Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வித்தியா படுகொலை அறிக்கையிடலை அடியொற்றிய பார்வை
வன்முறைகளையும் படுகொலைகளையும் அறிக்கையிடும் போது ஊடக தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும்??

/இலங்கை வடபகுதி புங்குடுதீவு என்ற இடத்தில் 2015மே 13 திகதி அன்று பாடசாலை மாணவியான 18 வயதான வித்தியா சிவலோகநாதன் பாடசாலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார். இது ஒரே ஊரைச்சேர்ந்த அவரது உறவினர்களால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலையென விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தது. குற்றமிழைத்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. / இந்தப்படுகொலை நடைபெற்ற போது மக்கள் தமது எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியிருந்தனர். இதன் ஒரு கட்டமாக நீதித்துறை மற்றும் பொலிஸ் மீது மக்கள் […]

17.02.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

/இலங்கை வடபகுதி புங்குடுதீவு என்ற இடத்தில் 2015மே 13 திகதி அன்று பாடசாலை மாணவியான 18 வயதான வித்தியா சிவலோகநாதன் பாடசாலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார். இது ஒரே ஊரைச்சேர்ந்த அவரது உறவினர்களால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலையென விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தது. குற்றமிழைத்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

/
இந்தப்படுகொலை நடைபெற்ற போது மக்கள் தமது எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியிருந்தனர். இதன் ஒரு கட்டமாக நீதித்துறை மற்றும் பொலிஸ் மீது மக்கள் நம்பிக்கையிழந்து காணப்பட்டனர். இதனால் கடையடைப்பு ஹர்த்தால் என்று தமது எதிர்ப்புக்களைக் காட்டியிருந்தார்கள் இதனொரு கட்டமாக யாழ்ப்பாண மேல் நீதி மன்ற வளாகத்தை மக்கள் தாக்கி சேதப்படுத்தியிருந்தனர். இதுவும் வரலாற்றின் முக்கியமான பதிவாக நோக்கப்பட்டது. நீதிமன்றத்தைத் தாக்கியதற்காக பாடசாலை மாணவர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தப்படுகொலை ஆபாசப்படம் தயாரிக்கும் மார்பியாக் சர்வதேச கும்பலொன்றின் வழி நடத்தலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தது. வுழக்கின் முக்கியத்துவம் கருதி இதனை றயலட்பார் முறையில் விசாரித்து தீர்பளிக்க இலங்கை நீதி மன்ற சேவை தீர்மானித்திருந்தது. இதற்காக மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்பாயம் ஒன்று நியமிக்கப்பட்டு வழக்கு நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இது திறந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்காகும்.

/
இந்த வழக்கு நாடளாவியரீதியில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. பொது மக்கள் இது பற்றி அறியும் ஆர்வ மேலீட்டில் காணப்பட்டார்கள். இதனால் ஊடகங்கள் இதனை அறிக்கையிடுவதில் அதீத ஆர்வங்காட்டியிருந்தன. ஓவ்வொரு நாள் விசாரணைகளும் ஊடகங்களில் அப்படியே அச்சொட்டாக வெளிவந்தன. இந்த அறிக்கையிடல் தொடர்பாக பொது அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் சமூகப்பணியாளர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் எனப்பலரும் அதிர்ப்தி கொண்டிருந்தனர்.வித்தியா கொலைவழக்கு தொடர்பான அறிக்கையிடலில் ஊடக தர்மம் நிலை நாட்டப்படவில்லையென்பதும். அடிப்படை ஊடக விழுமியங்கள் பின்பற்றப்படவில்லையென்பதும் வியப்பளிப்பதாக இருந்தது.

குறிப்பாக பதில் சட்டமா அதிபர் டபிள்யூ.டீ.லிவேறா வழக்கின் ஆரம்ப உரையை நிகழ்த்திய போது தெரிவித்த விடயங்களில் தணிக்கை செய்யப்பட வேண்டிய விடயங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.இது மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்ததைக் காணமுடிந்தது.
உதாரணத்திற்கு ஒரு விடயத்தை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
“வித்தியா சடலத்தை உடற்கூற்று சோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் அவருடைய யோனி சவ்விலும் அதனைச்சூழ உள்ள பகுதிகளிலும் பல காயங்கள் இருப்பதை இனங்கண்டுள்ளார்.பல தடைவை மீண்டும் மீண்டும் யோனி வழியாக ஆணுறுப்பு உட்செலுத்தப்பட்டதையும் இனங்கண்டள்ளார்” என்று யாழ் தினக்குரல் பத்திரிகையின் 29.06.2017 அன்று பக்04 வெளிவந்த செய்தியில் குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிடலாம்.
ஊடகங்கள் மக்களுக்கு தகவல்களை அறித்தல், அறிவூட்டல் ஆகிய பணிகளை மேற்கொள்கின்றன. ஊடகவியலாளன் தகவல்களைச் சேகரித்து அவற்றை ஆராய்ந்து தெரிவு செய்து விநியோகிக்கிறான். இந்தத் தெரிவில் சமூகஅக்கறை இருக்கிறது. இருந்திருக்கிறது. இருக்கவேண்டும். இதுவே ஊடகதர்மமாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது தவறுகின்ற போது சமூகம் கையறு நிலைக்கு ஆளாவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிலையில் இருந்து மீண்டெழுவதற்கான சாத்தியங்கள் பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.

இது விடயமாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தைச் சேர்ந்த பெண்கள் அபிவிருத்திக்கான மாவட்ட இணைப்;பாளர் ந.உதயனி அவர்களின் குருத்து கவனிக்கத்தக்கது.

“புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பான ஊடக செய்திகள் தர்மத்திற்கு முரணான வகையில் வெளியிடப்படுகின்றன. இது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கூட்டு பாலியல் வல்லுறவு ஒன்று இடம் பெற்று படுகொலை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் சான்றுகள் சாட்சிகள் வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளன எனினும் அதனை பொறுப்புடன் ஊடகங்கள் வெளியிடல் அவசியம். உ+ம்:- கூட்டு வன்புணர்வு இடம்பெற்ற விடயத்தை விபரித்து எழுதுவதை தவிர்த்தல். தனி கூட்டு வன்புணர்வு இடம்பெறுவதற்கான சட்டவியல் தடயங்கள் முன்வைக்கப்பட்டது என்று கூறுதல் சிறப்பு.”

/

ஒரு சமூகப்பிறள்வு நிலையான விடயத்தை ஊடகங்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பது நிகழ்வை முக்கியத்துவப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. குறிப்பாக பத்திரிகைகள் தமது ஏனைய விடயங்களுக்கு கொடக்கின்ற முக்கியத்துவத்திற்கு மாறாக இந்த வழக்குத் தொடரபான விடயங்களுக்கு அதிகளவு பக்ககங்களை ஒதுக்குதன் மூலம் தனது பார்வையாளர்களை இயல்பாகவே சமூகப்பிறள்வு நிலையை நோக்கி கவர்ந்திழுக்கின்றன. இதனால் பத்திரிகைகளும் இலத்திரனியல் ஊடகங்கள் இணைய ஊடகங்கள் அதிகளவு பார்வையாளர்களைக்கவர்ந்திழுக்க முடிவதோடும் வருவாயை அதிகரிக்க முடிகிறது. இவ்வாறான சமூக பிறள்வு நிலைகளை வியாபார நோக்கத்துடன் மட்டுமே பார்க்கப்படுவதை அவதானிக்க முடிகிறது இதுதவிர்க்கப்பட வேண்டும்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த தன்னார்வத் தொண்டுப்பணியாளரான க. பரஞ்சோதி “ஒரு சமூகத்தின் எதிர்கால நன்மை கருதி ஆபாசமான கருத்துக்களையும் சொற்களையும் தணிக்கை செய்வது தர்மமாகும்.”என்று குறிப்பிடுகிறார்
வுpத்தியா கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சமர்க்கப்பட்ட அறிக்கைகள் சாட்சிகள் போன்ற அனைத்து விடயங்களும் பத்திரிகைகளில் விலாவாரியாக வெளியிடப்படுகின்றன. இது வாசிப்பவர்களுக்கு மன உளச்சலைக்கொடுப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒன்று கூடி வாழ்வதான கூட்டுணைந்து செயற்படுவது உறவுகளைப் பேணுவது போன்ற செயற்பாடுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி விரக்தி நிலைக்கு தள்ளுகிறது. இது தவிர்க்கப்பட்டு சமூகக்கட்டமைப்பக்கள் மீது நம்பிக்கையைக்கட்டிவளர்ப்பதான முறையில் பத்திரிகை அறிக்கைகள் அமைவது ஆரோக்கியமான செய்ற்பாடாகக் கொள்ளப்படலாம்.

“ ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் வித்தியா கொலை தொடர்பான செய்திகள் சமூகத்திற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை உணர்ந்து ஊடகங்கள் செயல்பட  வேண்டும். சமூகத்தினை வழிப்படுத்தும் முகமாக இல்லாது சமூகத்தை வதைக்கும் முகமாக செய்திகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் செய்திகள் மக்களை சென்றடைய வேண்டும். அது மேலும் சமூத்தை துன்புறுத்தும் விதமாகவோ மக்களை பிழையான வழிக்கு திசை திருப்புவதாகவோ அமையக்கூடாது. வசனங்களில் தேவையற்ற வர்ணனைகள் ஆபாசங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.”

என்று இது பற்றி சமூக ஆர்வலர்களும் வித்தியா குடும்பத்தினருக்கு பக்கலமாக உள்ளவர்களுமான டு.மயூரி மற்றும் சு.கவிதா ஆகிளோர் தெரிவித்தனர்

/

வித்தியா கொலை ஆபாசப்படத் தாயாரிப்பு மற்றும் சர்வதேச அளவிலான அதன் விற்பனை போன்ற பல கொடுரமான செய்றபாடுகளோடு சம்பந்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதால் இணையவழி ஆபாசப்படங்கள் தொடர்பான விடுப்பார்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்திருப்பது அவதானிக்கப்படுகிறது. இந்த அறிக்கையிடல் ஒருவகையல் ஆபாசப்பட வியாபாரத்தூண்டலுக்கு அடிப்படையாக அமைந்து விடுமோ என்ற அச்ச உணர்வும் சமூகஆர்வலர்களிடையே காணப்படுகின்றது. இதனைத் தவிர்த்ல் சிறந்ததாகும்.

இதனை வலியுறுத்துவதாக கருண்யா மன்றத்தின் பணிப்பாளர் வி.கேசவன் கருத்து அமைந்திருந்தது. “முக்கிய வழக்குகள் நடைபெறும் போது பத்திரிகை தமது விற்பனை எண்ணிக்கையை கருத்தில் கொள்வதை விட தமக்கு இருக்கும் சமூக கடமையை பொறுப்பை கருத்தில் எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடுகிறார்.

“புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை அறிக்ககையிடும் போது ஊடகவியலாளர்களும்இ ஊடகங்களும் ஊடக தர்மத்திற்கு அமைவாகவும் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்காமலும் செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பாலியல் வல்லுறவு எவ்வாறு நடந்தது என்பதை விபரிக்காமல் கண்ணியமான முறையிலும் சுருக்கமாக அறிக்கையிடுமாறு கேட்டக்கொள்கிறேன்.”கு.கௌதமன் (தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரி,மாவட்டசெயலகம்,யாழ்ப்பாணம்) அவர்களின் கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது./

/
மற்றவர்களை துன்புறுத்தி இன்பங்காணுதல் என்பது ஒரு வகையான மனநோயாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளுதல் தவிர்க்கப்படலாம். வுpத்தியா கொலை வழக்கில் விபரிப்புக்களில் காணப்படும் வன்கொடுமை பகிரங்கப்படுத்தப்படுகின்ற போது அது ஒரு வகையில் புதிதாக அறிகின்ற விடயமாக மனதில் ஆழப்பதிகினற் விடயமாக அமைவது இளைஞர்களை நன்னிலை நோக்கி வழிப்படுத்தத் தடையாக அமையும் என்பதையும் உணரவேண்டும்.

ஊடக தர்மத்தின் பிரகாரம் பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்பதாக ஊடக அறிக்கைகள் அமையக்கூடாதென்பது அடிப்படையாகும். இந்த வழக்கில் நேரடியாக பாதிக்கப்பட்ட வித்தியாவின் கொலையுண்ட காட்சிகள் பிரசுரிக்கப்பட்டது அநாகரிகமான செயலாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போது படங்களுக்குப்பதிலாக நடைபெற்ற சம்பவங்களின் விபரிப்புக்கள் அமைவது பாதிக்கப்பட்டவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும். அதே வேளை வித்தியாவின் பெற்றோர் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் அவமானப்படுத்தப்படுவதற்கும் தலைகுனிவை ஏற்படுத்தவதற்கும் இவை காரணமாக அமைகின்றன. புhதிக்கப்பட்டவர்களின் நலன்கருதி இந்த வகையான அறிக்கையிடலை தவிர்த்துக் கொள்ளுதல் ஊடகங்களின் கடமையாகும்
இதனை விட ஊடக அறிக்கையிடல் காரணமாக வுpத்தியாவின் உறவினர்கள் நடந்த சம்பவத்தை பல தடவைகள் மீள மீள கேட்பதன் மூலம் மன அழுத்தத்திற்கு ஆளாகின்ற வாய்ப்புள்ளது. நீதிமன்றச் செய்றபாடுகளுக்கு சாட்சிகளும் அறிக்கைகளும் அவசியமாகின்ற அதே வேளை அவற்றை பகிரங்கப்படுத்துகின்ற போது பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மனவடுவுக்கு ஆளாகின்ற நிலைமைகiளும் அவதானிக்கப்பட்டுள்ளன.

வுpத்தியா கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பற்றிய முழு விபரங்களும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன. சில நாடுகளில் அமுலிலுள்ளது போன்று சந்தேகநபர்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்ததாக உணரப்படுகின்றது. ஏனெனில் இதில் தொடர்புடைய 12 சந்தேக நபர்களும் குடும்பங்களை உடையவர்கள். குறிப்பாக பெண்கள் சிறுவர்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள். சில ஊடகங்கள் சந்தேக நபர்களின் உறவினர்கள் குடும்பத்தினரை பற்றிய தகவல்களை வெளியிடுவதால் அவர்கள் மனரீதியாகப்பாதிக்கப்பபடுகிறார்கள். அவர்கள் ஆபத்தான சூழலுக்குள்ளுள் தள்ளப்படுகின்றார்கள். இதுவும் ஊடக அறிக்கையிடலில் தவிர்க்கப்பட வேண்டியவையாகின்றன.

“புங்குடுதீவு மாணவியின் கொலைவழக்கு தொடர்பான பத்திரிகை வெளிப்படுத்தல் “ஒட்டு மொத்தமான சமூக நெருக்கீடுகளை சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் வழங்குகின்றது போல் உணர்கின்றேன்” என்று குறிப்பிடுகிறார் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் பு. றஜனி அவர்கள்.

வுpத்தியா கொலை வழக்கில் சாட்சிகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படுவது சாட்சிகளை ஆபத்தான சூழலில் தள்ளுவதாக அமைந்து விடுகின்றது. குறிப்பாக இந்தக் கொலை வழக்கில் சாட்சி சொன்ன பாடசாலை மாணவர்கள் இருவர் தொடர்பான விபரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டது.அந்தச் சிறுவரகளின் பாதுகாப்பு தொர்பான அச்சத்தை சிறுவர்களின் பாதுகாவலர்கள் உணரச்செய்திருப்பதையும் காணமுடிக்கின்றது.

கட்டிளமைப்பருவத்தினர் பலர் வித்தியா கொலை வழக்கு தொடரபான தகவல்களை வாசிக்கின்ற போது பாலியல் தொடர்பு நிலை தொடரபான விடயங்களையும் அறிகின்றார்கள். இந்த வயதில் சரியானமுறையில் நேர்சிந்தனையுடன் அறிமுகமாக வேண்டிய பாலியல் நடத்தைகள் நடத்தை விதிகள் பிழையான பிறள்வான முறையில் அறிமுகமாகின்றன இது ஆரோக்கியமான இளைஞர் சமூகத்துக்கு துணை நிற்பதற்குப்பதிலாக எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும். இதனால் அதிகளவு விபரங்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்கலாம். சுமூக நன்மைகருதி சுய தணிக்கைமுறையை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும்.

வுpத்தியா கொலை வழக்கு சமூக அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. பெண்பிள்ளைகளை வளர்ப்பது மகிவும் கடுனமானது என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. சமூக அச்ச உணர்வைத்தவிர்ப்பதாகவே ஊடக அறிக்கை காணப்பட வேண்டும்.நேர்சிந்தனையை வளர்த்தெடுப்பதற்கான முறையில் ஊடகங்கள் செய்ற்பட வேண்டும்.

ஏதிர்காலம்பற்றி நல்ல விடயங்களை எடுத்தியம்புவதாக ஊடக அறிக்கையிடல் அமைய வேண்டும். டென்மார்க நாட்டில் அறிமுகமாகியிருக்கின்ற கட்டமைப்பு இதழியல் பயன்பாட்டை எமது ஊடகங்களும் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

“வித்தியாவின் சம்பவம் ஊடகங்களின் ஊடாக ஆணாதிக்க சிந்தனையை தூண்டுவதும், விழுமியங்களைக் கொச்சைப்படுத்துவதும், பெண்களுக்கு (சிறுமிகள், பெரியோர்கள்) அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதுமான ஒரு சுழலில் நாம் மிதப்பதாகவே உணர்கிறோம். குறிப்பாக ஊடகங்களின் பேனாக்களின் மைகள் பெண்களை நெருக்கீட்டுக்குள்ளானவராக மாற்றாது ஊடகங்களினுடாக கலாச்சார விழுமியங்களை கட்டி எழுப்பி ஒரு ஆன்மீக உலகத்தை படைக்கும் பேனாக்களின் மைகளாக மாறாதா?” என்று குறிப்பிடுகிறார் சாந்தீக நிறுவனத்தைச் சார்ந்த உளவளத்துணையாளரான ஜீவமுகுந்தன்.

/
கொலைசெய்யப்படுவதற்கான செயல்முறைகள் விளக்கப்படுத்தப்படுவது. கூட்டு வன்புணர்வு பற்றி விபரங்கள் என்பன எதிர்காலத்தில் அவ்வாறான செயல்களை அதிகப்படுத்தவதற்கான வாய்ப்க்களையும் அதிகரிக்கும். தற்கொலை தொடர்பான அறிக்கையிடலில் தற்கொலை எப்படி நடந்தது என்பதை விபரிக்கின்ற போது அது தற்கொலை எண்ணமுடையவர்களைத் தூண்டுவதாக அமைகிறது என்ற ஆய்வறிக்கைகளின் வழி இவ்வாறானவைகள் எதிர்காலத்தில் வன்முறையை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் இவை தவிர்க்கப்பட வேண்டியவையாகின்றன.

இதனையே அறவழிப்போராட்டக் குழுவைச் சார்நத ஏ.பு.தங்கவேல் அவர்கள் வலியுறுத்துகின்றார். “ புங்குடுதீவு மாணவியின் படுகொலை தொடர்பாக நீதிமன்றில் தெரிவிக்கப்படும் சகல விடயங்களையும் பத்திரிகைகளிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளிவருவதன் மூலம் எதிர்காலச் சமூகத்துக்கு எதுவித நன்மையும் ஏற்படமாட்டாது. எதிர்மறையான தாக்கங்களை மட்டுமே கொடுக்கும் ஆகையால் நீதிமன்றில் நடக்கும் விசாரணைதகவல்களை தரப்படுத்தல் செய்து வெளியிடுவதன் மூலம் ஆரோக்கியமான பத்திரிகை தர்மத்தை மேற்கொள்ள முடியும்.”


வித்தியா படுகொலை தொடர்பான அறிக்கையிடலில் இனி இவ்வாறானவொன்று நடைபெறாமல் இருப்பதற்காக ஊடகங்கள் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக இவ்வாறான குற்றங்களுக்கு காணப்படுகின்ற தண்டனை விபரங்கள் தரப்படலாம். ஏதிர்காலத்தில் சமூகக்கட்டமைப்புக்களில் கிராமங்களில் ஏற்படவேண்டிய மாற்றங்கள். ஏதிர்காலத்திட்டமிடல்கள் பற்றிய விவாதங்களை அதிகரிப்பது பயனுள்ளதாக அமையும்.