Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

கிராமங்களில்…
வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் சகவாழ்வு

“எனக்கு சிங்களம் மட்டும்தான் தெரியும். ஆனாலும் எங்களுடைய கிராமத்தில் அறுவடை செய்யும் சோளத்தை இங்கு கொண்டு வந்து முஸ்லிம், தமிழ் மக்களுக்கு விற்பனை செய்கிறேன். சிங்களம் தெரிந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் என் வியாபாரத்திற்கு உதவி செய்கிறார். “

09.10.2018  |  
அம்பாறை மாவட்டம்

“முன்பெல்லாம் இங்கு நான் வந்ததில்லை. ஏதாவது செய்திடுவாங்க என்ற பயம் இருந்தது. இப்ப எந்த பயமும் இல்லாமலுக்கு நாங்களும் வாரம். அவங்களும் எங்கட பிரதேசத்துக்கு வந்து போகிறார்கள். இப்பா எனக்கு இங்க வந்தாத்தான் தொழில். எல்லா மீன்களையும் இங்க லாபத்துக்கு வாங்கலாம். இந்த சூழல் எவ்வளவோ நல்லம். இந்த நிலைமை தொடர்ந்து இருக்கணும் என்று தான் நான் பிரார்த்திக்கிறேன்.” என்று களுதாவளையைச் சேர்ந்த மீன் வியாபாரியான வைரமுத்து(தமிழ்) கூறுகிறார்.


நம்பிக்கையின் அடிப்படையில் பலருக்கு கடனுக்குத் தான் நாங்க மொத்தமா விற்பனை செய்து வாறம்.

இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இருந்த இன முரண்பாடுகள்,யுத்தம் எல்லாம் வைரமுத்து போன்ற ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த மனிதர்களையும் தங்களுடைய இனங்களுக்குள்ளே அவர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது. அம்பாறை மாவட்டம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் செறிந்து வாழும் மாவட்டமாகும். ஆனாலும் இங்குள்ள மக்கள் தனித்தனி இனக் குழுமமாகவே வாழ்ந்து வந்தனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஆகிய கிராமங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களாகும். தமிழ், சிங்கள மக்களின் தொடர்புகள் இங்கு குறைவே. தற்போது மெல்ல மெல்ல இனங்களுக்கிடையேயான உறவு கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது
“நான் யுத்தத்திற்குப் பிறகுதான் இங்க வந்து தொழில் செய்கிறேன். நான் மரக்கறிகளை கொண்டு வந்து இங்குள்ள வியாபாரிகளுக்குக் குடுத்திற்று மீன்களை வாங்கிச் சென்று எனது கிராமத்தில் விற்பனை செய்கிறேன்.” என்று கூறும் உபாலி ஆரியசிங்ஹ(சிங்களம்) மொனராகலையைச் சேர்ந்தவர்.

/
“மாளிகைக்காடுத் துறையில் கிட்டத்தட்ட 40 மீன்வாடிகள் இருக்கு. இங்க பல இடங்களிலிருந்தும் மீன்கள் கொண்டுவாறம். இதை மொத்தமா வாங்க சிங்கள தமிழ் மக்கள் வாறினம். நம்பிக்கையின் அடிப்படையில் பலருக்கு கடனுக்குத் தான் நாங்க மொத்தமா விற்பனை செய்து வாறம். அவர்களும் நம்பிக்கையோடு கடனைத் திருப்பிக் கொண்டு வந்து தருவார்கள். யுத்தம் இல்லாம சந்தோசமா இருக்கிறம்.” வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து இங்கு குடியேறி வாழ்ந்துவரும் ஏ.டீ.ஏ. பாயிஸ் கூறுகிறார்(முஸ்லிம்).

/

மிக நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்யும் இவர் இப்பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களையும் அதேபோன்று ஹம்பாந்தோட்டை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களையும் வாங்கி மொத்தமாக சிங்கள மற்றும் தமிழ் மீன் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

“நான் திஸ்ஸ மஹாராமவில இருந்து இங்க வந்து மீன் வாங்கிக்கொண்டுபோய் விக்கிறன்.அதுதான் என் குடும்பத்திற்கு சாப்பாடுபோடுது” என்கிறார் சுசில் பிரியந்த.

மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்போர்

இந் நாட்டில் தொழில் ரீதியாக பலர் பல்வேறு வகைகளில் தமது வாழ்வாதாரத்தைத் தேடிக் கொள்கின்றனர். அதிலும் அன்றாடம் தொழில் செய்து தமது குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களுக்கு சமூக சூழல் என்பது இன்றியமையாதது. அவ்வாறான மக்கள் தமக்கு தொழில் வாய்ப்பு எங்கு இருக்கிறதோ அங்கு சென்று தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வர். இவ்வாறு தொழில் புரிபவர்தான் சுசில் பிரியந்த.

இவர் போன்று பலர் இத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு இன முரண்பாடுகளற்ற அமைதியான சூழல் அமைவது என்பது அவர்களது வாழ்வாதாரத்துக்கு எவ்வளவோ மிக முக்கியமானதாக உள்ளது. வணிகம் என்பது எல்லோரையும் இணைக்கும் ஒரு விடயமாகவும் இருப்பதைக் கொடுத்து இல்லாததை வாங்கும் தத்ததுவமாகவும் இந்த சாதாரண மக்களிடையே நிலவிவருகிறது. சிங்களம் ,தமிழ், முஸ்லிம் என மக்கள் தனித்தனியே நிற்காது ஒருவரக்கொருவர் உதவிசெய்தும் பொருட்களைப் பரிமாற்றியும் தமது அன்றாட வாழ்வைக் கொண்டு செல்கின்றனர்.

/
“நான் அம்பாறை உஹனையைச் சேர்ந்தவன். எனக்கு சிங்களம் மட்டும்தான் தெரியும். ஆனாலும் எங்களுடைய கிராமத்தில் அறுவடை செய்யும் சோளத்தை இங்கு கொண்டு வந்து முஸ்லிம், தமிழ் மக்களுக்கு விற்பனை செய்கிறேன். இங்கு சிங்களம் தெரிந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் என் வியாபாரத்திற்கு உதவி செய்கிறார். அவர் தமிழில் கதைத்து என்னுடைய பொருட்களை விற்றுத் தருவார்.” என்று கூறும் சோள வியாபாரியான சனே சேனாரத்ன கிழமைக்கு ஒரு முறை இங்கு வந்து வியாபாரம் செய்துவருகிறார். மொழி தெரியாததை சேனாரத்ன ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை.

“இந்த மாளிகைக்காடு பிரதேசத்தில் 49 வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இக் காலத்தில் பல இனக் கலவரங்களையும் வன்செயல்களையும் சந்தித்திருக்கிறேன். அயல் கிராமமான காரைதீவில் இருக்கும் தமிழ் மக்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுவார்கள். அதேபோன்று முஸ்லிம் மக்கள் அங்கு போவதற்கு அச்சப்படுவார்கள். ஆனால் இன்று அந்த நிலைமை மாறி நாட்டின் பல பாகங்களிலிருந்தும் எல்லோரும் மீன்கள் மற்றும் பொருட்களை இங்கு விக்கிறார்கள். வாங்குகிறார்கள். மிகவும் சந்தோசமாக இருக்கிறது.” என்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் வியாபாரியும், அந்நூர் ஜும்மாப் பள்ளித் தலைவருமான ஏ.பௌஸர்.