Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

சகவாழ்வுக்கு பிரார்த்தனை:
எரிகின்ற நெருப்பிற்கு ஒரு துளி நீராவது ஊற்றுவோம்!

“விகாரையினது கலாச்சாரமும், தேவாலயத்தின் கலாச்சாரமும் வித்தியாசமானதாகும். வணங்கும் முறையும் வேறுபட்டதாகும். இரண்டு வணக்க வழிபாடு தொடர்பாகவும் நான் மிகவும் நல்ல முறையில் தெரிந்து வைத்திருப்பதோடு எல்லா மனிதர்களதும் வாழ்க்கை பற்றியும் புரிந்துணர்வையும் பெற்றுள்ளேன்….

23.11.2019  |  
கொழும்பு மாவட்டம்

நாட்டு மக்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒருவரே தெல்தொட்டையைச் சேர்ந்த மதநாயக்கா ஆவார். நெருப்பு எரிகின்றபோது அதனை அணைப்பதற்காக ஒரு துளி நீரையாவது ஊற்றி அந்த நெருப்பை அணைப்பதற்காக அவர் முயற்சி செய்து வருகின்றார். இரண்டு இள வயது மகள் மார்களின் தந்தையான 55 வயதுடை இவர் ஒரு பௌத்த குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அவர் அவரது மனைவி மற்றும் இரு புதல்விகளுடன் கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வசித்து வருகின்றார். அவருடன் தகட்டுமரனுடன் நடத்திய நேர்காணல் வருமாறு :
“ மனித வர்க்கத்தை பாதுகாப்பதற்காக என்னால் ஏதாவது செய்ய முடியுமாக இருந்தால் அதற்கு ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்” என்று தேவாலயத்தில் கருணையின் அடையாளமாக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தவாறே டோல்டன் மதநாயக்கா கூறுகின்றார். அவர் வாழும் இந்நாட்டில் மக்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றும் அந்த பணியானது மக்களுக்கான மனிதாபின நடவடிக்கை என்றும் அவர் கருதுகின்றார். நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவர் சதாவும் தியானித்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றார்.


“நான் தேவாலயத்திற்கு வரும்போது தொடர்ச்சியாக சந்திக்கும் கிறிஸ்தவ, சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஆகிய பலரும் கொல்லப்பட்டுள்ளனர்”

“நான் தேவாலயத்திற்கு வரும்போது தொடர்ச்சியாக சந்திக்கும் கிறிஸ்தவ, சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் ஆகிய பலரும் கொல்லப்பட்டுள்ளனர்” என்று குரல் கம்மிய நிலையில் கவலையுடன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று இலங்கையில் இனி ஒருபோதும் எங்கும் அவ்வாறான துரதிஷ்டமான நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்று அவர் பிரார்த்தனை புரிகின்றார். மனித நேயத்தை புரிந்துகொள்ளும் வகையில் மனிதர்களது உள்ளங்களில் மாற்றம் எற்பட வேண்டும் என்று அவர் வேண்டுவதோடு நாட்டில் நல்லிணக்கம் சகவாழ்வு மலரவும் பிரார்த்திக்கின்றார். அந்த இலட்சியத்திற்காக அவர், மனைவி, குழந்தைகளும் கூட தினமும் காலையும் மாலையும் மெழுவர்த்தி ஏற்றி அவர்கள் வணங்கும் இறைவனை பிரார்த்திக்கிறனர்.

அவர் பிறப்பாலே ஒரு பௌத்தரும் பௌத்த விகாரையின் அங்கத்தவருமாக இருந்தாலும் புனித அந்தோனியார் தேவாலயமும் கொச்சிக்கடை தேவாலயமும் அவரது இதயத்திற்கு நெருக்கமான ஆலயங்களாகும்.
“விகாரையினது கலாச்சாரமும், தேவாலயத்தின் கலாச்சாரமும் வித்தியாசமானதாகும். வணங்கும் முறையும் வேறுபட்டதாகும். இரண்டு வணக்க வழிபாடு தொடர்பாகவும் நான் மிகவும் நல்ல முறையில் தெரிந்து வைத்திருப்பதோடு எல்லா மனிதர்களதும் வாழ்க்கை பற்றியும் புரிந்துணர்வையும் பெற்றுள்ளேன். மனிதர்களைப் பற்றி புரிந்து கொள்வதானது இறைவனின் ஆசீர்வாதமாக அமைகின்றது என்றும் அவர் தெரிவிக்கின்றார். தேவாலயத்தில் எவ்வாறு வணங்குவதென்று நான் படிக்கவில்லை. எனது உள்ளத்தில் அதுபற்றிய சிந்தனை உதித்தபோது தானாகவே கற்றுக் கொண்டேன். புனித அந்தோனியர் ஆலயத்தில் சொரூபத்தின் முன்னால் எனது முழங்கால் வளைந்து தாழ்த்தி எனது நண்பர்கள் உட்பட அனைவருக்குமாக வணங்கி பிரார்த்தனை புரிந்தேன். எங்களுக்கு நல்ல வாழ்க்கையைத் தரவேண்டும் என்பது எனது வேண்டு கோளாகும். புனித அந்தோனியாரிடமும் இதனையே வேண்டினேன். அவர் எனக்கு என்ன வேண்டுமோ அவற்றை தந்து எனது வாழ்க்கையில் வெற்றியை தருகின்றார்”.
மனிதர்கள் என்ற முறையில் மனிதாபினமான அடிப்படையில் இந்நாட்டின் பிரசைகள் அனைவருக்குமாக பாடுபடுவதும் உழைப்பதும் எங்களது கடமை என்று அவர் கருதுகின்றார். நாட்டை பாதுகாப்பதற்கான வழியும் அதுவாகும். எல்லா மக்களையும் இலங்கையர்களாக மதித்து, மனிதாபிமானத்திற்கு மதிப்பளித்து அன்புடன் அன்றைய நாளை ஆரம்பித்தால் அங்கே ஒரே தேசம் என்ற உணர்வு அரம்பமாகின்றது.