Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

விமல் சுவாமிநாதன்
“சர்தேச பங்களிப்பு தேவைப்படுகின்றது என்று நான் கருதுகின்றேன்.”

புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது சிறந்தது என்று நான் கருதுகின்றேன். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையர்களாகிய நாம் புதிய விடயங்களை எதிர்ப்பதில் பழக்கப்பட்டுள்ளோம்.

28.11.2017  |  
யாழ்ப்பாணம் மாவட்டம்
Academic Saminathan Wimal sees both sides.

நல்லிணக் நடவடிக்கைக்கு மாற்றமான வழியில் இலங்கையர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யக் கூடாது என்ற விடயம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு :

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழிமூல விரிவுரையாளராக கடமையாற்றும் சுவாமிநாதன் விமல் இன முரண்பாட்டின் இரண்டு பக்கங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தும் ஒருவராவார். சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிடும் அவருடனான சந்திப்பில் அவர் மேலும் கூறிய கருத்துக்கள் வருமாறு :

த கட்டமரான் : இலங்கையில் சிவில் சமூகம் பிரச்சினைக்கு தீர்வு காண்பது 
தொடர்பாக என்ன வகையான பங்களிப்பைச் செய்ய வேண்டும் 
என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

சுவாமிநாதன் விமல் : அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை சிவில் சமூக அமைப்புக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அமைப்புக்கள் இந்த விடயத்தில் ஒன்று பட்டு செயலாற்றுவதற்கு முன்வர வேண்டும். அரசாங்கத்தை விமர்சிப்பதில் மாத்திரம் பிரயோசனம் இல்லை.

த கட்டமரான் : சர்வதேச அமைப்புக்கள் எத்தகைய பங்களிப்பைச் செய்ய வேண்டும்?

சுவாமிநாதன் விமல் : சர்வதேச அமைப்புக்கள் தமிழ் அரசியல்வாதிகளுடன் இணைந்து இந்த நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்கின்றன என்ற உணர்வு சிங்கள அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்றது. இந்த நிலைமையில் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அமைப்புக்கள் உதவி செய்வதற்கு முன்வர முடியாத நிலை இருந்து வருகின்றது. இது ஒரு சர்வதேச பிரச்சினையாகும். அதனால் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதில் சிங்களவர்களும் தமிழர்களும் பிரச்சனைக்கு தீர்வொன்றைக் காணும் விடயத்தில் ஒன்றுபட வேண்டியது முக்கிய மானதாகும். எமது பிரச்சினையானது எல்லா வகையிலும் இனவாதத்துடன் சம்பந்தப்பட்டதாகும். இலங்கையில் உள்ள இனவாதத்தை சர்வதேச சமூகத்தால் தோற்கடிக்க முடியாது. அதனால் இதனை முடிவுக்கு கொண்டுவர சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது.

த கட்டமரான் : அவ்வாறாயின் சர்வதேச சமூகம் உதவி செய்யவில்லை 
என்று நீங்கள் கூறுகின்றீர்களா?

சுவாமிநாதன் விமல் : நான் நினைக்கின்றேன் நல்லிணக்க செயற்பாட்டை வெற்றிபெறச் செய்வதற்காக மேலும் கூடுதலாக இலங்கைக்குள் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று. அதே நேரம் நாம் எமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட இனங்களுடனும் ஏனைய அரசியல் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதோடு இந்த விடயத்தில் சர்வதேச உதவி அவசியம் என்ற கருத்துக்களும் இருந்து வருகின்றன. சிவில் யுத்தத்தின் போது தமிழ் மக்கள் அச்சுறுத்தலுக் குள்ளாகி இருந்த சந்தர்ப்பத்தில் அவர்களைப் பாதுகாக்க யாரும் முன்வரவில்லை. சர்வதேச அமைப்புக்களும் அவர்களது சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டன. அதனால் நாட்டின் கூட்டான போராட்டத்துடன் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் விடயத்தில் சர்தேச பங்களிப்பு தேவைப்படுகின்றது என்று நான் கருதுகின்றேன்.

த கட்டமரான்; : உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக உங்களது 
கருத்து என்ன?

சுவாமிநாதன் விமல் : புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவது சிறந்தது என்று நான் கருதுகின்றேன். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையர்களாகிய நாம் புதிய விடயங்களை எதிர்ப்பதில் பழக்கப்பட்டுள்ளோம். மக்கள் நினைக்கின்றார்கள் இது ஒருவகையான சதித்திட்டம் என்று. இவ்வாறு சிந்திப்பது இலங்களையர்களது சுபாவமாக இருந்து வருகின்றது.