Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கண்டி கலவர பூமியில்.....
முஸ்லிம்களை பாதுகாத்த பௌத்த தேரர்கள்!

“நாம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முன்­பா­கவும் பாது­காப்பில் ஈடு­பட்டோம். இக் கல­கக்­கா­ரர்­களின் நோக்கம் உடை­மை­களை நாசப்­ப­டுத்­து­வ­தாகும். இப்­ப­கு­தியில் 14 அல்­லது 15 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. அவற்றைக் காப்­பாற்ற எம்மால் முடிந்­துள்­ளது.”

15.03.2018  |  
கண்டி மாவட்டம்
மீவதுர வஜிரநாயக்க நாஹிமி

” எமது பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களைத் தாக்கப் போகிறார்கள் என்று தகவல் கிடைத்தது. நாம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முன்­பா­க வந்து பாதுகாப்பு கடமையில் ஈடு­பட்டோம். இந்தப் ­ப­கு­தியில் 14 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. அவற்றுக்கு ஒரு கல் கூட வீசப்படாது காப்­பாற்ற எம்மால் முடிந்­துள்­ளது. பெரும்­பான்­மை­யி­னரின் பொறுப்பு சிறு­பான்­மை­யி­னரை பாது­காப்­ப­தாகும்” என்கிறார் கண்டி வது­ர­கும்­புர தம்­மா­னந்த தேரர்.

கண்டியில் ஏற்பட்ட கலவரத்தின் போது 17 பள்ளிவாசல்கள் தாக்கி சோமாக்கப்பட்டதாக அங்கிருந்து வந்த  தகவல்கள் கூறின. பொலீஸ் தகவல்கள் நான்கு என்று கூறின. (https://timesofindia.indiatimes.com/world/south-asia/fresh-violence-erupts-in-riot-hit-kandy-pm-divested-of-police-portfolio/articleshow/63220748.cms)

காவி உடை அணிந்த பௌத்த தேரர்கள்தான் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை முன்னின்று வழிநடாத்தினார்கள் என வரும் செய்திகளுக்கு நடுவே அதே காவி உடை அணிந்த தேரர்கள் பலர் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் உயிர் உடைமைகளையும் பாதுகாத்தார்கள் என வரும் செய்திகள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன.

பௌத்தர்கள் எல்லோரும் வன்முறையாளர்கள் அல்லர். பௌத்த பிக்குகள் எல்லோரும் மதவாதத்தைப் போதிப்பவர்களுமல்ல எனும் செய்தியை இந்தக் கலவர நாட்களில் அழுத்திச் சொன்ன ஏராளமானவர்களை நம்மால் காண முடிகிறது. அவர்களில் அதிகம் கவன ஈர்ப்பைப் பெற வேண்டிய மூன்று பௌத்த தேரர்களின் கதைகளை இங்கு தருகிறோம்.

கோம­கொட விகா­ரா­தி­பதி கஹ­கல தம்­மா­னந்த தேரர்

/“அனே அபே ஹாமி­து­ருனே அபிவ பேர­கன்ன. அபே மே தருவோ எக்க அபிட துவன்ன பே” என்று கூறி­ய­வாறு தெல்­தெ­னிய கோம­கொட கிரா­மத்தில் வசித்த முஸ்லிம் குடும்­பங்கள் கடந்த 5 ஆம் திகதி மாலை அச்­சமும் பீதியும் நிரம்­பிய வேளையில் கோம­கொட பன்­ச­லையில் தஞ்சம் கோரி வந்தார்கள்.

பன்­ச­லைக்கு அடைக்­கலம் கோரி வந்த முஸ்லிம் பெண்கள் மத்­தியில் இரு மாத குழந்­தையை கையில் சுமந்து நிற்கும் தாயொ­ரு­வரும் நிற்­பதை கோம­கொட விகா­ரா­தி­பதி கஹ­கல தம்­மா­னந்த தேரர் கண்டார்.

இவர்களை கண்­ட­வுடன் கஹ­கல தம்­மா­னந்த தேரரின் உள்ளம் மனி­த­நே­யத்தால் நிரம்­பிற்று. பன்­ச­லைக்கு ஆத­ரவு தேடி வந்த  முஸ்லிம் குடும்­பங்­களை பன்­சலை மண்­ட­பத்தில் தங்கச் செய்தார். அவர், உட­ன­டி­யாக பிஸ்கட்,தேனீர் வழங்கி உப­ச­ரித்தார்.

கஹகல தம்மானந்த தேரர்

ஆனால், அக்­கு­டும்­பங்­க­ளுக்கு இருந்­தது பசி அல்ல. மரண பயம் என்­பதை உணர்ந்து கொள்­வ­தற்கு தம்­மா­னந்த தேர­ருக்கு நீண்ட நேரம் செல்­ல­வில்லை. எனவே, தேரர்  இக்­கு­டும்­பங்­க­ளுக்கு தங்­கு­வ­தற்­கான இடத்தை பன்­ச­லையில் செய்து கொடுத்­த­துடன் பாய், தலை­யணை மற்றும் தேவை­யான வச­தி­க­ளையும் செய்து கொடுத்தார்.

அது மாத்திரமன்றி தம்­மா­னந்த தேரர், கோம­கொட கிரா­மத்தில் வாழும் சில பௌத்த சகோ­த­ரர்­களை உட­ன­டி­யாக பன்­ச­லைக்கு வரு­மாறு அழைப்பு விடுத்தார்.   அவர்­களும் தேரரின் அழைப்பை ஏற்று அவ­ச­ர­மாக பன்­ச­லைக்கு விரைந்­தனர்.


“எமது கிரா­மத்தில் எவரும் கல­வ­ரத்தில் பங்கு கொள்­ளக்­கூ­டாது. இங்கே பாருங்கள், இந்த இரு மாத பச்­சிளம் குழந்தை வீறிட்டு அழு­கின்­றது. நாங்கள் யாவரும் மனி­தர்கள்.

“எமது கிரா­மத்தில் எவரும் கல­வ­ரத்தில் பங்கு கொள்­ளக்­கூ­டாது. இங்கே பாருங்கள், இந்த இரு மாத பச்­சிளம் குழந்தை வீறிட்டு அழு­கின்­றது. நாங்கள் யாவரும் மனி­தர்கள். சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­களை தாக்­கு­கின்­றனர் என்று முஸ்­லிம்கள் பன்­ச­லையில் தஞ்சம் கோரி வந்­துள்­ளனர். இங்கு வசிக்கும் சிங்­க­ள­வர்­களால் தொந்­த­ரவு ஏற்­படாது என்ற நம்­பிக்­கையால் அவர்கள் இங்கு வந்­துள்­ளனர். இவர்­களை நாம் பாது­காக்க வேண்டும்” என்று தம்­மா­னந்த தேரர் அவர்­க­ளை கேட்டுக் கொண்டார்.

இத­னை­ய­டுத்து, இக்­கு­டும்­பங்­க­ளுக்கு உண­வுக்­கான ஏற்­பா­டு­களை கிரா­ம­வா­சிகள் ஏற்­பாடு செய்­தனர். பசியை விட உயி­ரச்சம் இக்­கு­டும்­பங்­களை வாட்­டி­யது. எனினும் இத்­தே­ரரின் அர­வ­ணைப்புதான் அங்கு மிகைத்தது.  

வது­ர­கும்­புர தம்­மா­னந்த தேரர்

கண்டி திக­னயில் உரு­வெ­டுத்த இன­வாத வன்­செயல் கண்டி மாவட்டம் முழு­வதும் பரவ ஆரம்­பித்த போது சிங்­கள மக்கள் மத்­தியில் பரந்து தெஹி­கம , முறுத்­த­லாவ , குரு­கம பகு­தி­களில் வாழும் முஸ்­லிம்கள் மத்­தியில் பெரும் அச்­சமும் பீதியும் கிளம்­பிற்று. இது எச்­சந்­தர்ப்­பத்­திலும் தமது வீடு­க­ளுக்கும் மதஸ்­தா­ப­னங்­க­ளுக்கும் பரவும் என்றே பீதி­யாகும்.

இச்­சந்­தர்ப்­பத்தில் நிலைவ­ரத்தைப் புரிந்­து­கொண்ட நெல்­லி­கம பௌத்த மத்­தி­யஸ்­தா­னத்தின் ஸ்தாபகர் வது­ர­கும்­புர தம்­மா­னந்த தேரர், பௌத்த குரு­மார்கள் மற்றும் சில சிங்­கள வாலி­பர்­க­ளையும் இணைத்துக் கொண்டு நெல்­லி­கம பகு­தியில் வசிக்கும் முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்­காக களத்தில் இறங்­கினார்.

/

“வெளிப்­பி­ர­தே­சத்தில் இருந்து திட்­ட­மிட்ட குழு­வொன்று இங்கு வந்து தாக்­கு­தல்­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக எங்­க­ளுக்கு  செய்தி கிடைத்­தது. எனவே செவ்­வாய்க்­கி­ழமை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை வரை பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்டோம்” என்று வது­ர­கும்­புர தம்­மா­னந்த தேரர் கூறுகிறார்.  

 

“நான்கு சந்­தர்ப்­பங்­களில் தாக்­கு­தல்கள் மேற்­கொள்ள இன­வா­திகள் முற்­பட்ட போது அவற்றை எம்மால் முறி­ய­டிக்க முடிந்­தது. ஒரு சந்­தர்ப்­பத்தில் அவ­ச­ர­மாக பொலி­ஸாரை அழைத்தோம். அது மட்­டு­மன்றி அவர்கள் ஒன்று சேர்ந்­தி­ருந்த இடத்­திற்குச் சென்று இந்த நாச­கார செயலின் விளை­வு­களை அவர்­க­ளுக்கு எடுத்­துக்­கூறி அந்தக் கூட்டத்தை கலைக்க  முடிந்­தது. ”

“நாம் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு முன்­பா­கவும் பாது­காப்பில் ஈடு­பட்டோம். இக் கல­கக்­கா­ரர்­களின் நோக்கம் உடை­மை­களை நாசப்­ப­டுத்­து­வ­தாகும். இப்­ப­கு­தியில் 14 அல்­லது 15 பள்­ளி­வா­சல்கள் உள்­ளன. அவற்றைக் காப்­பாற்ற எம்மால் முடிந்­துள்­ளது. பெரும்­பான்­மை­யி­னரின் பொறுப்பு சிறு­பான்­மை­யி­னரை பாது­காப்­ப­தாகும் என்­பது எனது கருத்­தாகும். இதனைச் செய்து காட்ட  எனக்கு சந்­தர்ப்பம் கிடைத்­தது. பெற்றோல் குண்­டுகள் மூலம் இரு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆனால் அவை வெற்­றி­ய­ளிக்­க­வில்லை”

“எமக்கு முதல் இரு­நாட்கள் அடிப்­ப­டை­வா­திகள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டனர். ஆனால் வெள்­ளிக்­கி­ழமை நாடு முழு­வதும் முஸ்­லிம்கள் தொழுகை நடாத்­து­வ­தற்கு பாது­காப்பு வழங்க பௌத்த தேரர்கள் முன்­வந்­தமை மகிழ்ச்­சியைத் தரு­கின்­றது”

பாது­காப்பு தரப்­பி­னரின் ஒத்­து­ழைப்­புடன் இத்­த­கைய மத மற்றும் இன­வாத பிரச்­சி­னை­க­ளுக்குத் தற்­கா­லி­க­மாக தீர்வு காண முடி­யு­மா­யினும் பௌத்த மற்றும் முஸ்லிம் தரப்­புக்கள் முன்­வந்து  இத்­த­கைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை மேற்­கொள்ள வேண்டும்.” என்கிறார் வதுரகும்புர தம்மானந்த தேரர்.

மீவ­துர வஜி­ர­நா­யக்க நாஹிமி

கண்டி மாவட்­டத்தில் உடு­நு­வர தொகு­தியில் அமைந்­துள்ள மீவ­ல­தெ­னிய கிராமம் 135 முஸ்­லிம்கள் வசிக்கும் குக்­கி­ரா­ம­மாகும்.  இக்­கி­ரா­மத்தில் நாலா­பு­றமும் பெரும்­பான்மை மக்கள் செறி­வாக வசிக்­கின்­றனர். இம்­மக்கள் பெரும்­பான்மை மக்­க­ளுடன் ஆரம்ப காலம் முதல் நல்­லு­ற­வுடன் வாழ்ந்து வரு­கின்­றனர்.

இப்­பின்­ன­ணியில் இப்­ப­குதி முஸ்­லிம்­களின் அச்சம், பீதி தொடர்­பாக அறிந்து கொண்ட மீவ­ல­தெ­னிய பகுதி கபு­ரா­தெ­னிய டிகிரி போக­ஹ­கொட  ஸ்ரீ சங்­க­ராஜ பிரி­வெனா விகா­ரையின் பிர­தம தேரர் மீவ­துர வஜி­ர­நா­யக்க நாஹிமி, மீவ­ல­தெ­னிய முஸ்­லிம்­களை விகா­ரைக்கு அழைத்தார்.

“நீங்கள் எது­வித அச்­சமும் கொள்ளத் தேவை­யில்லை. உங்கள் பாது­காப்­புக்கு நாங்கள் பொறுப்பு. நாம் மனித நேயத்தை விரும்­பு­ப­வர்கள். இவ்­வி­கா­ரை­யுடன் முஸ்­லிம்கள் நெருக்­க­மான தொடர்பைக் கொண்­டுள்­ளனர்.  இவ்­வி­கா­ரையின் கிணற்றில் வெள்­ளிக்­கி­ழமை நாட்­களில் சிங்­க­ள­வர்களை குளிப்­ப­தற்கு அனு­ம­திப்­ப­தில்லை. ஏனெனில், இக்­கி­ணற்­றுக்கு முஸ்­லிம்கள் வெள்­ளிக்­கி­ழ­மையில் பள்­ளி­வா­ச­லுக்கு செல்ல குளிப்­ப­தற்கு வரு­வதால் அவர்களுக்கு நீர் தேவை என்பதனாலாகும்.  எமது விகா­ரையின் பிக்­கு­க­ளுக்கு மருந்து எடுப்­ப­தற்கு நாம் வைத்­தி­ய­சா­லைக்கு செல்லும் பொது சஹீத் நானாவைத் தான் விகா­ரைக்கு பாது­காப்­புக்கு விட்டுச் செல்வோம்.


“நீங்கள் எது­வித அச்­சமும் கொள்ளத் தேவை­யில்லை. உங்கள் பாது­காப்­புக்கு நாங்கள் பொறுப்பு. நாம் மனித நேயத்தை விரும்­பு­ப­வர்கள். இவ்­வி­கா­ரை­யுடன் முஸ்­லிம்கள் நெருக்­க­மான தொடர்பைக் கொண்­டுள்­ளனர்.

எனவே எங்­க­ளுக்கும் உங்­க­ளுக்கும் இடையில் நெருக்­க­மான தொடர்பு உண்டு. பள்­ளி­வா­சலில் ஜும்ஆ தொழு­கையை நிறை­வேற்ற நாங்கள் பாது­காப்பு வழங்­கு­கின்றோம்” என்று கூறி ஏற்­பா­டு­களை செய்தார். தேரர் ஏற்பாடு செய்து கொடுத்த பாதுகாப்பில் அன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் அச்சமின்றி ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.

கலவரத்தின் அழிவுகள் பற்றி அதிகம் பேசும் இந்தக் கால கட்டத்தில் இவ்வாறான இன மத நல்லுறவுக்கு வித்திடும் கனிவான செய்திகளையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை அல்லவா? வன்முறைகளால் உடைந்து போய்க் கிடக்கும் உள்ளங்களை இவ்வாறான நல்ல செய்திகள் மூலமாக ஒட்டச் செய்யலாமல்லவா?