Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மதவாச்சியிலிருந்து..
யாழ்ப்பாணத்திற்கு, பூசணிக்காய்க்குள் அரிசி கடத்தினர்.

அவர்களுக்கு உண்ணவும் குடிக்கவும் எதையாவது கொடுக்கா விட்டால் அவர்கள் யுத்தத்தில் ஈடுபடுவார்கள். அந்த நாட்களில் யாழ்ப்பாணம் செல்லப் பேரூந்துகள் அனுமதிக்கப்படவில்லை. பொருட்கள் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களும் அனுமதிக்கப்பட வில்லை. யுத்தம் வேகமடைந்தது. இறுதியில் அது ஒரு முடிவிற்கு வந்தது. வடக்கில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று துல்லியமாக எங்களுக்குத் தெரிவதில்லை.  எங்கள் மனங்கள் வேறுபட்டவையாக உள்ளன. 

01.10.2018  |  
அனுராதபுரம் மாவட்டம்
Punchage Kalumanike

“எனது பேரப்பிள்ளைகள் 12 பேர் இராணுவத்திலிருந்தனர். எனது மகன்களில் ஒருவரும் ஒரு பேரப்பிள்ளையும் யுத்தத்தின்போது மரணமடைந்தனர்.  என்னுடையவர்களை மட்டும் அல்லாது இலங்கை முழுவதிலும் ஏராளமான பையன்களை இந்த யுத்தம் அழித்தது.  இருந்தபோதும் எனக்கு எவர்மீதும் வெறுப்பு, கோபம் அல்லது பொறாமை இருந்ததில்லை” என 106 வயதான பஞ்சகே களுமெனிக்கே கூறுகிறார்.  அவருக்கு 1973ம் ஆண்டு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையில் அவர் பிறந்த திகதி 04.07.1912 எனத் தெரிவிக்கப்படுகிறது.  தன்னை மெனிக்க என்றும் மெனிக்கே என்றும் அழைக்கலாமெனக் கூறுகிறார்.  “இப் பெயர்களை நான் விரும்புகிறேன்”.

/

மதவாச்சியிலிருக்கும் சங்கிலிமகாகனதராவவின் தாழ்வான பக்கத்தில் வசிக்கும் அவர் அங்கு 10 பிள்ளைகளைப் பெற்றெடுத்ததுடன் அவருக்கு இப்பொழுது 120 வரையான பேரப்பிள்ளைகள் உள்ளனர்.  அவர் சமயப்பற்றுடன் வாழ்ந்து வருகிறார். எவருடைய உதவியையும் எதிர்பார்க்காத அவர் தனிமையில் ஒரு வீட்டில் வசிப்பதுடன் உணவு சமைப்பதிலிருந்து ஏனைய வேலைகளையும் தானாகவே செய்கிறார். தனது பிள்ளைகள் அழைத்தாலுங்கூட ஒரு சில நாட்களுக்குமேல் தனது வீட்டைவிட்டு அவர் செல்ல விரும்புவதில்லை.


“எனது மகன் 1996ல் திருகோணமைலையில் இறந்தார். கிளிநொச்சி இராணுவ முகாமைப் புலிகள் தாக்கிய பொழுது எனது பேரன் ஏனையவர்களுடன் சேர்ந்து தப்பி ஓடிவிட்டார். இதுவரை எனது பேரப்பிள்ளை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

“நான் சமய நடவடிக்கைகளில் ஈடுவடுவதனாலேயே இவ்வாறு இருக்கிறேன். ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நான் “சில்” கடைப்பிடிப்பேன். நான் கோவில்களைக் கட்டியுள்ளதுடன் “அரபிரகார”வும் வழங்கியுள்ளேன். நான் சமய போதனைகளையும் “பிரித்” ஓதலையும் கேட்பேன். அவை எனக்கு உதவியளித்துள்ளன.”

உடல் மற்றும் உள ரீதியாக அவர் வலுவுடன் இருப்பதுடன் தனது 106 வருட வாழ்க்கையின் போதும் நாட்டிலும் நடைபெற்ற பெரும்பாலான சம்பவங்கள் பற்றிய ஞாபகத்துடன் இருக்கிறார்.

“ எனது மகன் 1996ல் திருகோணமைலையில் இறந்தார். கிளிநொச்சி இராணுவ முகாமைப் புலிகள் தாக்கிய பொழுது எனது பேரன் ஏனையவர்களுடன் சேர்ந்து தப்பி ஓடிவிட்டார். இதுவரை எனது பேரப்பிள்ளை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இராணுவத்திற் சேர்ந்த பிள்ளைகளிற் பெரும்பாலானவர்கள் இப்பொழுது ஓய்வு பெற்றுள்ளனர்.”

யுத்தத்தில் இறந்துபோன அவருடைய மகனின் புகைப்படமொன்று சுவரிலே தொங்கிக்கொண்டிருக்கிறது. தனது சேலைத் தலைப்பால் அவர் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்.

அது கொலையல்லாமல் வேறென்ன?  இங்கு உள்ளவர்கள் அவர்களைக் கொன்றார்கள். அங்கே இருந்தவர்களை அவர்கள் கொன்றார்கள். எவரும் இலாபமடையவில்லை.  யுத்தம் உருவாக்கப்பட்ட காரணத்தினால் இது நடைபெற்றது. அப்படி நடைபெறாதுவிட்டால் எங்களைக் கொல்வதற்கு அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள்.

இது 1970ல் ஆரம்பமானது.  இவர்கள் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதி மறுத்ததுடன் சோதனைச் சாவடிகளையும் ஏற்படுத்தினார்கள். இவ்வாறுதான் பிரச்சனை ஆரம்பமானது. யாழ்ப்பாணத் திற்கு அரிசி எடுத்துச் செல்வதற்கு எந்த மார்க்கமும் இருக்கவில்லை.  பூசணிக்காய்களை வெட்டி அவற்றினுள் அரிசியை நிரப்பி மீண்டும் பூசணிக்காயை மூடியிட்டு அரிசி கொண்டு செல்லப்பட்டது. சிலர் பிடிபட்டனர். அவர்களுக்கு உண்ணவும் குடிக்கவும் எதையாவது கொடுக்கா விட்டால் அவர்கள் யுத்தத்தில் ஈடுபடுவார்கள். அந்த நாட்களில் யாழ்ப்பாணம் செல்லப் பேரூந்துகள் அனுமதிக்கப்படவில்லை. பொருட்கள் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களும் அனுமதிக்கப்பட வில்லை. யுத்தம் வேகமடைந்தது. இறுதியில் அது ஒரு முடிவிற்கு வந்தது. வடக்கில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று துல்லியமாக எங்களுக்குத் தெரிவதில்லை.  எங்கள் மனங்கள் வேறுபட்டவையாக உள்ளன.  இவையெல்லாம் எமது தலைவர்களினால் ஏற்பட்டவையாகும்

D.S.சேனநாயகாவின் விவசாய சமூக இயக்கத்துடன் 1945ல் இங்கு வந்த முதற் பத்துக் குடும்பங்களில் களுமணிக்கேயின் குடும்பமும் ஒன்று. அண்மைக் காலம்வரை களுமணிக்கேயின் தாயார் ஒரு சேனை விவயசாயத்திதன் மூலம் தனியாக வாழ்ந்தார்.

இந்தக் காணிகள் எல்லாம் என்னால் பயிரிடப்பட்டன. இனிமேல் என்னால் இதைச் செய்ய முடியாது.  எனது பிள்ளைகளுக்குரிய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு எனது பாகத்தைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறேன். இந்த வழியாக ஒரு வாய்க்கால் செல்வதனால் எனது வீட்டை அப்புறப்படுத்த வேண்டுமென்று ஒரு அதிகாரிகள் குழு வந்து கூறியது.  நான் சீவிப்பதற்கு எங்காவது ஒரு சிறிய இடம் தரும்படி அவர்களிடம் கூறினேன்”.

மதவாச்சிப் பாலத்திற்கு இந்தப் பக்கம் நிரையாக உள்ள வீடுகளில் தமிழ் குடும்பங்கள் இருந்தன. அவற்றை இப்பொழுது சிங்கள் மக்களிடம் உள்ளன.இப்பொழுது தங்களுடைய காணிகளை அவர்கள் (தமிழர்கள்) கேட்கிறார்களென்றும் அவைகளைக் கொடுக்க வேண்டுமென்றும் அரசாங்க ஆட்கள் கூறினர்.

அவர்களிடம்(தமிழர்களிடம்) காணி மற்றும் வீட்டு உரிமைப் பத்திரங்கள் இருந்தால் காணிகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.  அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று சொல்வதனால் பயன் ஒன்றுமில்லை.  எல்லாள மன்னன் அனுராதபுரத்தை ஆளவில்லையா? அவர்களின் கடும் உழைப்பினால் காடுகள் அழிக்கப்பட்டு அந்தக் காணிகள் வயல் நிலங்கள் ஆக்கப்பட்டன. சில வீடுகள் சேதமடைந்துள்ளன. சில வீடுகள் நல்ல நிலையில் உள்ளன.  வன்முறை மூலம் பலாத்காரமாக அந்த வீடுகளில் குடியிருப்பது நல்லதல்ல. அவைகளை நாங்கள் அவர்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.  அவர்களிடமிருந்து நாங்கள் பறிப்பது கூடாது. நான் எனது வீட்டை இழக்கும் பொழுது ஏற்படும் துக்கம் போலவே மற்றொருவருக்கு ஏற்படும்போது துக்கம் வரும்.

/

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மக்கள் பல கிராமங்களில் இருந்தார்கள்.  நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தோம். நாங்கள் அவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்தோம்.  அவர்கள் அவற்றை வண்டில்கள் மூலம் யாழ்ப்பாணம் கொண்டு சென்றார்கள்.  சில்லறைச் சாமான்களை அவர்கள் யாழ்ப்பாணத் திலிருந்து கொண்டு வந்து எங்களுக்கு விற்றார்கள். எங்கள் வேளாண் உற்பத்திகளை அவர்களுக்குக் காசுக்கு விற்றோம். இன்றைக்கு இருப்பதுபோல் அந்த நாட்களில் பணம் அவ்வளவாக இருக்கவில்லை. பெரும்பாலான பொருட்கள் யாழ்ப்பாணத்திலிருந்தே கொண்டு வரப்பட்டன.  மதவாச்சிக்கு அண்மையில் உள்ள கிராமங்கள் அவர்களுக்கும் அண்மையிலேயே இருந்தன.  திடீரென யுத்தம் தொடங்கியதுடன் அவர்களும் சென்றுவிட்டனர்.

அவருடைய மகள் களு கூறுகையில் “அந்தக் கிராமத்தில் இன முரண்பாடுகள் இருக்கவில் லையென அம்மா கூறினார். ஒருவர் மீது ஒருவர் தங்கி இருந்தமையினால் பணத்திற்கு அப்பாற்பட்ட ஒரு திருப்தி அவர்களிடமிருந்தது. இதில் முக்கியமானது என்னவெனில் மிக நீண்ட வாழ்நாட்களைக் கடந்து வந்த எனது தாயார் ஞாபகத்தில் வைத்திருக்கும் இச் சம்பவங்களைப் பற்றிக் கேட்டறிவதாகும்”. ஏன்றார்.