Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

ஆதிவாசிகளின் தலைவர்
இலங்கை சிக்கலான நிலையையை நோக்கி நகர்கின்றது.!

விஜயன் குவேனியை கைவிட்டதானது இலங்கையின் வரலாற்றிலான முதலாவது விவாகரத்தாக அமைந்தது. சண்டை பிடித்தல், கொலை செய்தல் மற்றும் மூத்தவர்களை ஒதுக்குதல் போன்ற எல்லா மோசமான நிலைமைகளும் எமது சமூகத்திற்குள் ஊடுருவியது. விஜயனும் அவனது நண்பர்களும் இந்தியாவில் முறைகேடாக நடந்துகொண்டதால் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களது வருகையுடன் எமது ஒற்றுமை சீர்குலைந்தது.

19.08.2019  |  
கண்டி மாவட்டம்
ஆதிவாசிகளது (வேடுவர்களது) தற்போதைய தலைவராக ஊரு வரிகே வன்னியலத்தோ இருந்து வருகின்றார். நாட்டின் அரசியல் பொருளாதார கலாச்சார நிலைமைகள் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக அவர் கட்டமரனுக்காக அளித்த செவ்வி.
த கட்டுமரன் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள 
நிலைமைகள் தொடர்பாக உங்களது கருத்து என்ன?

பதில் : நாடு குழப்பத்தில் இருக்கின்றது. தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களாகிய அனைவருமே ஒருவரை ஒருவர் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்கின்றனர். நாட்டின் எதிர்காலத்திற்கு இது நல்லதாக இல்லை. சொல்வதொன்று, செய்வதொன்று என்ற நிலையில் இருக்கும் தலைவர்களை மக்கள் தொடர்ந்தும் நம்புவதற்கு தயாராக இல்லை. இந்நிலையில் மக்கள் இன, மத, குல அடிப்படையில் மட்டுமல்லாமல் குழுக்கன் என்ற அடிப்படையிலும் பிரிந்துவிட்டனர். சமூகத்தின் மௌனம் தற்காலிகமானதாகும். நடந்து முடிந்த நிலைமைகளை நோக்கினால் அங்கே நெருப்பு இல்லை. ஆனால் எதிர்காலத்தை நாங்கள் தீ வைத்து நாமாகவே அழித்துக்கொள்ளும் நிலை இருக்கின்றது.

த கட்டுமரன் : கடந்த காலப்பகுதிகளில் இந்த இனங்களுக்கிடையில் 
ஐக்கியம் காணப்பட்டதா? நாங்கள் சமாதானமாகவும் சக 
வாழ்வுடனும் வாழ்ந்து வந்தோமா?

பதில் : எமது மூதாதையர் சமாதானமாக வாழந்து வந்தனர். யக்ஷ, நாகர், தேவா மற்றும் ரக்ஷ என்ற நான்கு பிரிவினர் வாழ்ந்தனர். இவர்களை இணைத்து சிவ் ஹெல என்று அழைக்கப்பட்டது. விஜயனின் வருகையின் பின்னர் இந்த சிவ் ஹெல இனத்தவர்கள் சிங்களவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த நான்கு வம்சத்தவர்களும் மன்னர்களால் ஆளப்பட்டதோடு அப்போது விவசாயத்தால் தன்னிறைவு கண்டிருந்தது. ஆதிக்குடிகளான யக்ஷ வர்க்கத்தால் எமது அணைக்கட்டுகள் நிர்மாணிக்கப்பட்டன. நாட்டின் பாதைகள் ரக்ஷ குழுவின் பொறியியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்டன. நாகர் என்ற ஆதிவாசிகளால் கடல் மார்க்கம் முன்னேற்றப்பட்டது.

Photo courtesy http://www.srilankanindigenous.com

எல்லா ஆதிவாசிகளும் நாட்டின் நலன் கருதி ஒன்றுபட்டவர்களாக உழைத்தனர். விஜயனின் வருகையுடன் இதில் மாற்றம் ஏற்பட்டது. விஜயன் குவேனியை கைவிட்டதானது இலங்கையின் வரலாற்றிலான முதலாவது விவாகரத்தாக அமைந்தது. சண்டை பிடித்தல், கொலை செய்தல் மற்றும் மூத்தவர்களை ஒதுக்குதல் போன்ற எல்லா மோசமான நிலைமைகளும் எமது சமூகத்திற்குள் ஊடுருவியது. விஜயனும் அவனது நண்பர்களும் இந்தியாவில் முறைகேடாக நடந்துகொண்டதால் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்களது வருகையுடன் எமது ஒற்றுமை சீர்குலைந்தது.

த கட்டுமரன் :இனம் மற்றும் மதம் என்ற கோட்பாட்டை நீங்கள் 
நிராகரிக்கின்றீர்களா?

பதில் : நாங்கள் எல்லோரும் மனிதர்கள். இனம், மதம், மற்றும் குலம் வந்தது இரண்டாவதாக. சமூகத்தில் நாம் மனிதாபிமானத்தை மறந்து இரண்டாவதை முக்கியமானதாக கருதுகின்றோம். தாழ்ந்த குல சாதியான ரொடி குலமானாலும் இரத்தத்தின் நிறம் சிவப்பாகும். உயர் சாதியினதும் அதே சிவப்பு நிறமாகும். எமது சமூகத்திற்கான நல்லது அல்லது தீயது எது என்பதை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இனம், மதம் மற்றும் குலம் என்ற அடிப்படையில் ஒதுக்குவதை நான் கண்டிக்கின்றேன்.

த கட்டுமரன் : காட்டில் யானைகள், புலி, கரடி என்று எல்லாம் 
வாழ்கின்றன. அவ்வாறே மக்களுக்கிடையிலும் வெவ்வேறான 
இனங்கள் உள்ளன. இந்த பன்முகத்தன்மையையும் சமூக 
நலனை நோக்கிய பங்களிப்பையும் நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகின்றீர்கள்?

பதில் : யானைகள், புலி, கரடி, பன்றி, மான், குரங்கு என்று பலவிதமானவைகள் காட்டில் வாழ்கின்றன. இந்த எல்லா மிருகங்களும் காட்டிற்குரியனவாகும். இந்த மிருகங்கள் ஒரே தண்ணீரை அருந்துகின்றன. ஒரே நிலத்தில் புல் மேய்கின்றன. அவைகள் ஒன்றாகவே உறங்குகின்றன. இந்த பன்முகத்தன்மை காரணமாக காடு அழகாக இருக்கின்றது. ஒரே இனமான மனிதர்கள் என்ற இனமும் அதே போன்றதாகும். இன,மத, வேறுபாடுகளால் எமது தலைகள் நிரம்பி ஒரே குழப்பமாக மாறி இருக்கின்றது. மிருகங்கள் காட்டில் உணவு தேடுவதற்காக மிகவும் கடுமையாக உழைக்கின்றன. ஆனால் மக்கள் இந்த இலட்சியத்திற்கு அப்பால் சென்றுள்ளனர். ஏனெனில் அவர்களிடையில் காணப்படுகின்ற பொறாமை, ஆடம்பரம், அதிகார மோகம் என்பனவாகும். பலவிதமான பிரச்சினைகள் ஏற்பட இந்த நிலைமைகள் காரணமாகின்றன.

த கட்டுமரன் :இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்கம் மற்றும் 
சமாதான செயற்பாடுகளுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏற்படுத்தி 
இருக்கின்ற தாக்கத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் :இந்த தாக்குதலில் ஒரு சிலரே சம்பந்தப்பட்டுள்ளனர். எந்தவிதமான சமூகமானாலும் இப்படியான பிரச்சினைகளை காணலாம். ஒரு யானை விவசாய நிலத்திற்குள் பிரவேசித்து பயிர்களை நாசம் செய்துவிட்டு பொழுதுபுலர்வதற்குள் காட்டிற்கு வந்துவிடுகின்றது. நாம் என்ன செய்கின்றோம் என்றால் ஒரு யானையின் செயலுக்காக எல்லா யானைகளையும் திட்டுகின்றோம். அதுபோன்று எல்லா முஸ்லிம்கள் மீதும் விரல் நீட்டுவது நல்லதல்ல. இந்த தாக்குதலில் மிகவும் சிறிய எண்ணிக்கையானவர்களே சம்பந்தப்பட்டுள்ளனர். எல்லோரையும் ஏசுவதால் நாங்கள் மேலும் அவர்களை விட்டும் தூரமாகின்றோம்.

த கட்டுமரன் :இந்த நிலையில் அரசியல்வாதியின் 
பொறுப்பு எத்தகையது?

பதில் :இந்த நாட்டில் சமாதானம், சக வாழ்வுக்காக நாம் மாநாடுகளை நடத்த வேண்டி இருக்கின்றது. அவர்கள் எமது சமூகத்தில் இருந்து மிகவும் தூரமாகிவிட்டனர். சிவ் ஹெல என்ற இனத்தவர்கள் அவர்களது தேசியம், அவர்களது மதம், மற்றும் அவர்களது மொழி ஆகியவற்றை கௌரவப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்தனர். இன்று அந்த எல்லா குணங்களும் எம்மை விட்டு சென்றுவிட்டன. எமது மூதாதைய மன்னர்கள் இனம், மதம் மற்றும் சூழலுக்கு கௌரவமளித்தனர். புத்ததாச மன்னன் பிந்தென்னையில் இருந்து இங்கிணியாகலை வரையில் மூலிகைத் தோட்டங்களை உருவாக்கினார். அவை இன்றும் உள்ளன. நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வருவதை விட்டுவிட்டு இத்தகைய வேறுபாடுகள் தேசத்தை அழித்து விடுவதாக இருக்கின்றது. எல்லா கோணங்களிலும் மக்கள் பிளவு பட்டிருப்பதற்கு அரசியல்வாதிகள் பொறுப்புக் கூற வேண்டும். எமது ஆட்சியாளர்கள் இத்தகைய துர்ப்பாக்கிய நிலையில் இருந்து விடுபட்டு வெளியில் வராமல் இருப்பது கவலை தருகின்றது.