Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

வெளிநாடுகளில்.....
இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் உதவி செய்வதாகக் கூறுபவர்களில் அநேகமானோர் ஏமாற்றுப் பேர்வளிகளே!

ஜனநாயகப் போராளிகள் என்னும் அமைப்பை உருவாக்கியிருக்கும் செயலிழந்துபோன தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் ஆயுதப் போராளிகள் இந்த நாட்டில் இரண்டாவது ஆயுதப் போராட்டமொன்றை ஏற்படுத்துவதற்குத் தாங்கள் விரும்பவில்லையெனக் கூறினர். வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளிற் தமக்கெனச் சில ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் ‘புலம்பெயர்ந்து வெளிநாடுளில் வாழும் தமிழர்களை அவர்கள் சுகபோகத்துடன் வாழும் இடங்களைவிட்டு இலங்கைக்குத் திரும்பிவந்து, இங்கே வறுமையினால் அல்லற்படும் தமிழர்களுக்கும் , தொழில் வாய்ப்புகள் எதுவுமின்றி இருக்கும் […]

01.07.2018  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்

ஜனநாயகப் போராளிகள் என்னும் அமைப்பை உருவாக்கியிருக்கும் செயலிழந்துபோன தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் ஆயுதப் போராளிகள் இந்த நாட்டில் இரண்டாவது ஆயுதப் போராட்டமொன்றை ஏற்படுத்துவதற்குத் தாங்கள் விரும்பவில்லையெனக் கூறினர்.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளிற் தமக்கெனச் சில ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஜனநாயகப் போராளிகள் ‘புலம்பெயர்ந்து வெளிநாடுளில் வாழும் தமிழர்களை அவர்கள் சுகபோகத்துடன் வாழும் இடங்களைவிட்டு இலங்கைக்குத் திரும்பிவந்து, இங்கே வறுமையினால் அல்லற்படும் தமிழர்களுக்கும் , தொழில் வாய்ப்புகள் எதுவுமின்றி இருக்கும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் சேவையாற்றும்படி வற்புறுத்திக் கேட்கின்றனர்.

த கட்டுமரன் உடன் ஒரு நேர்காணலின்போது ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் சர்வதேச இணைப் பாளர் தனபாலசிங்கம் இதயலால், எல்லாச் சமூகங்களும் கூடி வாழும் ஒரு ஒற்றுமையான நாட்டில் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தாங்கள் ஜனநாயக வழியிற் போராடுவோமெனக் கூறினார்.

அந்த நேர்காணலின் சிறு பகுதிகள் சில பின்வருமாறு:

த கட்டுமரன்: முன்னாள் தமிழ் புலிகளினால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சி (மக்கள் விடுதலைப் போராளிகள் கட்சி) என்னும் அரசியல் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது வட மாகாணத்திற் சில ஆசனங்களை வென்றுள்ளது. மக்கள் விடுதலைப் போராளிகள் கட்சியின் குறிக்கோள் பற்றி விளங்க வைப்பீர்களா?

மலரவன்: சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு நிலையங்களிலும் இருந்து விடுதலையான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே இந்தக் கட்சியை உருவாக்கியுள்ளனர். சமூகத்துடன் மீண்டும் ஒன்று இணைக்கப்பட்ட 12,500 முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் 3500 பேர் மக்கள் விடுதலைப் போராளிகள் கட்சி உறுப்பினர்களாக வந்துள்ளனர். எங்களுடைய பிரதான குறிக்கோள் வடக்குக் கிழக்கில் இருக்கும் எங்கள் மக்களுக்காகச் சேவை செய்வதுடன் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்களுக்கு வேலை வாயப்புகளை உருவாக்குதலுமாகும்.

த கட்டுமரன்: முன்னர் நீங்கள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற் கலந்து கொள்ளவுள்ளீர்களென அறிவித்த பொழுது மக்களும் ஏனைய அரசியற் கட்சிகளும் வரவேற்கவில்லை. இப்போதைய நிலவரம் எவ்வாறு உள்ளது?

மலரவன்: ஆம். அதிலே உண்மையுள்ளது. ஆரம்பத்தில் எமது முன்னள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினரும் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களும் எங்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். ஜனநாயகப் போராளிகள் இயக்கத்திற் சேர்வதற்குத் தயக்கங் காட்டினர். ஆனால் அரசியலில் ஈடுபட்டு எங்கள் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தமிழர்களுடைய பிரச்சனை களைத் தீர்ப்பதற்கென்று ஒலிக்கும் ஒரு குரலாக இருப்பதற்காகவுமே நாங்கள் ஜனநாயக அரசியல் வழிமுறைகளில் இறங்கியுள்ளோம் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம்.

த கட்டுமரன்: அவர்களிடம் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மீது விசுவாசத்தை ஏற்படுத்துவதற்காக இதுவரை நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்?

மலரவன்: நாங்கள் அரசியலிற் பிரவேசித்த குறுகிய இரண்டு வருட காலத்தில் முன்னாட் புலிகள் இயக்கத்தினர் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் வாழ்வாதாரத்தை மீளவும் உருவாக்கல், கல்வி, மற்றும் சுயதொழில்களைச் செய்வதற்கு ஏற்ற வாய்ப்புகள் இல்லாமை, அதற்கான ஆர்வக்குறைவு, தன்நம்பிக்கை இல்லாமை போன்றவைகளே பாரிய பிரச்சனைகளாக இருப்பதனை இனங் கண்டுள்ளோம். சிறைச்சாலைகளிலிருந்தும் புனர்வாழ்வு மையங்களிலிருந்தும் விடுதைலையான பின்னர் அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆகவே பணரீதியான ஆதரவு எங்களுக்குப் பெருமளவில் இல்லாமையினால் நாங்கள் இப் பிரச்சனை களைச் சிறிய அளவுகளிற் தீர்த்து வைப்பதற்கு ஆரம்பித்துள்ளோம். பசுமைப் பூகோளம் என்ற கருப் பொருளுக்கமையப் புவி மாசுபடுதலைக் குறைப்பதற்காக அதிக மரஞ்செடிகளைப் பயிரிட வேண்டுமென்பதை எமது குறிக்கோளாக அறிவித்துள்ளோம். வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மரஞ்செடிகளினாலான பசுமைப் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அப்பகுதிகளில் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சிகளிலும் கொண்டாட்டங்களிலும் மா, தென்னை, செவ்விள நீர் போன்ற மரக்கன்றுகளை ஜனநாயகப் போராளிகள் கட்சி விநியோகிக்க ஆரம்பித்துள்ளது. தன்னம்பிக்கைக் குறைவினால் மனதளவிற் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் புலிகள் இயக்கத்தினருக்குச் சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகச் சேதனப் பசளைப் பயிர்ச்செய்கைப் பண்ணைகள் சிலவற்றைத் தெடங்குவதற்கான எமது திட்டத்தை ஜனநாயகப் போராளிகள் கட்சி அறிவித்துள்ளது.

த கட்டுமரன்: உங்கள் செயற் திட்டங்களுகென வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு ஆதரவு கிடைக்கின்றதா?

மலரவன்: இந்த மக்களுக்கு உதவிகள் வழங்கவென வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமிருந்து எங்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. நாங்கள் நேரடியாகப் பணத்தைக் கையளுவதில்லை. ஆனால் உதவிகள் தேவைப்படுபவர்கள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்குவோம். எமது நிகழ்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதிகளைக் கையாளுவதற்கென இப்பொழுது நாங்கள் ஜனநாயகப் போராளிகள் கட்சிக் கென்று ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தை ஏற்படுத்தவில்லை. எங்களிடம் உள்ள தகவல்களின்படி 25,000 திற்கும் அதிகமான போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவு வதற்கென்று ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தை அமைப்பதற்கான திட்டமொன்று எங்களிடம் உண்டு. இந்தப் பெண்களுக்கு வேலைகள் அல்லது சுயதொழில் போன்றவற்றைப் பெறுவதற்கு எங்களுக்கு அரசாங்க உதவியும் தேவைப்படுகிறது. பிள்ளைகள் உள்ள இவர்கள் வேலை இல்லாமையினால் அதிக சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

த கட்டுமரன்: உங்கள் அரசியற் கட்சியை ஏனைய மாகாணங்களுக்கும் விஸ்தரிப்பதற்கு எண்ணுகிறீர்களா?

மலரவன்: ஆம். எங்கள் அரசியல் நடவடிக்கைகளைத் தெற்கிலும் விஸ்தரிக்கும் திட்டங்கள் எங்களிடம் உள்ளன. தற்பொழுது வடக்கிலும் கிழக்கிலும் எங்கள் அங்கத்துவத்தை அதிகரிப் பதிலேயே நாங்கள் கூடுதலான கரிசனை கொண்டுள்ளோம். விரைவில் கொழும்பிலே ஒரு காரியாலயத்தைத் திறக்கவுள்ளதுடன் சிங்கள் சமூகத்தினர் மத்தியிலும் செயற்படுவதற்கான திட்டங்களும் உள்ளன. அரசியல் கலாசாரம் மற்றும் கல்வி ரீதியாக வடக்கையும் கிழக்கையும் தெற்குடன் இணைப்பதற்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி விரும்புகிறது.

த கட்டுமரன்: தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவதற்கு நீங்கள் விரும்பியது ஏன்?

மலரவன்: இலங்கையிலுள்ள பிரதான தமிழ் அரசியற் கட்சிகளுள் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்று. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தமிழர்களுக்குச் சேவை செய்வதற்காக அவர்கள் தமிழ் அரசியற் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இயங்குவதை விரும்பினர். பாராளுமன்றத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பே தங்களைப் பிரதிநிதிப்படுத்த வேண்டுமென அவர்கள் விரும்பியபடியால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவு இருந்ததென்பதில் இரகசியம் எதுவும் கிடையாது.

எங்களுக்கு ஆதரவு வழங்குது யாரென அவர்கள் அறியாது இருந்தமையினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னர் எங்களைச் சந்தேகத்துடன் பார்த்தனர். வலுவான ஒரு அரசியல் அடித்தள மின்றி எங்களால் மக்களுக்குச் சேவை செய்ய முடியாது என்பதை ஜனநாயகப் போராளிகள் கட்சி உணர்ந்து கொண்டது. ஆகவே நாங்கள் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள பிரச்சனைகளுக்குத் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்காகவே நாங்கள் அவர்களுடன் இணைந்தோம்.

த கட்டுமரன்: தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களின் நிழல் அரசியற் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழர்களுக்கென ஒரு பிழவுபட்ட தேசமான ஈழத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தனர். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

மலரவன்: முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினராயிருந்த நாங்கள் இந்த நாட்டில் இரண்டாவதாக ஒரு ஆயுதக் கிளர்ச்சியை விரும்பவில்லையெனத் தெளிவாக அறிவித்துள்ளோம்.
ஆம். முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களுக்கென ஒரு தேசத்தின் பிரிவினைக்காகப் போராடினார்கள். ஆனால் நாங்கள் இன்று தமிழர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதத்தையுடைய ஒருமித்த நாட்டில் தழிழர்கள் வாழ்வதை விரும்புகிறோம். பிளவுபட்ட தேசம் என்பதன் கருத்து என்ன? அது பிரிக்கப்பட்ட பிறிதொரு தேசத்தைக் குறிக்கும். நாங்கள் இப்பொழுது விரும்புவது பிரிக்ப்பட்ட பிறிதொரு தேசத்தையல்ல. ஆனால் தமிழ் பேசும் அலுவலர்களைக் கொண்ட பொலீஸ் மற்றும் நிருவாக அமைப்புகளைக் கொண்ட சிவில் நிருவாக முறைமையையும் படையினர் கையகப் படுத்தியுள்ள எங்கள் நிலங்களைப் பெறுவதற்கும் வடக்கிலும் கிழக்கிலும் எங்கள் மொழியான தமிழ் மொழி புழக்கத்தில் இருப்பதையும் விரும்புகிறோம். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எமது மக்கள் சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ தொடர்பாடல் செய்ய முடியாதவர்களாய் இருப்பதனால் அங்கு தமிழ் பேசும் பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிக்க நாம் விரும்புகிறோம் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மேலதிகப் படை முகாம்களை அரசாங்கம் விடுவிக்க வேண்டுமென விரும்புகிறோம்.

த கட்டுமரன்: நல்லிணக்க செயல்முறைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன?

மலரவன்: சிங்களவர் மற்றும் தமிழர் அடங்கலாக இந்த நாட்டில் இருக்கும் சமூகங்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாழ வேண்டும். பெரும்பாலான தமிழர்கள் தென் பகுதிகளில் வாழ்ந்து வருவது போல சிங்களவர்களும் முஸ்லிம்களுங்கூட வடக்கு மற்றும் கிழக்கிலும் வாழ்வதுடன் அவரவர்களும் தங்கள் தங்களுடைய அலுவல்களில் ஈடுபடுகின்றனர். இது நல்லிணக்கத்திற்கு நல்லது என்பதுடன் ஒரு நல்ல சம்மிக்கையுமாகும்.

த கட்டுமரன்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களினால் வழங்கப்படும் ஆதரவு பற்றி நீங்கள் கூறுவது என்ன?

மலரவன்: வெளிநாடுகளில் வாழும் சில தனிநபர்கள் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் சிலருக்கும் யுத்தத்தினால் விதவையாக்கப்பட்ட சிலருக்கும் பணரீதியான உதவி செய்துள்ளனர். இவர்களைத் தவிர வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் வாழும் தமிழர்களுக்குத் தாங்கள் உதவி செய்வதாகக் கூறுபவர்களில் அநேகமானோர் ஏமாற்றுப் பேர்வளிகளே. அவர்கள் எங்களுக்கு உதவுவதில்லை.

அவர்களுக்கு நான் ஒன்று கூற விரும்புகிறேன். அதாவது அவர்கள் எங்களுக்கு உதவ விரும்புகிறார்களெனின் தயவு செய்து இலங்கைக்கு வந்து இங்குள்ள நிலைமைகளைத் தங்கள் கண்களால் நேரிலே பாருங்கள்.

யு.எஸ், யு.கே,, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசதியாக வாழ்ந்து கொண்டு அப்பாவிகளா கவும் தேவைகளை உடையவர்களாகவும் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்வதாகக் கூற முடியாது. இருந்தாலும் இப்படியானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கென நிதி திரட்டி அதனைத் தங்களுடைய சட்டைப் பைகளுட் போட்டுக்கொண்டனர்.

தமிழர்களுக்குதவி செய்வதற்கென நிறைய அரச சார்பற்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) போன்ற வகையான அரச சர்பற்ற நிறுவனங்கள் இதுவரை தமிழர்களுக்காக என்ன செய்தார்களெனத் தெரியப்படுத்துவார்களா என்று நான் கேட்க விரும்புகிறேன். புவுகு உருத்திரகுமாரனை அரச தலைவராகவும் அவருடன் மந்திரி சபை ஒன்றியம் கொண்ட ஈழ அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது. அவர்கள் மில்லியன் கணக்கில் பணத்தைச் செலவிட்டு நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் வேனிற்கால ஒன்றுகூடலை நடத்துமிடத்து அப்பாவித் தமிழ் சிறார்கள் கல்வி கற்பதற்குத் தேவையான பாடப் புத்தகங்கள், காலணிகள், சீருடைகளும் புகலிடங்களுமின்றி உள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயிலிலே அவர்கள் பல மைல்கள் நடந்தே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். தாங்களே சுயமாகப் பிகடனப்படுத்தியுள்ள தமது பதவிகளைத் துறந்துவிட்டு இலங்கைக்கு வந்து எமது மக்கள் எவ்வாறு துன்பப்படுகின்றனர் என்று பார்க்குமாறு இவர்களுக்குச் சவால் விடுகிறேன்.

வெளிநாடுகளில் சொகுசாக வாழ்ந்துகொண்டு ஈழம் பற்றிப் பேசுகின்றனர். நியூ யோர்க், லண்டன், ரொறொன்ரோ அல்லது சிட்னியிலா அது உள்ளது. தாங்கள் தப்பிப் பிளைத்திருப்பதற்காக விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தும் இந்தத் தமிழ் அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றன. அரசாங்கம் அவர்களைக் கைது செய்யாது என்பதனால் உருத்திரகுமாரன் போன்ற தமிழர்களை இலங்கைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரையிலும் அவர்கள் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள். எவ்வளவு பணம் சேர்த்தார்களென்றும் அதில் எவ்வளவு தொகையை வடக்கு கிழக்கிலிருக்கும் தமிழர்களின் நல்வாழ்விற்காகச் செலவு செய்தனர் என்று ஒரு விபரமான அறிக்கையைத் தரும்படி அவர்களை நான் கேட்கிறேன்

எமது மக்களுடன் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு நான் உதவி செய்ய வேண்டுமென்பதனால் பதின் மூன்று வருடங்களாக வெளிநாடுகளில் வாழ்ந்த நான் அண்மையில் ஹாங்கொங்கிலிருந்து எனது குடும்பத்துடன் திரும்பி வந்தேன்.

மேற்கத்தைய நாடுகள் எங்களுக்கு எதனையும் தரப்போவதில்லை என்பதையும் தமிழர்களின் பிரச்சனை களை எமது நாட்டினுள்ளேயே – இலங்கையிலேயே – தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

த கட்டுமரன்: வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தற்போதைய நிலைமையைப் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தெரியவைப்பதற்கான திட்டங்கள் ஏதும் உங்களிடம் உள்ளனவா?

மலரவன்: ஆம். தமிழ் புலிகள் போல வேடம் போட்ட நரிகளைப்பற்றி ஐரோப்பாவில் வாழும் தமிழர்களுக்குத் தெரியவைப்பதற்காக விரைவில் நான் அங்கு செல்லவுள்ளேன். உண்மையான தமிழ் புலிகள் இப்பொழுது இலங்கையில் இருக்கிறார்களென்றும் அவர்கள் தமிழர்களுக்குச் சேவை செய்வதற்காக ஜனநாயக வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளனரென்றும் நாங்கள் அவர்களுக்குச் சொல்வோம். போலிப் புலிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்தும்படி அவர்களை வற்புறுத்துவோம்.