Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தீவிவரவாதத்திற்கு சிறந்த பதில்:
‘ஒரே இலங்கை’ சமூகத்தை கட்டியெழுப்புதல்!

இன ரீதியான வேறுபடுத்தலுக்குட்பட்ட வெவ்வேறான பாடசாலை முறையும் நாட்டிற்கு அவசியமற்றதாகும். மாறாக எல்லா இனங்களும் ஒருமித்து பயணிப்பதற்கான சூழ்நிலை வளப்படுத்தப்பட வேண்டும். வேறுபாடுகளும் தரப்படுத்தல்களும் பாடசாலை மட்டங்களில் இருந்து ஆரம்பமாவதால் அது நிறுத்தப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் இருந்தே மாணவர்கள் அவர்களது உரிமைகள் என்ன என்பது தொடர்பான அறிவை கற்றுக் கொள்வதற்கும் மற்றவர்களது உரிமைகள் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கும் அதற்கு மதிப்பளித்து தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் பழகுவதற்கு ஏற்ற வகையில் மனித உரிமைகள் தொடர்பான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்….

19.09.2019  |  
கொழும்பு மாவட்டம்

ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் இன வேறுபாடுகளற்ற முறையில் தேசிய சமூகங்களை கொண்ட தேசத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரே வழியாக அமைவது தேசிய சமூகமாக நாட்டை கட்டியெழுப்புவதாகும் என்று இலங்கை பொது சுகாதார குழு (கில்ட்) என்ற அமைப்பு கூறுகின்றது. இந்த சுகாதார சேவைத்துறையில் பரிச்சயம் கொண்ட கில்ட் ஆனது 57 சிவில் சமூக அமைப்புக்களையும் இன்னும் முக்கியமான தனி நபர்களையும் கொண்ட அமைப்பாகும். அது தொடர்பாக கட்டுமரனுக்காக வழங்கிய நேர்காணலின் போது இந்த அமைப்பின் முன்னாள் ஆலோசகரும் பொறுப்பதிகாரியுமான சிரிமால் பீரிஸ் தெரிவிக்கையில் இந்த கருத்துக்களை எம்மிடம் முன்வைத்தார்.

த கட்டுமரன் : – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை நிலையை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

இலங்கையும் அதன் மக்களும் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்டனர். அதுவொரு துரதிஷ்டவசமானதும் மிலேச்சத்தனமானதுமான நிகழ்வாகும். இந்த தாக்குதல் நடைபெற்று 22 நாட்கள் கடந்துள்ள நிலையில் என்ன நடந்திருக்கின்றது என்றால் அது பயங்கரவாதம் அல்ல. அதுவொரு தீவிவரவாதமாகும் என்ற தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பது வியப்பாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் இந்த நாடு தீவிவரவாதத்தின் பாதையில் வழி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒரு பண்பாடான சமூகத்தில் இவ்வாறான பயங்கரவாத மற்றும் தீவிவரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது.

சிங்கள பௌத்த தலைவர்கள் புத்த மகானின் தூய்மையான பௌத்த தர்ம கோட்பாட்டின் வழியில் சரியான திசையில் சிங்கள பௌத்த மக்களை வழி நடத்த வேண்டும். ஒன்றாக வாழ கற்றுக்கொள்ள வேண்டிய மக்களாகிய எம்மை பிரிவினையை நோக்கி அதே சிந்தனைகளும் வழிகாட்டல்களும் இட்டுச் செல்வதாக அமைந்திருப்பது நாட்டிற்கு துரதிஷ்டவசமானதாகும்.

த கட்டுமரன்: – பிரசைகள் என்ற முறையில் எமது தேசிய கடப்பாடு என்ன?

எல்லா மதங்களினதும் நடவடிக்கைகளும், மரபுகளும் நாட்டின் பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். இன ரீதியான வேறுபடுத்தலுக்குட்பட்ட வெவ்வேறான பாடசாலை முறையும் நாட்டிற்கு அவசியமற்றதாகும். மாறாக எல்லா இனங்களும் ஒருமித்து பயணிப்பதற்கான சூழ்நிலை வளப்படுத்தப்பட வேண்டும். வேறுபாடுகளும் தரப்படுத்தல்களும் பாடசாலை மட்டங்களில் இருந்து ஆரம்பமாவதால் அது நிறுத்தப்பட வேண்டும். பாடசாலை மட்டத்தில் இருந்தே மாணவர்கள் அவர்களது உரிமைகள் என்ன என்பது தொடர்பான அறிவை கற்றுக் கொள்வதற்கும் மற்றவர்களது உரிமைகள் என்ன என்பதை புரிந்து கொள்வதற்கும் அதற்கு மதிப்பளித்து தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் பழகுவதற்கு ஏற்ற வகையில் மனித உரிமைகள் தொடர்பான பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.

த கட்டுமரன் : – இதற்கான தலைமைத்துவத்தை யார் முன்னெடுக்க வேண்டும்?

மக்கள் நவீன மயப்படுத்தப்பட்ட சமூகத்தில் காலத்திற்கு ஏற்றவிதமாக புதிய கருத்துக்களை சாதகமான போக்கில் சிந்திக்கக் கூடியவர்களாக மாற வேண்டும். மதத் தலைவர்கள் மாற்றுக் கருத்தக்களை ஏற்று அவற்றுக்கு மதிப்பளிக்கும் மனோபக்குவத்தை பெற வேண்டும். குறிப்பாக மனிதர்கள் என்ற முறையில் அர்த்தமுள்ள அடிப்படையிலான சமூக பங்களிப்பை வழங்கும் வகையில் இளைஞர்கள் நெறிப்படுத்தப்பட வேண்டும்.