Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

க.பொ.த உயர்தரம்
வாழ்க்கையை தீர்மானிக்கும் பரீட்சை!?

“ என்ர மனிசி இடிஞ்சுபோய் இருக்கிறா. ஒரு பியும்(B) ஒரு சியும்(C) எடுத்த என்ர மகனுக்கு மூன்றாவது பாடத்தில ஒரு எஸ் எடுக்கமுடியாம போயிற்று.”

31.01.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
முகப்புத்தக பதிவு ஒன்று
  S.A.Yaseek

”ஒருவரும் எம்மைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. இப்ப எல்லாரும் எங்கள திரும்பிப்பாக்க வைச்சிருக்கிறான் எங்கட மகன். எங்கட மகன் எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறான். இதுதான் கல்விக்கு இருக்கின்ற மதிப்பு. இதை நல்லா தெரிஞ்சுதான் கஷ்ரத்திலும் மகன நல்லா படிக்கவைச்சோம். கலைப்பிரிவில் 2ஏ,பி எடுத்து சித்தியடைந்திருக்கிறான் எங்கட மகன் நிருஜன்.” என்கிறார் நவரத்தினம் நவசீலன்(41வயது) கொக்குவில் கிழக்கில் வசித்துவரும் நவசீலன் தனியார் நிறுவனம் ஒன்றில் வர்ணப் பூச்சு வேலை செய்துவருகின்றார். இவருக்கு ஜந்து பிள்ளைகள் மூத்தவன்தான் நிருஜன்.

நவரத்தினம் நவசீலன்
நவரத்தினம் நவசீலன்

யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் மீள்குடியேறி வசிக்கும் முகமத் இப்ராஹிம் ஜாகீர்(45வயது) கூலித்தொழில் செய்பவர். “அல்லா எங்கள கைவிடேல்ல….அவரின் அருளால் மூன்று பாடங்களிலும் ஏண்ட மகளுக்கு ஏ சித்தி. மாவட்ட மட்டத்தில் 41 ஆவது இடம்;. இது அல்லா குடுத்த சந்தோசம்” என்று மகிழ்கிறார். கலைப்பிரிவில் கல்வி கற்று தேறியிருக்கிறார் அவரது மகள் ஜாபீர் நூனுல்ஷிபா.
அதே நேரம், யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களத்தில் இடைநிலை உயர் அதிகாரியாக பணிபுரியும் த.செல்வரத்தினம்(55வயது) இப்படிச் சொல்கிறார். “ என்ர மனிசி இடிஞ்சுபோய் இருக்கிறா. ஒரு பியும்(B) ஒரு சியும்(C) எடுத்த என்ர மகனுக்கு மூன்றாவது பாடத்தில ஒரு எஸ் எடுக்கமுடியாம போயிற்று. ஒரு 3 எஸ் எடுத்திருந்தாலும் மனம் ஆறியிருக்கும். ஏதாவது ஒரு வேலைக்கு முயற்சி செய்யலாம். இதை வைச்சு என்னதான் செய்யிறது. ஒரு வருசம் வீணாபோயிற்று. அவனுக்கு நல்லா பேசிப்போட்டுதான் வந்தனான்” வர்த்தக பிரிவில் கல்விகற்ற அவரது மகனுக்கு 3பாடத்திலும் ஒரு சாதாரண சித்தி வந்திருந்தாலும் த.செல்வரத்தினம் சந்தோசப் பட்டிருப்பார்.


அல்லா எங்கள கைவிடேல்ல….அவரின் அருளால் மூன்று பாடங்களிலும் ஏண்ட மகளுக்கு ஏ சித்தி.

அதேநேரம், கணிதப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதலாவது இடம் பெற்றிருந்த மாணவியின் வீடு சோகமாகவே கட்சியளிக்கிறது. காரணம் சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற அந்த மாணவி ஒருமாதத்திற்கு முன்னர்தான் விபத்தொன்றில் மரணமாகியிருந்தார்.
இப்படி இலங்கை கல்விப் பொது தராதர உயர்தரபரீட்சையின் முடிவுகள் அண்மையில் வெளியான நாளில் அம்மா அப்பாக்களின் மனநிலை தங்கள் பிள்ளைகளின் வாழ்வே அதுதான் என்பதாக இருந்தது.
மாணவர்களிலும் பலரும் தமது முகப்புத்தக நிலைத்தகவல்தகளில் அவர்களது மன உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
சிலர், ‘ தயவுசெய்து என்னை யாரும் தொடர்பு கொள்ள முயற்சிக்காதீர்கள்’ என்றும் சிலர் ‘கஸ்ரப்பட்டதற்கு பலன் கிடைச்சிருக்கு’ என்றும் பதிவுகளைச் செய்திருந்தனர். அத்துடன் இன்னும் சிலர் சித்தியடையாத மாணவர்களை கவனத்திற்குரியவர்களாக்கியிருந்தார்கள். குறிப்பாக அமல்ராஜ் பிரான்சிஸ் என்ற முகநூல் நண்பர் , இவர் ஆக்க எழுத்தாளர்ஒருவர். பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.

சித்தியடையாத மாணவர்களை சமூகம் எப்படிப்பார்க்கிறது – முகநூல் பதிவு

“உயர்தரத்தில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான தம்பி தங்கைகளைவிட தங்கள் ஒட்டுமொத்த உழைப்பைத் போட்டும் துர்ரதிஸ்டமாக பல்கலைக்கழக அனுமதியைப் பெறாமல் போன தம்பி தங்கைகளின் பேரில்தான் சமூகம் அதிக அக்கறையுடன் இருக்கிறது/இருக்க வேண்டும் என நினைக்கிறேன்…..” என்று ஆரம்பித்து சமூகம் அவர்களை எப்படிப் பார்க்கும் என்பதை விளக்கி பலநூறு வாசல்கள் உங்களுக்க இருக்கிறது முயற்சி,தீவிரம்,நம்பிக்கை என்பவற்றை கெட்டியாகப் பிடித்து நடவுங்கள் என உற்சாகப்படுத்தியிருந்தார். இங்கே சமூகம் இவர்களை எப்படிப் பார்க்கும் என அவர் எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது.
கடந்த வருடம் கொழும்பில் பொது நல ஆர்வலர்கள் சிலர் உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்களின் மனநிலையை மேம்படுத்த அவர்களுக்கு இருக்கக்கூடிய வேறு வழிகள் பற்றி ஒரு கருத்தரங்கையே நடத்தினர்.
இவ்வாறு பல்கலைக்கழகம் கிடைக்காவிட்டால் வாழ்க்கையே ஸ்தம்பித்துபோய்விட்டது என எண்ணும் பலரிடையே சிலர் இப்படியும் உள்ளனர்.
“ எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. அங்கு போய் அந்த படிப்பை குறித்த காலத்துள் முடிக்க முடியாது. ஸ்ரைக் அது இது எண்டு ஏகப்பட்ட இழுத்தடிப்புகள். அதோட ‘ராக்கிங்’ வேற பெரிய பிரச்சினை. நான் இங்க இருந்து வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலதான் என்ர பட்ட படிப்பைதான் செய்யப்போறன். என்னோட பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவங்கள் இங்க முடிக்க முதல் நான் முடிச்சிற்று வந்திருவன்” என்கிறார் கனகசபை செந்தில். இவ்வாறு பணம் உள்ளவர்களுக்கு இலங்கை பல்கலைக்கழக படிப்பு ஒன்றும் பெரு முக்கியத்துவம் வாய்ந்தல்ல. பல்கலைக்கழக அனுமதி கிடைக்காவிட்டாலும் தனியார் பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம்வாங்கிவிடுவார்கள் அவர்கள். ஏழைகளும் நடுத்தர மக்களும்தான் இந்த பல்கலைக்கழக படிப்பை தமது வாழ்வாகவே கருதுகின்றனர்.அதிலும் நகரை அண்டிய பிரதேச மக்களுக்கு பல்வேறு தெரிவுகள் உள்ளன. வித விதமான கற்கைநெறிகளை அவர்கள் கற்பதற்கு ஆயத்மாகிவிடுவர்.
ஆனால் கிராமங்கள் அப்படியல்ல. பலரது வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் ஒரு பரீட்சையாக இந்த உயர்தர பரீட்சை அமைந்துள்ளது. இதில் சித்தி எய்தாதவர்கள் வாழ்க்கையில் எதையுமே செய்யமுடியாது என்ற மனநிலைக்கு வரும் அளவிற்கு எமது சமூக பொது அபிப்பிராயம் நிலவுகிறது. அதிலும் இப்போதெல்லாம் ஊடகங்களும் வெற்றி பெற்றவர்களின் பெருமிதங்களை கிலாகிக்கும். பெரிய சிகரத்தை தொட்டதுபோல் எதிர்கால எண்ணங்களையெல்லாம் கேள்வியாக தொடுக்கும். இந்த உச்சநிலைக் கட்டமைப்பு ஊடகங்களால் ஏற்படுத்தப்படும் விம்பம் தோற்றவனை ஒன்றுமில்லாதவனாக்குகிறது.
இது ஒருபுறமிருக்க, உயர்கல்விக்கு பல்கலைக்கழகம் தவிர மாற்று வழி அற்ற நிலை கிராமங்களில் உண்டு. அதுவும் கூடிய தாக்கத்தை இதில் செலுத்துகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பாத்திமா ருசைன்னா நிஸாமுதீன். உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்றவர் “ என்னால் எதிர்பார்த்த வெற்றியைப்பெற முடியவில்லை. 3டீ சித்தியையே என்னால் பெற முடிந்தது. எனக்கு பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு உறுதியில்லை. நான் இரண்டாவது தடவையாக பரீட்சையில் தோற்றவுள்ளேன். எனது தந்தை தையல் வேலை செய்கின்றர். எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பிள்கைள் மூத்த அண்ணா நடக்க முடியாதவராக இருக்கின்றேன். எனது தந்தையின் கஷ்டங்களை நீக்கவேண்டும் அதற்காக நான் நன்றாக படிக்கவேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. கட்டாயம் நான் இரண்டாவது தடவை வெற்றிபெற்று எனது தந்தையின் கனவை நிறைவேற்றுவேன்” என்கிறார்.
இதே நேரம், “என் மகளுக்கு A,B,S  பல்கலைக்கழகம் கிடைக்குமே தெரியாது ஆனாலும் கொத்தலாவெல இராணுவ பயிற்சிக் கல்லூரியில் தாதிப்பயிற்சி அல்லது பிசியோதெரப்பி பயிற்சி எடுப்பதற்கு அனுப்ப உள்ளேன்.”என்கிறார் கட்டுநாயக்காவைச் சேர்ந்த பிரியங்கனி கஜனி பெரேரா.
பல்கலைக்கழக வாய்ப்புக்காக எத்தனை தரமும் பரீட்சையில் தோற்ற தயாராகும் மாணவர்களின் மனநிலையும், பல்கலைக்கழம் இல்லையென்றால் உயர்கல்வி வாய்ப்புள்ள நிறுவனங்களை நாடும் நிலையும் இங்கு கவனிக்கத்தக்கது.

photo 1
“பல்கலைக்கழகம் தவிர்ந்த வேறு வழிகள் பற்றி மேல் மட்ட வாழ்வில் உள்ளவர்களுக்கு தெரிந்திருக்கும் அளவிற்கு சாதாரண மக்களுக்குத் தெரியவில்லை. மாணவர் அதிகம் கண்டிக்கப்பட அதுவும் ஒரு காரணம். இதனை பாடசாலைகள் ,ஊடகங்கள் செய்ய வேண்டும். பலருக்கு பல்கலைக்கழகம் செல்ல முடியாவிட்டால் அதோடு முடிந்ததாக நினைக்கிறார்கள்….அடுத்து உயர் பெறுபேறுகள் பெற்றவர்கள் , பெறாதவர்களுக்கான தெரிவு வழிகள் வேறு மர்க்கங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்….எல்லாவற்றுக்கும் மேலாக படிப்பு என்பது மாணவருக்கானது என்பதை விட பாடசாலையின் கௌரவம் பெற்றோரின் அவா என பரிணாமம் அடைந்தமை சோகமானது” என தன் கருத்தை முன்வைத்தார், ஜனகேஸ்வரன் நீண்டகாலமான ஊடகவியலாளராகப் பணியாற்றும் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்களகத்தில் ஊடகத்துறை வளவாளராகவும் இருக்கிறார்.

 

ஜ.ஜனகேஸ்வரன்

அவர் கூறுவதுபோல உயர்ரதப் பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காவிட்டால் எமக்கு மாற்றுவழி இல்லை இதுதான் எமது கல்வியின் இறுதிப் பாதை இத்தோடு எல்லாம் முடிந்துவிட்டது என்ற நிலையில் இன்னமும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சாதாரண குடும்பங்களின் நிலை அப்படித்தான் இருக்கிறது.
” நான் உயர்தரப் பிரிவில் விஞ்ஞானப் பிரிவில் கல்விகற்றிருந்தேன். என்னால் இரு பாடங்களில் 2எஸ் மட்டுமே எடுக்க முடிந்தது. மீண்டும் பரீட்சை எழுதுவததற்காக யாழ் நகரிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவருகின்றேன். எனக்கு பயோ படிப்பதில் பெரிதாக ஈடுபாடில்லை. ஆனால் சாதாரணதரம் முடிந்தபோது பயோ சயன்ஸ் படிக்கவேண்டும் என்பதே பெற்றோர் விருப்பமாக இருந்தது. இரண்டாம் முறையும் எழுதிப் பார்ப்போம். என்கிறார்; தர்சினி அமிர்தலிங்கம். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்களின்படி கடந்த கல்வியாண்டில் (2015ஃ2016) 15 பல்கலைகழங்களாலும் 18 உயர்கல்விப் பீடங்களாலும் 27,603 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 255இ191 ஆகும்.( http://www.statistics.gov.lk/Pocket%20Book/chap13.pdf)

இதன்படி அரச பல்கலைக்கழகங்களால் உள்வாங்கப்படுபவர்கள் மொத்த மணவர் n;த்hகையில் வெறும் 9 அல்லது 10 சதவீதத்தினரே பல்கலைக்கழகங்களுக்குத் n;தரிவாகின்றனர். (http://www.paceinstitute.lk/blog/gce-advanced-level-examination-and-university-admission-in-sri-lanka.html#sthash.H1k3CHZy.dpuf) இந்த 10 வீதத்pனுள் செல்வதில்தான் வாழ்வு தங்கியுள்ளது என்று எண்ணுவது மாணவர்கள் மீதான பெரும் சுமைதான். மாணவர் மீது பெற்றோர் ஏற்றும் பெரும் சுமையும் இதுதான்.

லட்சமாய் மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள் அவர்களில் சுமார் 20ஆயிரம் பேரை பல்கலைக்கழகங்களிற்கு அரசு தெரிவு செய்கிறது. அதற்காக மற்றவர்கள் எதுவித தகுதியும் அற்றவர்கள் என்றில்லையே. அவர்கள் தமக்கு ஏற்றதுபோல மாற்று வழிகளினூடாக தமது எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். ஆனால் வடக்கினைப் பொறுத்தவரை அவ்றாவான தொழில்முறைசார்ந்த மாற்று கல்வித்திட்டங்கள் குறைவானதுதான்.

உயர் கல்வியில் பாடத் தெரிவுகளிலும், பின்னர் பரீட்சை முடிவுகள் வெளிவந்த பின் மாற்றுத் தெரிவுகளில் நாட்டம் செய்வதிலும் இன்னமும் தெளிவான ஒரு நிலையை நமது சமூகம் எட்டிவிடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவ்விடயங்களில் ஊடகங்களின் பங்குதான் மிக அவசியமாகப்படுகின்றது. உயர்தர மாணவர்களின் பாடத் தெரிவுகள், உயர்தரத்தின் பின்னரான வழிகாட்டில்கள், புதிதாக கிடைக்கின்ற வாய்ப்புக்கள் பற்றிய தெளிவுபடுத்தல்கள் உள்ளிட்ட விடையங்களில் தகவல்களை வெளியிட ஊடகங்கள் முன்வரவேண்டும்.