Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வன பரிபாலன அதிகாரிகளால் மீறப்படும் வாக்குறுதிகள்

இலங்கை அபிவிருத்தியை நோக்கி நகர்வதோடு காடுவளர்ப்பும் நடைபெறுகின்றது. அனாலும் யானைகள் அவற்றின் வாழ்விடங்களை மாற்றி வேறிடங்களுக்கு நகரும் அபாயம் தொடர்கின்றது. இந்த நிலையைத் தடுக்க அதிகாரிகளால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்று உள்ளுர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். “அவள் யானைகளால் கொல்லப்படவில்லை இந்த நாட்டு தலைவர்களால்” என்பதாக எதிர்ப்பு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பதாதையில் எழுதப்பட்டுள்ள வாசகம் கூறுகின்றது. விடயம் என்னவென்றால் இலங்கையில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடு நாட்டில் பல பிரதேசங்களில் நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்ற […]

01.05.2018  |  
அம்பாந்தோட்டை மாவட்டம்
Locals protest after yet another death caused by rampaging elephants.

இலங்கை அபிவிருத்தியை நோக்கி நகர்வதோடு காடுவளர்ப்பும் நடைபெறுகின்றது. அனாலும் யானைகள் அவற்றின் வாழ்விடங்களை மாற்றி வேறிடங்களுக்கு நகரும் அபாயம் தொடர்கின்றது. இந்த நிலையைத் தடுக்க அதிகாரிகளால் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்று உள்ளுர்வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

“அவள் யானைகளால் கொல்லப்படவில்லை இந்த நாட்டு தலைவர்களால்” என்பதாக எதிர்ப்பு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பதாதையில் எழுதப்பட்டுள்ள வாசகம் கூறுகின்றது. விடயம் என்னவென்றால் இலங்கையில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான முரண்பாடு நாட்டில் பல பிரதேசங்களில் நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பாரிய பிரச்சினையாகும்.

 


இரவு நேரங்களில் தங்களது சொந்த வீடுகளில் தங்கி இருப்பதற்கு அச்சப்படுவதால் பாதுகாப்புக்காக வேறிடங்களுக்குச் செல்கின்றனர்.

சூரியவௌ, அந்தர வௌ, அம்பந்தொட்டை போன்ற பிரதேசங்கள் மீள் காடு வளர்ப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இப்பகுதிகளில் வாழ்விடங்களை இழந்த யானைகள் அடிக்கடி மக்கள் வாழும் கிரமப் பகுதிக்குள் புகுந்த மக்களது அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த பல வருடங்களாக இப்பிரதேசங்கள் உள்ளுர் மக்கள் அரசாங்கத்திடம் இருந்து உதவிகளைக் கேட்டு வருகின்றனர். அதிகாரிகளும் மின்சார வேலி மற்றும் யானைகள் கிரமத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதாக அடிக்கடி வாக்குறுதிகளை வழங்கி வந்தாலும் எடுத்த நடவடிக்கை எதுவும் இல்லாத நிலை தொடர்கின்றது. அதன் காரணமாகவே உள்ளுர் மக்கள் இந்த விடயத்தை அடிப்படையாக வைத்து நீதி வேண்டி எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

/

கடந்த வருடம் செப்படம்பர் மாதம் 22 ஆம் திகதி சூரியகந்த புருதகந்த என்ற இடத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய பெண் ஒருவர் உயிரிழந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யானைகளிடம் இருந்து பாதுகாப்பு பெருவதற்காக பலமான மின்சார வேலி அமைக்குமாறும் கேரி அதிகாரிகளை விழிப்படையச் செய்யும் நோக்கில் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பதிலாக அதிகாரிகளும் பாதுகாப்பு மின்சார வேலி அமைப்பதாகவும் யானைகளால் அச்சுறுத்தல் இருந்து வரும் பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதற்காக வன இலாக்கா அதிகாரிகளை நியமிப்பதென்றும் வாக்குறுதி வழங்கினர். ஆனாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் அதிகாரிகளால் உரிய முறையில் நிறைவேற்ற ப்படவில்லை. நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் யாணைகள் கிராமத்திற்குள் புகுந்து 03 வீடுகளை தாக்கி நாசமாக்கியதுடன் விவசாய நிலைங்களையும் சேதப்படுத்தி அழித்துள்ளன.

இது தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையாகும். கடந்த இரண்டு வருடங்களில் அம்பாந்தொட்டை பகுதியில் மாத்திரம் மின்சாரம் பாய்ச்சப்பட்டும், துப்பாக்கியால் சுடப்பட்டு அல்லது விசம் ஏற்றப்பட்டும் 18 யாணைகள் கொல்லப் பட்டுள்ளன. 09 பேர் யாணைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருப்பதோடு மேலும் இரண்டு பேர் கடுமையான காணங்களுக்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

சூரியகந்தை புருதகந்தை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த பெண் அன்றைய தினம் அயலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்று கொண்டிருந்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணித்தாய் ‘த கட்டுமரனுக்கு’ தகவல் தருகையில் கூறினார். “அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகாமையில் மருத்துவ வசதி இருந்திருக்குமாயின் அவள் தூர இடத்திற்கு சென்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. இல்லாததால் அவளுடைய கணவனையும் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்று தன் தாயின் வீட்டில் தங்கி இருந்தே மறுநாள் மருந்து எடுக்க வைத்தியசாலைக்குச் சென்றாள். ஆப்பொழுதே அந்த சம்பவம் நடந்தது.” என்று இன்னுமொரு தாய் கூறினாள். “நாம் இந்த விடயத்தைக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க அங்கு போய் வரும்போது எங்களது விட்டை யாணை தாக்கி சேதப்படுத்தி இருந்தது” என்று ஜீ.எல்.ஏ. திலினி மதுசிகா என்ற தாய் கவலையுடன்; கூறினாள். “நாங்கள் அன்றைய இரவில் எங்களது வீட்டில் தங்கி இருந்திருந்தால் நாம் அனைவரும் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்திருப்போம்” என்றும் அவள் கூறனாள்.

யானைத் தொல்லை காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்கின்றனர். யானைகளின் தொல்லை காரணமாக அவர்கள் இரவு நேரங்களில் தங்களது சொந்த வீடுகளில் தங்கி இருப்பதற்கு அச்சப்படுவதால் பாதுகாப்புக்காக வேறிடங்களுக்குச் சென்று குறிப்பாக உறவினர்களின் அல்லது நண்பர்களின் வீடுகளிலே தங்கி இரவை கழித்துவிட்டு காலையில் தமது சொந்த வீட்டிற்கு வருவதாக அதிகமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

“நாம் எப்படி வாழ்க்கை நடத்துவது” என்று கே. சிரியாவதி என்ற பெண் கேள்வி எழுப்புகின்றாள். “எங்களுக்கு எமது குழந்தைகள் மற்றும் பயிர்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகி இருக்கின்றனது”. நாங்கள் இந்த நிலையில் அதிகாரிகளுக்கு எமது பிரச்சினையை தெரியப்படுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினால் வெறுமனே பொய்யான வாக்குறுதிகள் மாத்திரம் கிடைக்கின்றன. அதன் பின்னர் எங்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை வருகின்றது. எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலைதான் இப்போது ஏற்பட்டிருப்பது.

“ஓவ்வொரு நாளும் யாiனைகள் எமது கிராமத்திற்குள் புகுந்து எமது வீடுகளையும் பயிர்களையும் அழித்து நாசப்படுத்தி வருகின்றன” என்று இன்னொரு கிராமவாசி கூறுகின்றார். எங்களைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை. “இப்போது எம்மை பாதுகாக்க வேண்டிய பொலீசார் நாம் எமது பாதுகாப்புக் கோரி எதிர்ப்பு தெரிவித்ததற்காக எங்களை அவர்களது பாதுகாப்பிற்காக நீதிமன்றத்திற்கு அழைக்கின்றனர்” என்று அவள் மேலும் தொவிக்கையில் கூறுகின்றாள்”