Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

உயிர் வாழ்வதற்கான வியாபாரம்
பறிபோன காணியை மீளப் பெற்றுக்கொள்வதில் உறுதியாக நிற்கும் பணாமா பெண்

அந்தப் பிரதேசம் மிகவும் செழிப்பானதாக இருப்பதோடு உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையில் அழகானதுமாகும். சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் அவர்களது இந்தக் காணிகள் இராணுவ கட்டப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டவைகளாகும்.

18.03.2018  |  
அம்பாறை மாவட்டம்
Taking a stand, even though the land is not her own.

இலங்கையின் பணாமா பிரதேசவாசிகள் அவர்கள் முன்னர் வாழ்ந்த சொந்தக் காணிகளை இராணுவம் கைப்பற்றியதாக கூறுகின்றனர். அவர்களது இழந்த காணிகளை மீண்டும் கோருகின்றனர். அந்த காணிகளைப் பெறுக்கொள்வதற்காக சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

பாணம் பத்துவ கிராமவாசிகள் கூறுகையில் அவர்களது காணிகளை இராணுவம் திருடிவிட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனாலும் “எங்களது மன உறுதியை யாராலும் திருடிவிட முடியாது. எமது காணிகளை மீண்டும் திருப்பி பெற்றுக்கொள்ளும் வரையில் நாங்கள் இவ்வாறான வாழ்க்கைக்கான உரிமைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்” என்பதாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த காணியை இழந்துள்ள ஒரு பெண் தெரிவிக்கின்றார்.

அவர்களால் குறிப்பிடப்படுகின்ற குறிப்பிட்ட காணிகள் கிழக்கு மாகாணத்தில் தெற்கு கரையோர பகுதியை எல்லையாகக் கொண்டு அமைந்திருக்கின்றது. அந்தப் பிரதேசம் மிகவும் செழிப்பானதாக இருப்பதோடு உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையில் அழகானதுமாகும். சிவில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் அவர்களது இந்தக் காணிகள் இராணுவ கட்டப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்டவைகளாகும். யுத்தம் முடிந்து சமாதானம் மலர்ந்துள்ள நிலையிலும் இன்னும் இந்த காணிகளை இராணுவம் வைத்திருக்கின்றது. காணிகளின் சொந்தக்காரர்கள் சமாதான சூழ்நிலை ஏற்பட்டது முதல் மீளப் பெற்றுக்கொள் வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த காணிகள் இராணுவத்தால் சட்டவிரோதமான முறையில் சுவீகரிக்கப் பட்டவைகளாகும் என்பது இழந்தவர்களது குற்றச்சாட்டாகும். அந்தக் காணிகளில் வாழ்ந்தபோது அவர்கள் துன்புறுத்தப்பட்டதோடு குடியிருந்த வீடுகள் கட்டிடங்களுக்கும் தீவைத்த பின்னர் அவர்களை பலவந்தமாக வெளியேற்றியதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு இராணுவம் கைப்பற்றிக்கொண்ட காணிகளுக்கு வேலி அடித்து உரிமையாளர்கள் உள்ளே போக முடியாதபடி தடைகளை எற்படுத்தி உள்ளனர் என்றும் கிராமவாசிகள் கூறுகின்றனர்.

/

இவ்வாறு காணிகளைப் பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கும் 05 கிராமங்களைச் சேர்ந்த 350 குடும்பங்கள் அவர்களது சொந்த காணிகளில் வாழ்வதற்காக செல்வதென்று உறுதி பூண்டுள்ளனர். ரைகம் வெல என்ற கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்கள் அவர்களது முன்னைய காணிக்குச் சென்று கயிறு பிடித்து எல்லைகளை பதிவிட்டுள்ளனர். அந்த காணிகளில் குடியமர்ந்துள்ள குடும்பங்களில் ஒரு கிராமவாசியான பெண் வேர்க் கடலை, சோளம், மிளகாய் உட்பட இன்னும் பல வகையான பயிர்களை செய்கை பண்ணியுள்ளார். அவர் இவ்வாறு விவசாயத்தை ஜீவனோபாயத்திற்காக ஆரம்பித்துள்ளார்.

“கடந்த வருடம் இந்த பயிர்ச்செய்கையால் நாங்கள் நல்ல வருமானத்தைப் பெற்றுக்கொண்டோம்” என்று அந்தக் கிராமத்தைச் சோந்த 53 வயதுடைய ஈ.திலகவதி என்ற பெண் மகிழ்ச்சியுடன் கூறுகின்றாள்.

/

எங்களுக்கு எமது சொந்த நிலம் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும் இழந்த காணிகளை மீண்டும் பெற்றுத் தருமாறு முறைப்பாடு செய்துள்ளோம் என்று 61 வயதுடை சுதுநிலமே பிரசான் குமாரி தெரிவிக்கின்றாள். எங்களுக்கு எமது நிலம் கிடைத்திருந்தால் நாங்களும் பயிரிட்டு அறுவடை செய்து மகிழ்ந்திருப்போம் என்று அவள் மிகவும் கவலையுடன் கூறினாள்.

ஏனைய சிலர் இலங்கையில் அதிக வருமானம் தரும் துறையான உல்லாசப் பிரயாணத்துறையோடு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

“எங்களுக்கு வெளியில் செல்லாமல் எமது சொந்த வீடுகளில் இருந்துகொண்டே இந்த தொழிலை செய்ய முடிகின்றது” என்று பனாமா கிர்ன் ஹவுஸ் என்ற பெயரில் உல்லாசப் பிரயாணிகளுக்காக தங்குவதற்காக அவரது வீட்டில் இரண்டு அறைகளை வாடகைக்கு விடும் கெஸ்ட் ஹவுஸ் நடத்தும் ஜீ.என். பிரியதர்சிகா என்ற பெண் கூறுகின்றாள். இந்த வருடத்திற்குள் அந்த வீட்டை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். “உல்லாசப் பிரயாணிகள் வந்து தங்குகின்றார்கள். அவர்கள் எங்களது வீடகளில் கட்டணம் செலுத்தி அறை வாடகைக்கு எடுத்து தங்கும் போது எங்களால் வழங்கப்படுகின்ற சேவையால் திருப்தியடைவதோடு எங்களையும் நம்ப வேண்டும். மகிழ்ச்சியடைய வேண்டும். அவர்கள் மீண்டும் வர வேண்டும்.” இந்த தொழில் சார்ந்த வியாபாரத்தை மேலும் முன்னேற்றுவதற்கான சிறந்த திருப்திகரமான நிலைமையை ஏற்படுத்தும் வகையிலான கதையாக அவளது இந்த வார்த்தைகள் அமைகின்றன.

உல்லாசப் பிரயாணிகள் அறைகளில் தங்குவதற்காக வரும்போது அவர்களை எவ்வாறு கவனிப்பது? எவ்வாறான முறையில் சேவைகளை வழங்கி உபசரிப்பது? போன்ற விடயங்கள் தொடர்பாக அந்த கிராமவாசிகளுக்கு சில நிறுவனங்கள் பயிற்சிகளை வழங்கி இருக்கின்றன.

/

“எங்களுக்கு பெரியளவில் வருமானம் உழைப்பதற்கான நிரந்தரமான தொழில்கள் இல்லை. அதனால் எங்களுடைய வீடுகளில் இருக்கும் சிறிய அறைகளை வாடகைக்கு விடும் தொழிலை சிறிய அளவில் ஆரம்பித்தோம்” என்று கடந்த இரண்டு வருடங்களாக தங்குமிட வசதிக்காக அறைகளை வாடகைக்கு விட்டு உல்லாசப் பிரயாணிகளை கவனிக்கும் தொழிலைச் செய்து வரும் இரேஷா அயேசானி கூறுகின்றாள்.

பனாமாவில் வாழும் எல்லா பெண்களுக்கும் அவர்களது ஒளிமயமான எதிர்காலம் தொடர்பாக உயர்வான எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அவர்களது ஒரே தேவையாக இருந்து வருவது அந்த பிரதேசத்தின் அழகை உல்லாசப் பிரயாணிகள் ரசிப்பதற்காக அடிக்கடி வந்து போக வேண்டும். அது மட்டுமல்லாது என்றோ ஒரு நாள் வரும். அப்போது இராணுவம் வைத்துக்கொண்டுள்ள அவர்களது சொந்தக் காணிகளில் மீண்டும் குடியேறி வாழும் நிலை ஏற்படும். அந்த சந்தர்ப்பத்திலும் மேலும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் அங்கும் வரவேண்டும். அந்த பிரதேசத்தின் அழகின் மகிமையை ரசிக்க வேண்டும் என்பதே அவர்களது ஒரே எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.