Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

காத்தான்குடியில்..
வாராந்த நட்புறவுச் சந்தை!

காத்தான்குடியைப் பற்றி இலங்கை முழுவதிலும் ஒரு வித்தியாசமான பார்வை செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இக் கதையானது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை நாட்டில் நடைபெறும் சந்தைகளில் எங்கிருந்தும் எவரும் வந்து அவர்களது பெருட்களை விற்று பணம் தேடிக்கொண்டு போகலாம் என்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்து வருகின்றது. ஆனாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் குறிப்பிட்ட ஒரு பிரதேசம் தொடர்பாக மிகவும் வித்தியாசமான கதைகள் பரப்பப்பட்டு வந்துள்ளன. அது தொடர்பாக த […]

29.09.2019  |  
மட்டக்களப்பு மாவட்டம்

காத்தான்குடியைப் பற்றி இலங்கை முழுவதிலும் ஒரு வித்தியாசமான பார்வை செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இக் கதையானது அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை நாட்டில் நடைபெறும் சந்தைகளில் எங்கிருந்தும் எவரும் வந்து அவர்களது பெருட்களை விற்று பணம் தேடிக்கொண்டு போகலாம் என்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்து வருகின்றது. ஆனாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டின் குறிப்பிட்ட ஒரு பிரதேசம் தொடர்பாக மிகவும் வித்தியாசமான கதைகள் பரப்பப்பட்டு வந்துள்ளன. அது தொடர்பாக த கட்டுமரன் குழு களத்தில் இறங்கி ஆராய்ந்தது.

“இங்குள்ள மக்கள் செல்வந்தர்களாவர். அதனால் அவர்கள் உலோபித்தனம் இல்லாமல் நன்றாக செலவு செய்வதால் எங்களுக்கு எதையும் அங்கு விற்பனை செய்ய முடியும்” என்று பொலநறுவைiயைச் சேர்ந்த திலின மதுசங்க என்ற வியாபாரி கூறுகின்றார். அவர் காத்தான்குடி சந்தைக்கு 300 – 400 வரையான அன்னாசிக் காய்களை வியாபாரத்திற்காக கொண்டு வந்துள்ளார்.

இலங்கையில் அதிகமான சனத்தொகையைக் கொண்ட ஒரு நகரமே காத்தான்குடி ஆகும். காத்தான்குடி நகர சபையின் தலைவரின் அழைப்பின் பேரில் அங்கு வந்துள்ள திலின மதுசங்க காத்தான்குடி வாராந்த சந்தையில் வியாபாரத்தை துவங்கியுள்ளார்.

“எனது தந்தை வெலிகந்தையில் பகுதியில் விநியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தை வீட்டுக்கு கொண்டு வந்து அதை என்னிடம் கொடுத்து வாசித்துப் பார்க்கச் சொன்னார். நாட்டில் எல்லா பிரதேசங்களையும் சேர்ந்த வியாபாரிகளுக்காக காத்தான்குடி வாராந்த சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி அந்த துண்டுப் பிரசுரத்தில் காணப்பட்டது. அதில் காணப்பட்ட தொலைபேசி இலக்கத்துடன் நான் தொடர்பு கொண்டு தகவல் கேட்ட போது உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதாக எனது தொலைபேசிக்கு பதிலளித்தவர் கூறினார். அதன்பிறகு நான் காத்தான்குடி சந்தைக்கு சென்று வருவதோடு இது மூன்றாவது முறையாக பொருட்களைக் கொண்டுவந்த தருணமாகும்.” என்று திலின கூறினார். திலின அன்னாசி விற்பனையை அண்மையிலே ஆரம்பித்துள்ளார். அவர் எதிர்நோக்கி வந்த பிரதான பிரச்சினையாக இருந்தது வசதியான சந்தை வாய்ப்பு இல்லாதிருந்ததாகும். காத்தான்குடியில் அவருக்கு சந்தை வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டமை பொன்னான சந்தர்ப்பமாகும்.

“எனக்கு வயது 27 ஆகின்றது. நான் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன். நான் கம்பஹாவில் கிரிந்திவலையில் இருந்து மொத்த விற்பனை விலையில் அன்னாசிப் பழங்களை கொள்வனவு செய்து வெலிகந்தை மற்றும் செவனபிடிய ஆகிய பிரதேசங்களில் உள்ள பழக்கடைகளுக்கு மொத்த விற்பனை விலையில் விற்பனை செய்து வருகின்றேன். ஆனாலும் அதில் அவ்வளவு இலாபம் கிடைக்கவில்லை. செவனப்பிடிய மற்றும் வெலிகந்தை ஆகிய இடங்களில் உள்ள சந்தைகளில் உள்ள விற்பனையாளர்கள் என்னிடம் மொத்தமாக அன்னாசிப் பழங்களை வாங்கி விற்பனை செய்பவர்களாக இருக்கின்றனர். அதனால் எனக்கு அங்கு சில்லறை வியாபாரத்தில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காத்தான்குடியில் எனக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பமானது மிகவும் ஆச்சரியமானதாகும். நாம் கம்பஹாவில் வாங்கும் எல்லா பழங்களையும் காத்தான்குடிக்கு கொண்டு வந்து

விற்பனை செய்வதால் அதிக இலாபம் பெறமுடிகிறது. காத்தான்குடியில் இருந்து மீன் மற்றும் கருவாடு ஆகிய பொருட்களை கொள்வனவு செய்து அவற்றை பொலநறுவையில் விற்பனை செய்யவும் முடியும்” என்று திலின கூறுகின்றார்.

“உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பிரதான சூத்திரதாரியாக கருதப்படுகின்ற சஹ்ரானின் பிறந்த ஊர் காத்தான்குயாகக் கருதப்படுவதால் நாட்டில் எல்லோரும் அப்பிரதேசத்தை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். அத்துடன் காத்தான்குடி நகரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமாகும். வர்த்தகம் மிகவும் போட்டி மிக்கதாகும். நாட்டில் வேறுபட்ட பிரதேசங்களில் இருந்து வியாபாரிகள் இங்கு வருவதற்கு நாம் அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும்.” என்கிறார் காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர்.

/

“இலங்கையில் மிகவும் பிரபல்யம் பெற்ற வர்த்தகர்கள் பலரின் பிறப்பிடம் காத்தான்குடி ஆகும். இங்கு 2000 அளவிலான வர்த்தகர்கள் உருவாகி அவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் வியாபாரம் செய்து வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் வியாபாரத்தின் வெற்றிக்கு காரணம் உற்பத்தி பொருட்களின் சிறந்த தராதரமும் போட்டி நிலையிலான விலையுமாகும். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் எங்கள் வியாபாரத்தை வீழ்த்தி அழிப்பதற்கான சூழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வியாபாரிகள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டுவிட்டனர். இத்தகைய குற்றச் சாட்டுக்களுக்குள்ளான வியாபாரிகள் சிலர் வியபார ஸ்தலங்களை மூடிவிட்டனர். இத்தகைய மிக மோசமான திட்டமிடப்பட்ட, வியாபாரத்தை வீழ்த்துவதற்கான திட்டம் காரணமாக நான் முடிவு செய்தேன். அதுதான் எல்லா பிரதேசங்களிலும் இருந்து வியாபாரிகளை இங்கு வரவளைத்து வியாபாரம் செய்யவும் உண்மை நிலையைக் கண்டறியவும் வழிவகுப்பது என்று. அதன் காரணமாகவே ஒரு வாரத்திற்கு முன்னதாக நாம் காத்தான்குடி வாராந்த சந்தையை திறந்து வைத்தோம். இந்த சந்தைக்கு நட்புறவு சந்தை என்று வியாபரிகள் பெயர் வைத்துள்ளனர்” என்று நகர முதல்வர் விளக்கமளித்தார்.

ஏனைய சந்தைகளில் நிலவும் விலைகளை விட மிகவும் குறைந்த விலைகளிலே காத்தான்குடி வாராந்த சந்தையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வர்த்தகத்தில்; காணப்படுகின்ற போட்டியானது வியாபரிகளுக்கும் பாவனையாளர்களுக்கும் நன்மையாக அமைகின்றது.

/

மொஹமட் அன்வர் என்பவர் பூகொடையச் சேர்ந்த ஒரு வியாபாரியாவார். அண்மைக்காலத்தில் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் காரணமாக அவரது வியாபாரமும் வீழ்ச்சி கண்டிருக்கின்றது. “நான் பைகள் மற்றும் தையல் அலங்காரம் கொண்ட கைப்பைகளை தயாரிக்கின்றேன். எனது தொழிலாளர்களில் அதிகமானவர்கள் சிங்களவர்களாவர். எனது வியாபாரத்தின் வீழ்ச்சியானது அவர்களது வாழ்க்கையையும் பாதிக்கச் செய்திருக்கின்றது. எங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு இடங்களை தேடுவதில் நாங்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றோம். இந்த சந்தை பற்றி நான் அறிந்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன். எதிர்காலத்தில் இலங்கையில் உள்ள சந்தைகளில் மிகவும் பிரதான சந்தையாக காத்தான்குடி சந்தை மாறலாம். இங்கு சனத்தொகையும் சொறிவானதாக இருக்கின்றது. பொருட்களின் விலைகள் குறைவாக இருப்பதால் வெளிப் பிரதேசங்களில் இருந்தும் மக்கள் இங்கு வரலாம். எங்களால் அதிகமான பொருட்களை விற்பனை செய்யக் கூடியதாக இருப்பது எங்களது வருமானத்தை அதிகரிக்க காரணமாக அமையலாம்” என்று அவரது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.

கோட்ட கல்லாறு கிராமத்தில் இருந்து சிறிய வகையான மீன் வகைகள் மற்றும் கருவாடு ஆகியவற்றை இங்கு வியாபாரத்திற்காக கொண்டு வந்துள்ள 66 வயதுடைய சோதிமணி என்பவர் “நான் மீன் மற்றும் கருவாடு வகைகளை நிறுத்து விற்பனை செய்வதில்லை. நான் அவற்றை குவியலாக வைத்து அந்த குவியலுக்கான விலையில் விற்பனை செய்து வருகின்றேன். ஒரு குவியலின் வில 100ரூபா ஆகும். அதிகமாக தனவந்தர்கள் வாங்குவது சிறிய வகை மீன்களையாகும். ஒரு நாளைக்கு 5000ரூபா வரையில் எனக்கு வியாபாரம் இருக்கும். அந்த விற்பனை எனக்கு போதுமானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தமிழர்களது ஆதிக்கம் உள்ள பிரதேசங்களில் நடக்கும் சந்தைகளுக்கு அனேகமாக முஸ்லிம் வியாபரிகள் போவதில்லை. ஆனால் அவர்கள் எங்களை இந்த சந்தைக்கு வருமாறு கூறி வரவேற்கின்றனர்” என்கிறார்.

பெரியளவிலான உற்பத்திகளுக்கு சமமான பல வகையான உற்பத்திப் பொருட்களை நாங்கள் இங்கு அவதானித்தோம். அந்த உற்பத்திகளுக்கு இந்த உள்ளுர் சந்தையில் உத்தரவாத மளிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. எவ்வாறாயினும் விலைகள் குறைவாக உள்ளன. அலியார் மொஹமட் அன்சார் என்பவர் 16 தொழிலாளர்களைக் கொண்டு ஒரு சிறியளவிலான தொழில் முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபரியாவர். அவர் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் திரவ வகையொன்றை சந்தைக்கு விற்பனைக்கு விடுகின்றார். அவரது உற்பத்திகள் மிகவும் பிரபல்யம் பெற்றவைகளாக உள்ளன.

“இது பொதுவாக பயன்படுத்தும் சுத்தம் செய்யும் திரவமாகும். இதன் உண்மையான சந்தை விலை 265 ரூபாவாக இருந்தாலும் நான் இதனை 100 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றேன். எனது 16 வகையான உற்பத்திகளும் மிகவும் குறைவான அரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. நாம் இந்த உற்பத்திகளை வீடு வீடாகவும் சென்று விற்பனை செய் கின்றோம். நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக எங்களுக்கு எமது வியாபாரத்தை நடத்த முடியவில்லை. எங்களது வியாபாரத்தை நாம் இழந்து விட்டோம். ஆனாலும் இப்போது மீண்டும் ஆரம்பித்து நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இது எங்களது வியாபாரத்திற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. பாவனையாளர்கள் மட்டுமல்லாது ஏனைய வியாபரிகளும் என்னிடம் இருந்து எனது தயாரிப்புக்களை கொள்வனவு செய்கின்றனர். இந்த சுத்தம் செய்யும் திரவத்தை உற்பத்தி செய்வதற்காக நாங்கள் சிறந்த தராதரத்திலான இரசாயன பதார்த்தங்களைப் பயன்படுத்துகின்றோம். இவை பெரியளவிலான தொழிற்சாலைகளின் உற்பத்திகளை விட தரமானதும் சிறந்ததுமாகும்” என்று அன்சார் கூறுகின்றார்.

பரந்தளவிலான உள்நாட்டு உற்பத்திகளான சப்பாத்து வகைகள், பாதணிகள், சவர்க்கார வகைகள், சலவைப் பவுடர் வகைகள் கைப் பைகள், தோற்பொருட்கள் உட்பட பல வகையான உற்பத்திகளை இந்த காத்தான்குடி சந்தையில் காண முடிகின்றது. சில வகையான உற்பத்தி பொருட்கள் வாராந்த சந்தைகளில் விற்பனைக்கு வராதவைகளாகவும் உள்ளமை காத்தான்குடி சந்தையின் சிறப்பம்சமாகும்.

நாங்கள் காத்தான்குடி வாராந்த சந்தையில் சந்தித்த அதிகமான வாடிக்கையாளர்கள் காத்தான்குடி நகரத்தை அண்மித்த பிரதேசங்களில் வசிப்பவர்களாவர். எவ்வாறாயினும் அதிகமான வியாபாரிகள் வெளி ஊர் பிரதேசங்களில் இருந்து வந்தவர்களாவர். வியாபரிகளில் சிங்களர்வகள், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உட்பட பல்லினங்களையும்; சேர்ந்தவர்கள் மிகவும் அந்நியோன்யமாகவும் நட்புடனும் வியாபாரட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எங்களது கண்களை திறக்கச் செய்திருக்கின்றது” என்று சித்தி பாதிமா என்ற பெண் கூறுகின்றார். நாங்கள் மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வருகிறோம். நாம் அந்த வாழ்க்கையை மகிழ்ச்சி உடையதாக வாழ வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எமது சமூகம் மிகவும் ஆழமாக சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றது. நாங்கள் தனியாக வாழ முடியாது என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். முஸ்லிம் அல்லாதவர்களை நாங்கள் இங்கு வியாபாரம் செய்ய விடுவதில்லை என்று கட்டுக்கதைகளும் வாதந்திகளும் நாடளாவிய ரீதியில் பரப்பப்பட்டு இப்பிரதேசம் பற்றி சிங்கள மக்களிடையில் மோசமான அளவிற்கு இன அடிப்படையில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் உண்மையான நிலை, வியாபரத்திலான போட்டி நிலையும் வியாபாரிகள் தூர இடங்களில் இருந்து பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து அதிக இலாபம் உழைக்க முடியாதளவிற்கு முகம் கொடுக்க வேண்டி இருந்த கஷ்டமான நிலைமைகளுமாகும். எவ்வாறாக இருந்தாலும் இந்த சந்தை அனைவருக்கும் வியாபாரம் செய்வதற்கான கதவுகளை அகலமாக திறந்து வைத்திருக்கின்றது. உண்மை நிலையை இங்கு வந்து பாருங்கள்” என்பதாக அவர் அழைப்பு விடுக்கின்றார்.

காத்தான்குடியில் கட்டுமரனுடனான சந்திப்பில் நகர சபை தவிசாளர், வியாபரிகள் மற்றும் பாவனையாளர்கள் உட்பட அனைவரும் “வாருங்கள். வந்து பாருங்கள்” என்ற இதே வார்த்தைகளைத்தான் கூறினர்.