Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சுஜீவனி ஒரு தனிமனிசியாக….
வாழ்க்கையை அளப்பதற்கு இனம் ஒரு அளவுகோல் அல்ல!

“நான் விரைவாக செயல்பட்டேன். அவர்களது பெறுமதியான விலை மதிப்பான பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டேன். எனது வீட்டைச் சற்றி குடியிருந்த மூன்று வீடுகளைச் சேர்ந்த முஸ்லிம் நண்பர்களை நான் எனது வீட்டுக்குள் மறைவான இடத்தில் ஒழிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்…..

25.09.2019  |  
குருநாகல் மாவட்டம
ஏ.கே. ஹலீமா பீவி - சுஜீவனி சந்திமா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியான (2019)மே மாதம் 13ஆம் திகதி சுமார் 500 பேர்கொண்ட இளைஞர் கூட்டம் ஒன்று நாத்தாண்டிய நகரத்தில் காடைத்தனம் புரிந்தனர். நகரம் சின்னாபின்னப்படுத்தப்பட்டது. வன்முறை வெடித்தது. முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. நாசகார செயல்கள் தும்மோதரை மல்லகலை குடியிருப்பு வரை பரவியது. நிராயுதபாணியான பொதுமக்கள் நிலைமைகளை எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் உறைந்து போன நிலையில் மறைந்திருந்து பாதுகாப்பு தேடினர்.

அத்தகைய வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது தும்மோதரை மல்லகலே குடியிருப்பைச் சேர்ந்த சுஜீவனி சந்திமா திட்டமிட்டபடி அவரது முஸ்லிம் நண்பர்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருந்த ஒருவராவார். ஒரு முடிவுக்கு வந்தவராக அவரது வீட்டின் முன் வாயில் ஊடக வெளியே வந்து தோடத்தின் ஊடாக கிராமத்தில் வன்முறையில் ஈடபட்டிருந்த காடையர் கும்பலின் நடுவில் சென்றார். அந்தக் கும்பலின் கைகளில் தடிகள், பொல்லுகள், இரும்புக்


வீரம் மிக்க இந்த பெண்ணின் கடுமையான குரல் அங்கிருந்தவர்களை திரும்பிப் பார்க்கச் செய்தது!

கம்பிகள், குளாய்கள் மற்றும் வாள்கள் போன்ற ஆபத்தான ஆயுதங்கள் இருந்தன. ஒருவிதமான தென்புடன் கைகால்களை ஆட்டிக்கொண்டு உரத்த குரலில் சப்தமிட்டார். “இது எமது மக்களின் வீடுகள். அவற்றை நாசம் செய்து அழிக்க வேண்டாம்”. வீரம் மிக்க இந்த பெண்ணின் கடுமையான குரல் அங்கிருந்தவர்களை திரும்பிப் பார்க்கச் செய்ததோடு பயம் கொண்டவர்களாக சிதறி ஓடுவதைக் காண முடிந்தது. அப்போது அவரால் மூன்று வீடுகளையும் 14 குடும்பங்களையும் பாதுகாக்க முடிந்தது.
“13 ஆம் திகதி நான் கொட்டாறுமுல்லையில் இருந்து திரும்பி வரும் போது அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் கூடிநின்று கல்லெறிந்து கொண்டிருந்தனர். அவர்கள் நகரத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களை அழித்துக்கொண்டிருந்தனர். நான் நினைத்தேன் நான் வாழும் பிரதேசமான மல்லகெலே பகுதியிலும் முஸ்லிம்கள் குடியிருப்பதால் இந்தக் கும்பல் அங்கும் வரக்கூடும் என்று. நாம் முஸ்லிம்களை சுற்றியே வாழ்கின்றோம். அவர்கள் மிகவும் நல்லவர்கள். எனவே அவர்களைப் பாதுகாக்கத் துணிந்தேன்.”

சுஜீவனீ மகிழ்ச்சியுடன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது, “நான் விரைவாக செயல்பட்டேன். அவர்களது பெறுமதியான விலை மதிப்பான பொருட்களை பாதுகாப்பாக மறைத்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டேன். எனது வீட்டைச் சற்றி குடியிருந்த மூன்று வீடுகளைச் சேர்ந்த முஸ்லிம் நண்பர்களை நான் எனது வீட்டுக்குள் மறைவான இடத்தில் ஒழிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். சில நிமிடங்களில் இளைஞர் கூட்டம் திரண்டு வந்து எங்களது கிராமத்தை சுற்றி வளைத்தனர். முஸ்லிம்களது உடமைகளை நாசமாக்கி அழிப்பதற்காக அவர்கள் முன்னோக்கி வந்தனர். அப்போதுதான் நான் அதைத் தடுத்தேன். அந்த மூன்று வீடுகளுக்கும் எந்தவிதமான அழிவும் வராமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்தேன்”.

ஏ.கே. ஹலீமா பீவி

ஏ.கே. ஹலீமா பீவி என்ற 64 வயதுடைய பெண்மணியால் இன்றும் கூட அப்போது என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை. “சுஜீவனீ எனது வீட்டிற்கு முன்னால் வாழ்ந்து வரும் ஒருவராவார். பாதையின் பக்கத்தில் இருந்து அவர் பலமான முறையில் சப்தமிட்டவராக எங்களை அவரது வீட்டுக்குள் சென்று மறைந்து கொள்ளுமாறு கோரினார். என்ன நடக்கப் போகின்றது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நிமிடங்களில் எமது கிராமத்தை சுற்றி 500 இளைஞர்கள் அளவில் வந்து சூழ்ந்துகொண்டனர்.” இப்படி கூறும் போதே அவரது கண்கள் கலங்கி தன்னை அறியாமலே பயம் பற்றிக் கொள்வதை உணர முடிந்தது.

“சுஜீவனியின் நடவடிக்கை எங்களது பாராட்டுக்குரியதாக மட்டும் அமையவில்லை. அவரது கடுமையான பேச்சு வன்முறையாளர்களின் செயற்பாட்டில் தவறு இருப்பதை உணரச் செய்தது. இந்த நிகழ்வு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. சிங்களவர்கள் எங்கள் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்தனர். சிலர் அவர்களுக்கு ஏற்படப் போகின்ற துன்பங்களையும் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் வீரவேசமான முறையில் உடனடி நடவடிக்கையில் இறங்கி அயலவர்கள் என்ற முறையில் எங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்ததற்கு உயிருள்ள வரை நாம் அவர்களுக்கு நன்றிக்கடன்செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.” என்றபோது ஏ.கே. ஹலீமா பீவியின் கண்கள் கலங்கின.