Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

இலங்கையில் உளவளம்.
இன்னமும் சீரானதொரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை…

வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணப்படும் மக்களின் மனநிலை நெருக்கீடுகளுக்கு உள்ளான நிலையிலேயே உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் முற்று முழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்வில்லை என்றே கூறவேண்டும்.

10.09.2018  |  
கொழும்பு மாவட்டம்
சமூக அபிவிருத்திக் கற்கை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ரிட்லி ஜெயசிங்க.

“உடல் ஊனத்தினால் வாழ்க்கை பாதிப்பதைவிட, மன ஊனத்தினால் வாழ்க்கையில் பல்வேறு விடயங்களையும் இழந்தவர்கள் பலர்.” என்று கூறும் தேசிய சமூக அபிவிருத்திக் கற்கை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ரிட்லி ஜெயசிங்க.. தகட்டுமரனுக்கு வழங்கிய செவ்வியைத் தருகிறோம்.

கட்டுமரன் : உளவளத்துணை ஆலோசனையானது இலங்கையருக்கு எந்த வகையில் முக்கிய தேவையாக உள்ளது?

நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்கள் நிலவிய யுத்தம், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், அதனையடுத்து மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ள அனர்த்தம் போன்ற இயற்கை மற்றும் மனிதசார்ந்த அனர்தங்கள் மக்களுக்கு உயிர் மற்றும் சொத்துச்சேதங்களால் ஏற்பட்ட உள நெருக்கீட்டினால் மக்களின் மனநிலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில், முதியோர் சார்ந்த பிரச்சினை, மதுபாவனை, போதைப்பொருளுக்கு அடிமையாதல், சமூக சீர்கேடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையிலிருந்து மக்களை மீட்டெடுத்து சாதாரணமாக மற்றைய சகமனிதர்களுடன் சுமுகமான வாழ்வினை நோக்கி தமது அன்றாட செயற்பாடுகளை செய்யத்தூண்டுவதற்கு இந்த உளவளத்துணையின் சேவையானது அவசியமாக உள்ளது.

சமூக அபிவிருத்திக் கற்கை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ரிட்லி ஜெயசிங்க.
கட்டுமரன் : இந்த உளவளத்துணை ஆலோசனையின் தேவையானது யுத்ததின் முன்னரா பின்னரா அதிகமாகவுள்ளது.?

உளவளத்துணையின் தேவையானது என்னைப் பொறுத்தவரையில் முன்னரும் தேவைப்பட்டது. பின்னரும் தேவைப்பட்டது என்றே கூறுவேன். எமது நாட்டைப் பொறுத்தமட்டில், யுத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு என்றாலும் சரி, தெற்கில் இருந்த சிங்கள அரசாங்கத்திற்கென்றாலும் சரி உளவளத்துணை ஆலோசனை முறையின் சில கூறுகளைப் பயன்படுத்தி, மக்களின் மனநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். இரண்டு தரப்புப் பிரச்சினைகளையும் அவர்களுக்குள் பேசி ஒற்றுமையாகத் தீர்த்து ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் அவ்வாறானதொரு செயற்பாடு இரு தரப்பிலுமே நடைபெறவில்லை. அதை யுத்தின் பின்னர் இருந்த சூழலுடன் ஒப்பிடுகையில் உளவளத்துணை ஆலோசனையின் தேவையானது அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும். யுத்த நிழல்களில் இருந்து மனதளவில் காயப்பட்டவர்களை மீட்டெடுக்கவேண்டும். அதேநேரம் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்துடன் கூடிய நல்லுறவினையும் கட்டியெழுப்புவதற்கு உளவளத்துணையின் ஆலோசனையைப் பயன்படுத்த முடியும். எனவே சரியான முறையில் செய்யவேண்டிய தேவை இன்று அதிகரித்துள்ளது.

கட்டுமரன் : அதிகரித்துள்ளது என எவற்றை ஆதாரமாக வைத்துக் கூறுகிறீர்கள்?

ஏன் எனில் யுத்தத்தின் பின்னர் மக்களின் மனநிலையில் பல நெருக்கீடுகள் ஏற்பட்டன. தமக்கு உதவ யாரும் இல்லை என்ற எண்ணம் பாரிய மன நெருக்கீடுகொண்டது. உண்மையில் பாதுகாப்பான சூழலும் யுத்தத்தல் இருப்பதில்லை. இந்த மன நெருக்கீடும், தனிமைப்படுத்தப்படல், ஓரங்கட்டப்படல், போன்றவற்றின் காரணமாகவும் மக்களின் செயற்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்பிரச்சினையானது வடக்குக் கிழக்கு தெற்கு என்று மூன்று பகுதி மக்கள் மத்தியிலும் இருந்தது. இதனால் போதைப்பொருள் பாவனை, சமூக சீர்கேடுகள், ஒழுக்க நிலையிலான தடுமாற்றங்கள் என்பன அதிகரித்தன. இன்று பாரிய பிரச்சினைகளாக அவற்றை இனங்காணமுடிகிறது. இதற்கான காரணமாக அமைவது, யுத்தின் பின்னரான இலங்கையானது இன்னமும் சீரானதொரு நிலைப்பாட்டிற்கு வரவில்லை என்பதே. சர்வதேச ரீதியில் யுத்தம் நிகழ்ந்த இடங்களுடன் ஒப்பிட்டு நோக்குவோமேயானால் அந்த நாடுகளினதும் இலங்கை மக்களின் தற்போதைய மனநிலைக்கும் ஒற்றுமை உள்ளதை ஒரு உளவளத்துணை ஆலோசனையாளர்களை பயிற்றுவிப்பவன் என்ற ரீதியில் நான் உணர்கின்றேன்.

கட்டுமரன் : இந்நிலையானது ஒப்பீட்டு ரீதியில் வடக்கிலா தெற்கிலா அதிகமாகவுள்ளது?

சிறுவர் துஷ்பிரயோகம், விபச்சாரம், போதைப்பொருள் பாவனை, மதுப் பாவனை போன்ற சமூக சீர்கேடுகள் என்று வருகின்ற போது வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற வேறுபாடொன்று இல்லை. ஆனாலும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணப்படும் மக்களின் மனநிலை நெருக்கீடுகளுக்கு உள்ளான நிலையிலேயே உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் முற்று முழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்வில்லை என்றே கூறவேண்டும்.

கட்டுமரன் : இந்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உளவளத்துணையாளர்களை உருவாக்குகின்ற நிறுவனம் என்ற ரீதியில் உங்கள் நிறுவனத்தினால் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

வடக்குக் கிழக்குத் தெற்கு என்று வேறுபாடு இன்றி, எதிர்காலத்தில் முழு இலங்கையிலும் அபிவிருத்திய செய்யப்பட வேண்டியதொரு துறையாக உளவளத்துணை ஆலோசனை உள்ளது. உளவளத்துணையானது பரிசோதனை, கற்றல், பயிற்றுவித்தல் போன்ற மூன்று திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தாங்களே அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாகத் தம்மை மாற்றியமைக்கக் வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். வடக்குக் கிழக்கு பகுதிகளில் பெருமளவிலான உளவளத்துணை ஆலோசகருக்கான தட்டுப்பாட்டினை எமது கற்கை நிறுவனத்தின் மூலமே நிவர்த்தி செய்தோம். இது தவிர, வெளிக்கள நிலையங்கள் 17 இல் உளவளத்துணை சார்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம். ஏனைய சமூக சேவை நிறுவனங்களுடன் இணைந்து சமூகத்தில் வாழுகின்ற மக்களுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். எதிர்காலத்தில் பிரச்சினைகள் அற்ற அல்லது பிரச்சினைக்கான தீர்வினை தாமே ஆராய்ந்து தேர்ந்தேடுக்கக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கொண்டதொரு நாடாக இலங்கை மாறும் என்று நம்புகிறோம்.