Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

ஓமந்தையில்....
ஒரு வாய் சோறு எல்லாவற்றையும் மாற்றிவிடும் !

யுத்தம் நடைபெற்ற அந்தக் காலப் பகுதியில் தமிழ் மக்கள் மட்டுமே வாழ்ந்த அந்த வரண்ட பூமியில் ஒரு வருடத்திற்கு முன்னர் பிரதேச சபையிலுள்ள ஒரு தமிழர் நம்பிக்கைக்கான விதைகளை நாட்டினார். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் சிங்களவர்கள் இளைப்பாறுவதற்கு மட்டுமன்றி வன்னியின் உள்ளூர் உணவையும் உருசிபார்ப்பதற்காக ஒரு சிறிய கவர்ச்சிகரமான உணவகத்தை உருவாக்கினார்.

05.10.2018  |  
வவுனியா மாவட்டம்

ஒரு காலத்தில் சிங்களவர்களையும் தமிழர்களையும் ஒரு நேர உணவைக்கூடப் பகிர்ந்து கொள்ள முடியாமல் ஒரு எல்லைக்கோடு தடுத்து வைத்திருந்தது. பௌதீக மற்றும் கலாசார ரீதியான இத் தடையை இன்று ஓர் உணவகம் மாற்றியமைத்திருக்கிறது

 

/
அவர்களுடைய உணவுகள் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரே மாதிரியான சுவையையே தருகின்றன.

பிரிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பின் எல்லையாக ஒரு காலத்திலிருந்த ஓமந்தையிலிருந்து யாழ் குடாநாடு வரைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டதின் பின்னர் அரசாங்கத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தெற்கிற்கும் வன்னிக்கும் இடைப்பட்டதாக ஒரு வெற்றிடம் காணப்பட்டது. ஒரே நாட்டிற்குள் வாழ்ந்த உறவுகள் இந்த நிலப்பரப்பின் ஊடாகச் செல்ல விரும்பினால் பல சோதனைச் சாவடிகளையும் சிரமங்களையும் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது.
இவ்வாறான சூழ் நிலைகளில் வட பகுதியிலிருந்த வன்னி மக்கள் தெற்கிலுள்ள தமது உறவுகளுக்குச் சோறு பரிமாற வேண்டுமெனக் கனவு கண்டது போலத் தென்பகுதிச் சிங்களவர்களுக்கும் ஒரு வாய் சோற்றை அமைதியாக உண்பது ஒரு கனவாகவேயிருந்தது. யுத்தம் முடிவுற்று ஒரு தசாப்த காலத்தின் பின்னர் அந்த எளிய கனவுகள் நினைவாகிவிட்டன.

யுத்தம் நடைபெற்ற அந்தக் காலப் பகுதியில் தமிழ் மக்கள் மட்டுமே வாழ்ந்த அந்த வரண்ட பூமியில் ஒரு வருடத்திற்கு முன்னர் பிரதேச சபையிலுள்ள ஒரு தமிழர் நம்பிக்கைக்கான விதைகளை நாட்டினார். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும் சிங்களவர்கள் இளைப்பாறுவதற்கு மட்டுமன்றி வன்னியின் உள்ளூர் உணவையும் உருசிபார்ப்பதற்காக ஒரு சிறிய கவர்ச்சிகரமான உணவகத்தை உருவாக்கினார்.

அங்கே மூன்று பெண்கள் கிரமமாக உணவு தயாரிக்கின்றனர்.

இடியப்பம் பிட்டு மற்றும் சிகப்பரிசிச் சோற்றுடன் சேர்த்து உண்பதற்கு வேண்டிய கறிவகைகளைப் பூமலர் தயாரித்துக் கொண்டிருந்தார். ஆட்டாமாவினால் தயாரிக்கப்படும் பொன் நிறமான பூரியை இராசா இலெட்சுமி பொரித்துக் கொண்டிருந்தார். தோசையுடன் சேர்த்து உண்பதற்கு வேண்டிய சாம்பார் தயாராகும்வரை நவநீதன் கௌரி புதிதாக உழுந்தை அரைத்துக் கொண்டிருந்தார்.

மாத்தளையில்; பிறந்த பூமலருக்குச் சிங்களம் பேசமுடியும். ஆனால் கௌரிக்கும் இராசா இலெட்குமிக்கும் பேச முடியாது. ஆகவே பூமலர் மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதுடன் மொழியினால் ஏற்படும் இடைவெளியையும் நிரப்புகிறார்.

“எனது கணவர் குருணாகலைச் சேர்ந்தவர். எங்களுக்குச் சிங்களம் தெரியும். எங்களுடன் பிறந்த சகோதரர்களும் சகோதரிகளும் இங்கே இருப்பதனால் நாங்களும் இங்கு வந்தோம்”எனக் கூறுகிறார்.

அவளுடைய கணவன் சில்லறை வேலைகள் செய்வதனால் சொற்ப வருமானம் பெறுவதுடன் பூமலரும் உயர்வானதாக இல்லாவிடினும் மட்டான ஒரு வாழ்விற்காகத் தனக்குக் கிடைக்கும் சிறு சிறு வேலைகளையும் செய்து வந்தார்.

வடமாகாண சபையின் அங்கீகாரத்துடன் இந்த உணவகத்தைக் கட்டுவதற்குப் பிரதேச சபை தீர்மானித்த பொழுது உணவுகளைத் தயாரிப்பதற்கும் மற்றைய இரண்டு சமையற்காரருக்கு மொழி பெயர்ப்பாளராகவும் இருக்கும் வாய்ப்பு பூமலருக்கு வழங்கப்பட்டது.

“நாங்கள் மூவர் இங்கு சமையல் செய்கிறோம். நான் பழரசமும் செய்கிறேன். எங்களுக்கு ஒரு முகாமையாளரும் உள்ளார். எல்லோருடைய சார்பிலும் நான் சிங்களத்தில் உரையாடுவேன்”என கூறினார்.

“சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் எந்த வித்தியாசமுமில்லை. எல்லோருக்கும் பசி ஏற்படும். சுத்தமான சுவையான மற்றும் விலை மலிவான எதையாவது உண்பதற்காக அவர்கள் இங்கு வருகின்றனர். வருபவர்களுக்கு எங்களிடமுள்ள சிறந்தவற்றை வழங்குவதே எங்கள் கடமையாகும். யாழ்ப்பாணத்திற்கான தங்கள் பயணத்தின்போது இங்கே தரித்து நிற்கும் சிங்களவர்களே மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

வன்னியின் சுவையைப் பற்றிய முதல் அனுபவமாய் இருப்பதனால் சிங்களப் பிரயாணிகளுக்கு இது ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. “அவர்கள் இங்கு வரும் பொழுது நீண்ட நேரம் நிற்பதற்கென வருவதில்லை. விபரங்கள் பற்றி எங்களிடம் கேட்பார்கள். எங்களிடம் பழரசம் வாங்குவார்கள். மேலதிகமாகப் பணம் கொடுப்பவர்களும் அவர்களில் உள்ளனர்.”

வன்னிக்கென்றே தனித்துவமான சைவ அல்லது மரக்கறி உணவுகளே அங்கு தயாரிக்கப்படுகின்றன. தங்கள் காலை உணவாகத் தோசையை உண்ணும் பெரும்பாலான சிங்களவர்கள் தங்களின் வாழ் நாளில் முதன்முறையாகப் பூரியை உண்கிறார்கள். பூரியை எவ்வாறு தயாரிப்பதென அவர்கள் கேட்ட பொழுது தான் குழைத்துக் கொண்டிருந்த மாவைப் பூமலர் தன்னருகே இழுக்கிறாள்.

அவைகளை எவ்வாறு செய்வதென அவள் விபரிப்பதுடன் வீட்டிலே செய்து உண்ணும்படி தெற்கிலுள்ள உறவுகளுக்குப் பரிந்துரைக்கிறாள். “சிங்கள மக்கள் வன்னியிலுள்ள உணவு வகைகளின் சுவையைப்பற்றி மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாது இவ்விடத்தின் சுத்தம் பற்றியும் புகழ்கின்றனர்.

/
இராசா இலெட்சுமியின் கணவனுக்கு இரத்தாசியத்தில் பிரச்சனை உள்ளபடியால் அவர் வேலை செய்ய முடியாதவராய் இருக்கிறார். ஆகையால் அவர் குடும்பத்தைக் கவனிப்பதற்குப் பொறுப்பாக இருக்கிறார். போலியோ வருத்தம் காரணமாக கௌரியின் கணவன் ஊனமுற்றவர் என்பதனால் வாடிக்கையாளர்கள் சிலர் அவளுக்கு உதவி செய்வதுபோல இவருக்கும் உதவிசெய்வார்கள்.

“நாங்கள் சிங்களவர் மீது சந்தேகம் கொண்டவர்களாயிருந்தோம். இரு சாராரும் அதிக வலியை அனுபவித்துள்ளோம். ஆனால் இது போன்ற அனுபவங்களினால் அவை அழிக்கப்பட்டுள்ளன. நான் இரண்டு பிள்ளைகளின் தாய். நான் அவர்களுக்கும் அந்தப் பாடத்தைக் கற்பிப்பேன். ஆனால் இரு பக்கங்களிலுமுள்ள சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டுவதைக் காணும்பொழுது கவலையடைகிறேன்” என்று அனுராதா கூறினார்.

வாழை இலையிலே சூடான தோசையை வைக்கும்போது கௌரி “சிங்களவர்கள் எங்கள் சகோதரர் போன்றவர்கள். ஒரு வாய் சோறு எல்லாவற்றையும் மாற்றிவிடும். உயிர் வாழ்வதற்காகவே எல்லாம் நடைபெறுகிறது” எனவும் கூறினார்.