். அங்கே ஒரு ஜப்பானிய பேராசிரியர் தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் தொடர்புண்டு என்று ஏறக்குறைய ஐந்நூறு சொற்களையும் அவற்றினுடைய ஒலி அமைப்புத் தொடர்பிலும்; சொற்களின் பொருள் தொடர்பிலும் மற்றும் அவற்றின் ஒற்றுமைப்பாட்டையும் எடுத்துக்கூறி இந்த மாநாட்டிலே ஒரு கட்டுரை படித்துக்கொண்டிருந்தார். அந்த அமர்வில் நாம் இருந்தோம் தமிழ் ஆய்வுத் துறையின் முக்கியமானவரான பேராசிரியர் கைலாசபதி அருகிலே இருந்தார் அவர் எங்களைப் பார்த்து‘இவர் சொல்லுகின்ற விடயத்தை நீங்கள் ஏன் ஆய்வு செய்ககூடாது? ஏன்று கேட்டார.; அதிலிருந்து எமது மனதிலே இவர் கூறுவது உண்மை தானா? அப்படியென்றால் அது பற்றி நாங்கள் ஆய்வு செய்யலாமா? ஏன்ற எண்ணம் தோன்றியது. இது தான் எமக்கு யப்பான் மொழி மீதான ஆய்வுக்கான அடிப்படையாக அமைந்தது” என்கிறார் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள்.

இதன் பின்னர் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நைஜீரியா நாட்டின் பல்கலைகழகம் ஒன்றிற்கு மொழியியற்துறைக்கு வருகைதரு பேராசிரியராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது கொழும்பு யப்பான் நிறுவகத்தின் புலமைப்பரிசில் கிடைக்கிறது. பேராசிரியர் சுசுனு மோனோ என்ற ஜப்பானிய பேராசிரியருடன் இணைந்து ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப்யன்படுத்தி தம்பதிகளாக ஐப்பான் சென்று தமிழ்மொழிக்கும் யாப்பான் மொழிக்கும் இடையினால தொடர்பு தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருந்தார்கள். இவர்கள் இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு முன்னர் யப்பான் பேராசிரிரான சுகுனு மோனோ அவர்கள் ஜப்பானிய மொழிக்கும் அவுஸ்ரேலியாவின் பழங்குடி மக்களினுடைய மொழிக்கும் தொடர்பு பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்தார். பின்னர் கொரிய மொழிக்கும் யப்பானிய மொழிக்குமான தொடர்பு பற்றி ஆய்வு செய்திருந்தார். இதன் பின்னர் தமிழ் மொழிக்கும் யப்பான் மொழிக்கும் இடையிலான தொடர்பு பற்றிய ஆய்வை ஆரம்பித்தார். அவருக்கு போதியளவு தரவுகள் கிடைக்கவில்லை. அப்போது பெரும்பாலான இந்திய ஆய்வாளர் அவரை தெலுங்கு மொழியுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும்படி கேட்டிருந்தார்கள். ஆனால் அவர் தமிழ் மொழியுடன் தொடர்பு படுத்தி தனது ஆய்வுகளைச் ஆரம்பித்திருந்தார். யப்பானியப் பேராசிரியரான சுசுனு மோனோ தமிழ் மொழியை இந்தியாவுக்கு சென்று பேராசிரியர் பொன் கோதண்டராமனிடம் கற்றார் பினனர் பல தமிழ் அறிஞர்களைச் சந்தித்து தமிழறிவை வளர்த்துக் கொண்டார். இதே வேளை தமிழ் தைப் பொங்கல் விழாவை வீடியோ பதிவு செய்து ஜப்பானில் தொலைக்காட்சியில் காண்பித்தார். தமிழ் தைப்பொங்கள் நிகழ்வோடு ஜப்பானில் நிகழ்வை ஒப்பிட்டு காட்டிய போது அது தொடர்பான ஒரு பரபரப்பு யப்பானில் ஏற்பட்டது. இ;ந்த ஒரு சூழ்நிலையில் தான் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தம்பதியினர் யப்ப