Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

மக்கள் தேவாலயத்திற்கு வருகின்றார்கள்
கொச்சிக்கடை பக்தர்கள் பேயை தோற்கடித்துவிட்டனர்!

தேவாலயத்தின் பெரும்பாலான பகுதி புனரமைப்பு செய்யப்பட்டுவிட்டது. சந்தேகங்கள் இல்லை. ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்கின்றோம். சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான ஒற்றுமை நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று நான் கருதுகின்றேன்…

20.08.2019  |  
கொழும்பு மாவட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அந்த தாக்குதல் மக்களது உள்ளங்களில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருந்ததோடு கிரிஸ்தவர்களது நம்பிக்கையிலும் பேய் பிடித்த நிலையை தோற்றுவித்திருந்தது. எவ்வாறாயினும் பக்தர்கள் மீண்டும் தேவாலயத்திற்கு வர ஆரம்பித்துவிட்டதோடு நட்புறவைக் கொண்ட அவர்களது நிச்சயமற்றிருந்த நம்பிக்கையை பலப்படுத்த நீண்ட பயணத்தை நோக்கி இரு கரம் ஏந்தி பிரார்த்தனையிலும் ஈடுபடுகின்றனர். அதே நேரம் அந்த மக்கள் மீண்டும் தேவாலயம் நோக்கி வருகின்றமையானது அவர்களுக்குள்ளேயே மறைந்து கொண்டு அவர்களை வன்முறை கலாசாரத்தை நோக்கிய மோசமான திசைக்கு வழி நடத்துவதற்காக முயற்சி செய்த பேயை தோற்கடிப்பதற்கு அவர்களால் முடிந்திருக்கின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று சேதமடைந்த கொச்சிக்கடை தேவாலயத்திற்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு ஒரு மாதத்தின் பின்னர் மக்கள் மீண்டும் வர ஆரம்பித்துவிட்டனர். அவர்களது கடவுளின் முன்னால் இருந்து அவர்கள் சமாதானத்திற்காக பிரார்த்தனை புரிகின்றனர்.
பக்தர்கள் வருவது போன்றே சிறிய வியாபாரிகளும் அவர்களது வயிற்று பிழைப்புக்காக செய்து வந்த வியாபாரங்களை மீண்டும் ஆரம்பித்து ஐக்கியமாக நடமாட ஆரம்பித்துவிட்டனர். முன்னர் இருந்தவாறு சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்கள் உட்பட அனைவரும் தேவாலயத்தை நோக்கி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்னர் நிலவிய சந்தேகங்கள் மற்றும் அச்ச நிலை நீங்கி அவர்களது முகத்தில் மகிழ்ச்சி தவழ்கின்றதை அவதானிக்க முடிகின்றது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதற்கு பின்னர் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக நாம் சில பக்தர்களிடம் கருத்துக்களை கேட்டோம். அவர்களால் சொல்லப்பட்ட பதில்கள் பின்வருமாறு.

ரி. கிரிஸ்தோபர்

ரி. கிரிஸ்தோபர் என்பவர் தலவக்கலையைச் சேர்ந்த ஒருவாராவார். அவர் மகிழ்ச்சியாக அங்கு வரும் பக்தர்களை நெருங்கி உதவிகளை செய்வதன் மூலம் அவரது தேவையை கூறி உதவி கேட்டும் வருகின்றார்.
“நாங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். நான் அறிந்த வரையில் இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருப்பதோடு தேவாலயமும் முன்பிருந்தது போன்றே புனரமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. தீவிவரவாதிகள் எமக்கிடையிலான நட்புறவை நாசமாக்க முயற்சி செய்த போதும் எல்லா முஸ்லிம்களும் தீவிவரவாதிகளைப் போன்று சிந்திப்பவர்கள் அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம். இந்த நாட்டில் நாங்கள் ஒன்றாக வாழ முடியும்” என்பதாக கிரிஸ்தோபர் கூறிவிட்டு பக்தர் ஒருவரின் கோரிக்கைக்கு உதவி செய்வதற்காக நகர்கின்றார்.


எல்லா முஸ்லிம்களும் தீவிவரவாதிகளைப் போன்று சிந்திப்பவர்கள் அல்ல என்பதை நாம் நன்கு அறிவோம்.

வத்தளையைச் சேர்ந்த ரஞ்சனி சிரிவர்தனவும் மிக நீண்ட காலமாக இந்த தேவாலயத்திற்கு வரும் ஒரு பக்தராவார்.
“நான் நினைக்கின்றேன் ஆபத்து தங்கி இருப்பது பாதுகாப்பு நடவடிக்கைகளிலாகும். நாம் முன்னர் அனுபவித்த சுதந்திரம் இப்போது இருப்பதாக உணரவில்லை. தேவாலயம் புனரமைக்கப் பட்டிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். அதற்காக பங்களிப்பு செய்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். நான் மீண்டும் எனது குடும்பத்துடன் இங்கு வந்து பூஜை நடத்தும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் முஸ்லிம்களை சந்தேகிக்கவில்லை. தீவிவரவாத்திற்குள் சிக்கியவர்கள் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர். நாம் அவர்களை அடையாளம் கண்டு எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்”

மல்சானி மொரிஸ் மகிழ்ச்சியுடன் கையில் மெழுகுவர்த்தி கட்டுடன் தேவாலயத்திற்குள் நுழைந்தாள்.
“ நான் வத்தளையில் இருந்து வந்துள்ளேன். எனது குடும்பத்தினர் வழக்கமாக கொச்சிக்கடை தேவாலயத்திற்கு வருவது வழக்கமாகும். ஆனாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இதுவே நான் முதல் முறையாக ஆலயத்திற்கு வருகின்றேன். இதற்கு முன்னர் நாங்கள் வர ஆசைப்பட்டாலும் புனரமைப்பு வேலைகளுக்காக ஆலயம் மூடப்பட்டிருந்தது. நான் பயப்படவில்லை. ஒரு சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அனைவரும் அத்தகைய குற்றவாளிகள் அல்ல. எனதும் எனது கணவரதும் நண்பர்கள் முஸ்லிம்களாவர். நாம் அவர்களுடன் முன்பைப் போலவே உறவை பேணி வருகின்றோம். எங்களது முஸ்லிம் நண்பர்கள் தவறு செய்யவில்லை என்பதை நாம் அறிவோம்” என்று மெழுகுவர்தியை ஏற்றியவராக மல்சானி கூறினாள்.

தேவாலயத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள முஸ்லிம் நபர் ஒருவரின் தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த பிரேமசிரி பெரேராவை நாம் சந்தித்தோம். அவர் அவரது மனைவியுடன் தேவாலயத்திற்கு வருகை தந்திருந்தார்.
“நாம் எமது உறவினர்களை இழந்து உதவியற்றவர்களாக உள்ளோம். நான் ஒரு டக்சி சாரதியாவேன். முன்னர் அதிகமான ஹயர் இருந்ததாயினும் தாக்குதலின் பின்னர் மக்களின் வருகை வீழ்ச்சியடைந்ததால் அவை குறைந்துவிட்டன. மக்கள் மீண்டும் தேவாலயத்தை நாடி வர ஆரம்பித்துவிட்டனர். எமக்கு அச்சத்துடன் வாழ முடியாது. நாம் பிரயாணம் செய்யவும் வியாபாரம் செய்யவும் வேண்டும். எல்லோரும் வாழ வேண்டும். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் பிரிந்து வேறுபட்டவர்களாக எதிர்காலத்தில் வாழ முடியாது. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பிரேமசிரி அவரது தேநிருக்கான கட்டணத்தை செலுத்திய வராக கூறினார்.

 

மல்சானி மொரிஸ்

கே.பி. விமலதாச என்பவர் கடந்த 33 வருடங்களாக கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகில் நடை பாதையில் மலர் மாலைகளை விற்பனை செய்யும் ஒருவராவார். பிலியந்தலையை வசிப்பிடமாகக் கொண்ட அவர் தினமும் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு வருகின்றார். தினமும் வியாபாரத்தை துவங்க முன்னர் அவர் ஆராதனை புரிகின்றார்.
“எனது கடைக்கு பக்கத்தில் உள்ள கடை ஒரு முஸ்லிம் நபருக்கு சொந்தமானதாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடைபெறும் வரையில் நாம் நண்பர்களாகவே இருந்தோம். கடந்த காலங்களை போன்றே நாம் மகிழ்ச்சியாக வாழந்தோம். இப்போது பக்தர்கள் அதிகமாக தேவாலயத்திற்கு வருவதில்லை. எங்களது வியாபாரமும் வீழ்ச்சிய டைந்துவிட்டது. அப்போது நாம் நாள் ஒன்றுக்கு ரூபா 2000 இலாபமாக உழைத்தோம். ஆனால் இப்போது அப்படி உழைக்க முடியாது. வருமானம் வீழ்ச்சியடைந்துவிட்டது. தேவாலயம் 35 நாட்களாக மூடப்பட்டிருப்பதோடு ஆலய விழாவும் பின்போடப் பட்டிருக்கின்றது. இந்தக் காலப்பகுதியில் நாங்கள் எங்களது வாழ்க்கையை எவ்வாறு ஓட்டுகின்றோம் என்பது பற்றி யாரும் கவனத்தில் எடுப்பதில்லை. நாங்கள் கோபப்பட்டால் இழப்பு ஏற்படுகின்றது என்பதோடு அர்த்தமற்ற முறையில் இழிவுபடுத்தப்படுகின்றோம்”

/

எம்.எஸ். செல்வராஜா கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்ற்கு அருகாமையில் உள்ள வாகன தரிப்பிடத்தில் கடந்த 25 வருடங்களாக ஒரு டாக்சி சாரதியாக கடமையாற் றுபவராவார். நாம் அவரை சந்திக்க சென்ற போது அவர் ஆசனத்தை சரி செய்தவராக எங்களை ஏற்றி செல்ல தயாரான நிலையில் “எங்கே போக வேண்டும்” என்று கேட்கின்றார்.
நாம் ஊடகம் ஒன்றில் இருந்து வருகின்றோம் என்றவுடன் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. “கொச்சிக்கடை தேவாலயத்தை அண்மித்ததாக ஜிந்துப்பிட்டியில் நான் வசிக்கின்றேன். இப்போது பிரச்சினை முடிந்துவிட்டது. மக்கள் தேவாலயத்திற்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். பாதுகாப்பும் குறைக்கப்பட்டிருக்கின்றது. தேவாலயத்தின் பெரும்பாலான பகுதி புனரமைப்பு செய்யப்பட்டுவிட்டது. சந்தேகங்கள் இல்லை. ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்கின்றோம். சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான ஒற்றுமை நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று நான் கருதுகின்றேன். கடந்த 05 வாரங்களாக மூடப்பட்டிருந்த பாதையும் இப்போது திறக்கப்பட்டிருக்கின்றது. தேவாலயத்திற்கு வரும் மக்களை நாம் சமமாக மதித்து வேறுபாடு காட்டாமல் நல்ல முறையில் கவனிக்கின்றோம்” என்று செல்வராஜா கூறினார்.

மக்கள் நிதானமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். கொச்சிகடை தேவாலயத்திற்கு நாங்கள் செல்வதன் மூலம் தீவிவரவாதிகளின் தவறான வழி நடத்தலுக்கு உள்ளாகக் கூடாது என்பதை நாம் புரிந்து கொண்டுவிட்டோம். இந்த சந்தர்ப்பத்தில் சமாதானத்தை மீளக்கட்டியெழுப்புவது ஒன்றே அனைவரதும் வெற்றியாகும்.

படங்கள் : உபுல் தம்மிக