Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

உறவுகளுக்காக….
10 வருடங்களாக காத்திருக்கிறார்கள்.

“என்னிடம் பணமேதும் இல்லாமற் போனதும் எனது திருமண மோதிரத்தை மனவேதனையுடன் அடகு வைத்ததுடன் எனது பிள்ளைகளின் நகைகளையும் விற்று விட்டேன். ஆனால் அதெல்லாம் வீண் முயற்சியாகிவிட்டன. இதுவரையில் எனது கணவனைப்பற்றி எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரைக் கண்டுபிடிக்க உதவுவதாக வாக்களித்தவர்களிடமிருந்தும் எதுவும் கிடைக்கவில்லை”

27.11.2018  |  
கிளிநொசசி மாவட்டம்

2009 ம் ஆண்டிலிருந்து காணாமற்போன தமது உறவினர்களுக்காகத் தமிழ் குடும்பங்கள் வெளிப்படுத்தும் எதிர்ப்பு கடந்த ஜுலை மாதத்துடன் 500 நாட்களை எட்டி விட்டது.

“எனது கணவர் இருக்கும் இடம் சம்பந்மான தகவலை அறிவதற்காக என்னிடம் இருந்த கடைசிச் சதம் வரை முழுப் பணத்தையும் செலவு செய்துவிட்டேன்” என்று யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து தனது கணவனைத் தேடி அலையும் ஒரு தமிழ்ப் பெண் கூறினார். “என்னிடம் பணமேதும் இல்லாமற் போனதும் எனது திருமண மோதிரத்தை மனவேதனையுடன் அடகு வைத்ததுடன் எனது பிள்ளைகளின் நகைகளையும் விற்று விட்டேன். ஆனால் அதெல்லாம் வீண் முயற்சியாகிவிட்டன. இதுவரையில் எனது கணவனைப்பற்றி எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரைக் கண்டுபிடிக்க உதவுவதாக வாக்களித்தவர்களிடமிருந்தும் எதுவும் கிடைக்கவில்லை” எனத் தொடர்ந்து கூறினார்.

/

தனது கணவனைக் கண்டுபிடிக்க உதவி செய்வதாக வாக்குறுதியளித்த ஒரு பொது மகனுக்கும் இராணுவத்தினர் இருவருக்கும் தான் கைக்கூலி கொடுக்க வேண்டியிருந்ததென இந்த நிலைகுலைந்து போயிருக்கும் குடும்பப் பெண் கூறினார். இதேபோன்று வடக்கிலுள்ள ஏனைய குடும்பங்களும் படைத்தரப்பினருக்கு அல்லது பொது அமைப்புகளின் முகவர்களுக்கு கைக்கூலி அல்லது பணயத் தொகைப் பணத்தைக் கொடுப்பதற்காகத் தமது உடமைகளை இழந்துள்ளனர். எவ்வளவு தொகைப் பணத்தைச் செலுத்தினார்கள் என்று கவலைப்படுவதற்கு அப்பால் தங்கள் அன்பிற்குரியவர்கள் பற்றிய தகவல் எதுவும் இல்லாமலேயே இருக்கின்றனர். யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் முடிவடைந்த 2009 ல் இருந்து காணாமற்போன தங்கள் குடும்பத்தினரைக் கண்டுபிடிப்பதற்கான அரசாங்க நடவடிக்கைகள் மந்தகதியில் இருப்பதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகக் கூட்டுச் சேர்ந்தவர்களில் இவர்களும் அடங்குவர்.

இவ்வாறு கூட்டுச் சேர்ந்தவர்கள் 500 நாட்களாக எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் பின்வருவன அடங்கலான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சகல இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய புலன்விசாரணையும் அவைகளின் பட்டியலையும் வெளியிடுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (1978 லிருந்து வருடா வருடம்) தடுத்து வைக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடுதல் மற்றும் இலங்கையின் சமாதானத்திற்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின்படி உள்நாட்டு யுத்தம் முடிவுற்றபோது இலங்கை ஆயதப் படைகளிடம் சரணடைந்த வர்களின் பதிவேடுகளை வெளியிடுதல்.

ஐ.நா வின் மனித உரிமைகள் வல்லுனரான ஹ{வான் மென்டிஸ் கூறுகையில் “ உள்நாட்டு யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் 16,000 த்திலிருந்து 22,000 வரையானோர் (அநேகமானோர் முன்னாள்  புலிகள்) காணாமற்போனதாக அறிக்கையிடப்பட்டது. அதன் விளைவாக 1994 க்கும் 2013 க்கும் இடையில் பல விசாரணைக் குழக்களை நிமனம் செய்த பின்னர் இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை (OMP) 2017 ல் ஸ்தாபித்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இது மேலுமொரு காரியாலயமாக இருக்குமோவென ஐயம் வெளிப்படுத்து கின்றனர்

இந்தக் குடும்பங்கள் ஒரு தசாப்தகாலம் வரையிற் காத்திருந்தனர். இதனால் அவர்களைப் பலவிதமான கால நிலைகளiயும் அச்சுறுத்தல்களையும் தாங்கிக் கொண்டு 500 நாட்களாக வீதியில் இறங்கிப் போராட வைத்துள்ளது.

ஜனாதிபதி, இராணுவம், வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் ஆகியோரிடம் கையளிப்பதற்காக 39 நிறுவனங்களும் 242 மக்களும் கையொப்பமிட்ட ஒரு ஆவணத்தில் “தயவு செய்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை வழங்குங்கள். அவர்களின் மனங்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு அதுதான் ஒரேயொரு வழி” என எழுதியிருந்தது.