Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

துயரங்களின் விற்பனை.
துயருற்ற மனிதர்களின் தனிப்பட்ட விடயங்களை பகிரங்கப்படுத்தாதீர்கள்!

பாதிக்கப்படாத மக்களது உள்ளங்களில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களும் இந்த பாதிக்கப்பட்ட மக்களது துன்பங்கள், துயரம் மற்றும் மன வேதனைகளை மீண்டும் மீண்டும் அச்சு மற்றும் இலத்திரனயில் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேட்கும் போது அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகி மன உளைச்சலில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

15.10.2019  |  
கொழும்பு மாவட்டம்

“உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு துன்பத்திற்குள்ளாகி இருப்பவர்களது மன வேதனைகளையும்; வாழ்க்கையின் தனிப்பட்ட விபரங்களையும்; பகிரங்கமாக வெளிப்படுத்துவதானது தனிநபர் வாழ்வின் ஏகாந்தத்தை பாதிப்பதாகவும் உரிமை மீறலாகவும் அமைகின்றது”
உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து சமூக ரீதியான பாரபட்சங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் ஹேமாஸ் குழுமத்தின் உள வள சிகிச்சை மற்றும் ஆலோசகருமான வைத்தியர் ரவீந்திர ரணசிங்கா முக்கியமான ஒருவராவார். இலங்கை இராணுவத்தின் “செனஹச” என்ற விஷேட கற்பித்தல் பிரிவு மற்றும் இலங்கை உளவள ஆலோசனை வழிகாட்டல் மற்றும் சிகிச்சை பிரிவின் பணிப்பாளருமான டாக்டர் ரவீந்திர ரணசிங்கா ‘த கட்டுமரனுக்கு’ வழங்கிய விசேட செவ்வியிலேயே பின்வருமாறு கூறினார்.

த கட்டுமரான் : உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டு துயரத்தில் இருக்கும் மக்களது தனிப்பட்ட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை பகிரங்கப்படுத்துவது பற்றிய உங்களது கருத்து என்ன?

தேவையற்ற முறையில் ஒருவரது வாழ்க்கையின் தனிப்பட்ட விபரங்கள், தனித்துவம் மிக்க தகவல்களை பகிரங்கப்படுத்தி பிரச்சாரம் செய்வதானது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட உரிமைகளை மீறுவதாக அமைகின்றது. குறிப்பிட்ட விடயம் தொடர்பான அறிவு இல்லாமலே அவர்களது துன்பங்கள், மன வேதனைகள் அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக, கதைகளாக முன்வைக்கப்பட்டதானது பாரியளவிலான உரிமை மீறலாகும்.
‘சிலவகையான விடயங்கள் பற்றிய தகவல்களை கதைகளாக வெளிப்படுத்தும் போது அவர்களது பாதிப்புடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்போகின்ற தாக்கம் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காமல் இருப்பது அவசிமாகின்றது.’ இதைக் கவனிக்க வேண்டும்.
ஊடகவியலின் மிகவும் முக்கியமான அம்சமாக அமைவது அறிக்கையிடல் செய்யும் போது சமூக பொறுப்புணர்வுடன் அதனை செய்ய வேண்டும் என்பதோடு தனிப்பட்ட முறையிலான தனி நபர் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய தகவல்களை ஊடக கதைகளாக்கி பகிரங்கமாக விற்பனை செய்வதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்.

த கட்டுமரான் : இவ்வாறு தனிப்பட்ட வாழ்க்கையின் இரகசியங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் போது ஏற்படக்கூடிய பௌதீக மற்றும் உளவியல் ரீதியான தாக்கம் எத்தகையது?

ஒருமுறை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை ஊடகங்களின் இத்தகைய செயற்பாடானது மீண்டும் இரண்டாவது முறையாகவும் அதே வகையான பாதிப்புக்கு உள்ளாக்குவதாக இது அமைகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களால் மீண்டும் எழுந்து நிற்கும் இயலுமையை பலவீனப்படுத்தவதாக அது அமையலாம். அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளவர்கள் தொடர்பாக ஊடகங்கள் தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையிடல்களை செய்யும் போது ஒழுக்கக் கோவையொன்றை கடைபிடிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

த கட்டுமரான் : பாதிப்புக்குள்ளானவர்களுக்கு விஷேடமாக ஈடுபடுத்தப்பட்ட குழுவால் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப் படுகின்றனவா? அல்லது புனர்வாழ்வு அளிப்பதானது சமூகத்தின் பொறுப்பாக கருதுகின்றீர்களா?

தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று தேவாலயங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் புனர்வாழ்வளிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது, எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்த மக்கள் ஓரிடத்தில் இருந்து கடவுளின் அருளை நாடி இறையச்சத்தில் மூழ்கி கட்டுண்டு இருந்த நிலையில் இப்போது சிதறுண்டு விட்டனர். இந்த தாக்குதலின் பின்னர் கடவுளின் பாதுகாப்பு, வாழ்வின் அர்த்தம், அவர்கள் கொண்டிருந்த பக்தி பற்றிய பல கேள்விகள் அவர்களது உள்ளத்தில் ஏற்பட்டிருக்கின்றன.


அறிக்கையிடல்களை செய்யும் போது ஒழுக்கக் கோவையொன்றை கடைபிடிக்க வேண்டும்

ஒரு குழு அவசரமாக இந்த நிலைமைகள் கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்ததை அறிவித்தனர். இது ஒரு திட்டமிடப்பட்ட பாரிய தாக்குதலின் தொடர் என்ற அடிப்படையில் தகவல்களை வெளியிட்டனர். ஆனாலும் ஆரம்ப கட்ட அவதானத்தின் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் கத்தோலிக்க தேவாலயத்தின் வழி நடத்தல் காரணமாக ஓரளவிற்கு வழமை நிலைக்கு திரும்ப முடிந்தது. ஏனைய மதத் தலைவர்களாலும் உள வள சிச்சைகளையும் மக்களின் மனங்களை சாந்தப்படுத்தும் சிறப்பான தொடர்பாடலையும் ஏற்படுத்த முடிந்தது எனலாம்.
அவர்கள் அவர்களது நம்பிக்கைகளை மீள உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அவர்களுக்கு விஷேட நிபுணத்துவம் பெற்றவர்களது குறிப்பாக உளவியல் ஆலாசனையாளர்களின் உதவிகள் தேவைப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை அவர்களது அதிர்ச்சியில் இருந்து மீட்டெடுபதற்காக ஆலோசகர்கள், உளவியல் வழிகாட்டிகள், உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் இன்னும் ஒரு சிறு குழுவினர் வழமை நிலைக்கு வரும் இறுதி நிலையில் உள்ளனர். அவர்களும் விரைவில் நல்ல திருப்திகரமான நிலையை அடைந்துவிடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

த கட்டுமரான் :இழப்புக்கள் தொடர்டபான இந்த தனிப்பட்ட முறையிலான கதைகளை வெளிப்படுத்தும் விடயத்தில் சமூகம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதகின்றீர்கள்?

பாதிக்கப்படாத மக்களது உள்ளங்களில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களும் இந்த பாதிக்கப்பட்ட மக்களது துன்பங்கள், துயரம் மற்றும் மன வேதனைகளை மீண்டும் மீண்டும் அச்சு மற்றும் இலத்திரனயில் ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி கேட்கும் போது அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாகி மன உளைச்சலில் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நீர்கொழும்பிற்கு வெளிப்பிரதேசங்களில் வாழும் மாணவர்களால் அவர்களது கல்வியைகூட சரியான முறையில் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து பாடசாலைகளில் ஒன்றாக கற்கும் மாணவர்களுக்கு மத்தியில் இன ரீதியான முரண்பாடுகளும் பாகுபாடுகளும் ஏற்பட்டு வருகின்றன. கட்டுக்கதைகளும் வதந்திகளும் பரவிக்கொண்டிருக்கின்றன. தரமான உண்மைச் செய்தி வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளன. மக்களுக்கு எவ்வாறான, எந்த தரத்திலான செய்திகள் மற்றும் தகவல்கள் தேவைப்படுகின்றன என்ற விடயங்களை சரியான முறையில் தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கதையும் ஊடகங்களையும் சார்ந்ததாகும்.