Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

விதவைப் பெண்களின் வாழக்கைப் போராட்டம்

இந்து கலாசார மரபின்படி தமிழ்ப் பெண்களின் வாழ்ககைத் தலைவிதி நெற்றியில் தெரியும் பொட்டில் வெளிப்படும். பொட்டுக் கலைந்திருந்தால் அவள் கணவனை இழந்த விதவை என்பதைப் பளிச்சென்று காட்டிவிடும். குரூர யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களின் நெற்றியில் பதிந்த பொட்டுக்களைக் கலைத்துவிட்டன. நன்பகல் உச்சத்தில் வெளிச்சம் தரும் கதிரவனின் சுட்டெரிக்கும் அனல் பறக்கும் வெய்லின் கொடூரத்தை அனுபவித்தவர்களாக முல்லைத்தீவு கிழக்கு நந்திக்கடல் களப்பு பகுதி வழியாக ஒருவாறு செல்லராஜாவின் வீட்டை அடைந்தோம். அவளின் குட்டி வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளால் […]

26.07.2016  |  
முல்லைத்தீவு மாவட்டம்

இந்து கலாசார மரபின்படி தமிழ்ப் பெண்களின் வாழ்ககைத் தலைவிதி நெற்றியில் தெரியும் பொட்டில் வெளிப்படும். பொட்டுக் கலைந்திருந்தால் அவள் கணவனை இழந்த விதவை என்பதைப் பளிச்சென்று காட்டிவிடும். குரூர யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களின் நெற்றியில் பதிந்த பொட்டுக்களைக் கலைத்துவிட்டன.

நன்பகல் உச்சத்தில் வெளிச்சம் தரும் கதிரவனின் சுட்டெரிக்கும் அனல் பறக்கும் வெய்லின் கொடூரத்தை அனுபவித்தவர்களாக முல்லைத்தீவு கிழக்கு நந்திக்கடல் களப்பு பகுதி வழியாக ஒருவாறு செல்லராஜாவின் வீட்டை அடைந்தோம். அவளின் குட்டி வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளால் இருண்ட யுகம் ஒன்றின் நினைவுகளின் நிழல் தெரிந்துகொண்டிருந்தது.
“எங்களுக்கு ஆறு பிள்ளைகள்” என்றவாறு அவளின் சோகக் கதையை ஆரம்பித்தாள். 47 வயது நிரம்பிய அவளின் நெற்றியில் பொட்டின் வெற்றிடம் அவளது வாழ்வின் சோகத்தை பளிச்செனக் காட்டிக்கொண்டிருந்தது.
போரின் இறுதிக் கட்டம் துவங்க இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இருந்து அவளும் அவளது கணவன் மற்றும் பிள்ளைகளும் வாழ்க்கையைக் கடத்தியது வெள்ளாமுள்ளிவாய்கால் பிரதேசத்திலாகும். ஆங்காங்கே இனிப்பு வகைகளை விற்பனை செய்து கிடைத்த சில்லறை வருமானத்தில் அவளது கணவன் தனதும் இன்னும் எட்டு வயிறுகளதும் பசியின் கொடுமையை அணைத்து வந்தான்.
2008 மே 29ஆம் திகதி வானத்தில் இருந்து மழை பொழிவது போன்று பொழிந்த செல் வெடிகளின் கொடூரத்தில் சிக்கிய அவளது கணவனும் இரண்டு குழந்தைகளும் ஒரே இடத்தில் சுரூண்டு உயிரை விட்டனர். மற்றக் குழந்தைகள் மூவரில் இருவர் உடல் பாகங்களை இழந்து அங்கவீனர்களாகினர். அந்த யுத்தத்தின் கொடுமையில் இருந்து முழுமையாகத் தப்பியது அவளும் அவளது ஒரே குழந்தையுமே.
அங்கவீனமான இரண்டு குழந்தைகளுடனும் மற்றக் குழந்தையுடனும் வாழ்க்கையை ஓட்ட முல்லைத்தீவு கோப்பாப்பிலவு பிரதேசத்தில் வசிக்கும் செல்வராஜ் அனுபவிக்கும் துயரத்தை வார்த்தைகளால் வடிக்க முடியாது. யுத்த கொடூரத்தில் இருந்து மீண்ட ஒரே குழந்தையின்; தோளில்தான் அவளது குடும்பத்தின் எதிர்காலமே தங்கியிருக்கின்றது.
முடிவில்லா வாழ்க்கைச் சுமை
“மகன் மீன் பிடித்து எவ்வளவாவது தேடிக்கொண்டு வருவான். எங்களது முழுக் குடும்பமே வாழ்வது அவனது சிறிய உழைப்பால்தன். மகன் இந்த மீன்பிடித் தொழிலை செய்வதும் எந்தவிதமான வசதிகளும் இல்லாத நிலையிலாகும். அரசாங்கம் தருவதென்று சொன்ன மீன்பிடி வலையாவது எங்களுக்கு கிடைக்கவில்லை. காயப்பட்டிருக்கும் குழந்தைகளால் தொழில் செய்யமுடியாது”./Woman
இவ்வாறு செல்வராஜி தனது மனதுக்குள் அடைபட்டிருந்த சோகக் கதையை வெளிப்படுத்தினாள். இடையிடையே அவளது கண்களால் வடியும்; கண்ணீரைக் கையில் இருந்து புடவைத் துண்டால் துடைத்தவாறு சற்றுச் செயலிழந்தவளாக பார்த்த பக்கமாகவே பாhத்துக்கொண்டிருப்பாள்.
“வாழப் பணம் வேண்டும். மகனுக்கு மருந்து வாங்கப் பணம் வேண்டும். காயப்பட்ட பிள்ளைகளுக்கு ஆரம்பத்தில் ஆமி சிகிச்சை தந்தது. நான் ஊரில் சாப்பாடு வித்து எவ்வளவாவது தேடுவேண். அதையும் கடும் துன்பத்துக்கு மத்தியிலேயே செய்து வாறேன்”;.
முல்லைத்தீவு கோப்பாய்பிலவில் மட்டுமல்லாது முழு வடக்கிலும் 40,000 – 60,000 வரையிலான பெண்கள் கணவன்மாரை இழந்து யுத்தத்தால் விதவைகளாகியிருப்பதாக சமூக சேவையில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகள் கூறுகின்றன. அரசாங்க கணக்கெடுப்பும் இவ்வாறே கூறுகின்றது. வடக்கில் மட்டும் பெண்களை குடும்பத் தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 50,000 அளவிலாகும். சனத்தொகை கணிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களத்தின் 2012ஃ13 ஆம் வருடத்திற்கான வீட்டுத்துறையினரின் கணக்கெடுப்பின்படி பெண்களை குடும்பத்த தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களில் 40 – 59 வயதுப் பிரிவிற்கு உட்பட்டவர்களைக் கொண்டதாக இருப்பதோடு அவர்களில் 50மூ இற்கும் மேற்பட்டவர்கள் விதவைகளாவர். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்த யுத்தம் இவர்களது வாழ்க்கையை சிரழித்துவிட்டது.
“போர் முடிவுக்கு வந்த பின்னரும் விதவைகளின் வாழ்க்கை பெரும் சுமை நிறைந்ததாக மாறியிருக்கின்றது. இப்பதான் அதன் உண்மை நிலை வெளிப்பட ஆரம்பமாகியிருக்கின்றது. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்கள் பலவிதமான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
“பெரும் பிரச்சினையாக இருந்து வருவது விதவைக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வழி இல்லை என்பதே” என்று கூறுகின்றார் முல்லைத்தீவு மாவட்ட மேலதிகச் செயலாளர் எம்.மோகன்தாஸ்.
அரசாங்க உதவி போதுமானதா?
2014ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் பள்ளி விபரங்களின்படி பெண்கள் மத்தியிலான வேலையின்மை 65மூ ஆகும். அதில் அதிகமான வேலையின்மை நிலவும் நான்கு மாவட்டங்களில் இரண்டு மாவட்டங்களாக இருப்பது கிளிநொச்சியும் முல்லைத்தீவும் ஆகும். இங்கு வேலையின்மை முறையே 76மூ வீதம் மற்றும் 56மூ வீதம் என்ற அடிப்படையிலாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விதவைகளைக் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்காக சிறுவர் நல மற்றும் மகளிர் விவகார அமைச்சு 5,430,000 (5.43 மில்லியன்) ரூபாய்களை ஒதுக்கியிருக்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் மாதாந்தம் ஒரு குடும்பத்திற்கு ரூபா 30,000 என்ற அடிப்படையில் வருமானம் கிடைக்கிறது. இந்த உதவி வெறும் 181 குடும்பங்களுக்கு மட்டுமே கிடைத்து வருகின்றது.
சமுர்தி நிவாரண உதவித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 54,000 குடும்பங்கள் நன்மையடைந்து வருகின்றன. இதில் எத்தனை விதவைக் குடும்பங்கள் சமூர்தி நிவாரண உதவி பெறும் குடும்பங்களாக உள்ளன என்ற தகவல்களை வழங்குவதற்கு யாழ்ப்பாண கச்சேரியில் கடமையாற்றும் சமுர்த்தி அதிகாரியால் முடியவில்லை.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்த ரூபா 3,000 நிவாரண உதவி வழங்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்தி வருகின்றது. ஆனாலும் இந்த திட்டம் விதவைப் பெண்களைக் கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொண்ட திட்டம் அல்ல என்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காணும் அளவீடு என்ன என்பது தொடர்பாக அது தொடர்பாக கடமையாற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு போதுமான தெளிவு இல்லாதிருப்பதாக வட மாகாணசபை முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் கூறுகின்றார்.
“அரசாங்க அதிகாரிகளுக்கு பணம் வந்திருந்தாலும் அவர்கள் அதனை வழங்குவதில்லை. இந்தப் பணத்தை ஏன் மக்களுக்குக் கொடுப்பதில்லை என்று நான் அவர்களைக் கேட்டேன். நிவாரண உதவி பெறக்கூடியவர்களை பல பிரிவுகளுக்கு வரையறுத்திருப்பதால் அவர்களை இன்னும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் இந்த பணத்தை எப்படி பகரிர்ந்தளிப்பது என்று நான் அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில், தேவையானவர்களே வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்பதாகும்”.
ஊர்களுக்குச் சென்று நிவாரண உதவி பெறத் தகுதியான குடும்பங்களை அடையாளம் கண்டு உதவிகளை வழங்க வேண்டும் என்று அபிவிருத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ரூபா 3,000 ஆக வழங்குத் உதவித் தொகையை ரூபா 6,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் எனவும் கூறினார்.
பன்முகப்படுத்தப்பட்ட உதவித்தொகையில் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் 06 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை போர் காரணமாக விதவைகளாகியுள்ள பெண்களின் நலன்களுக்காகச் செலவிடத் திட்டமிடப்பட்டிருக்கின்றது. வட மாகாண சபையில் இதுவரையில் மகளிர் விவகார அமைச்சு இருக்கவில்லை. அதற்காக புதிய அமைச்சை நாம் உருவாக்கினோம். அரசாங்கத்தால் அதற்காக நிதி உதவிகள் கிடைக்கவில்லை. நாம் சர்வதேச நிதி உதவிகளை கேட்டிருக்கின்றோம்”.
அரசாங்கம் போன்றே சர்வதேச சமூகமும் பெரும் தொகைப் பணத்தைச் செலவு செய்திருந்தாலும் அதன் பிரதிபலனை உணர முடியாதிப்பதற்கான காரணம் யுத்தத்தின் பாதிப்பு உக்கிரமானதாக இருந்து வருவதுதான் என்று வட மாகாணசபை ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறுகின்றார்.
போரால் பாதிக்கப்பட்ட விதவைகளின் பிரச்சினைகளில் இரண்டு விடயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது வடக்கின் சனத்தொகையை எடுத்து நோக்கினால் மொத்த சனத்தொகையில் பெண்களின் எண்ணிக்கை உயர்வாக இருப்பது. யுத்தத்தால் பெருமளவிலான உயிர்கள் பலியாகியிருப்பதால் பிரச்சினை மேலும் உக்கிரமடைந்திருக்கின்றது. இதனால் குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு கல்வியூட்டல், தொழில்புரிதல் என்ற அடிப்படையில் பெரும் சுமை பெண்கள் மீதே இருந்து வருவதோடு ஆணின் உதவி இல்லாதிருப்பதும் இந்தப் பெண்களது பிரச்சினை இந்தளவிற்கு மோசமடையக்; காரணமாக அமைகின்றது.
ஏழு வருடகால கள அறிக்கை
வடக்கில் விதவைகளுக்காக அரசாங்கமும் வட மாகாண சபையும் திட்டங்களை முன்னெடுத்தாலும் போர் காரணமாக பாதிக்கப்பட்ட விதவைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்தத் திட்டங்கள் எந்தளவிற்கும் பேதுமானதாக இல்லை என்பதை போர் காரணமாக பாதிக்கப்பட்ட விதவைகளுக்கான தேசியத் திட்டத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி சாந்த அபிமானசிங்கம் குறிப்பிடுகின்றார்.
“எல்.ரீ.ரீ.ஈ. நடவடிக்கை தொடர்ந்துகொண்டிருந்த காலப் பகுதியிலும் இந்த விதவைகள் அரசாங்க காணிகளிலும் வெளிநாடுகளில் வசிப்பவர்களது காணிகளிலும் ஏதாவது விவசாய நடவடிக்கைகளைத் தமது வாழ்வாதாரத்துக்காகச் செய்து வந்தனர். பின்னர் அந்தக் காணிகளை இராணுவம் தனதாக்கிக் கொண்டமை, வெளிநாடுகளில் வசித்தவர்கள் அவர்களது காணிகளை மீண்டும் பெற்றுக்கொண்டமை போன்ற காரணிகளால் விதவைப் பெண்கள் வருமானத்திற்கு இருந்த வழிகளைஇழக்க நேரிட்டிருக்கின்றது. அதனால் அவளர்களுக்கு வருமானத்திற்கு வழியில்லாத நிலை உருவாகியிருக்கின்றது”. என்று அபிமானசிங்கம் மேலும் கூறினார்.
அவர் குறிப்பிடப்பட்ட இன்னுமொரு விடயம் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கும் விதவைப் பெண்களால் தமது குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பி கல்வி கற்பிக்க முடியாதிருக்கின்றது என்ற விடயம். பாதுகாப்பை இழந்த இவர்கள் பல்வேறு விதமான தொல்லைகளுக்கு உட்படுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. கலாசார தடைகள் காரணமாக மீண்டும் திருமணம் முடிப்பதில் உள்ள கஷ்டங்கள், உள ரீதியான பாதிப்புக்கள், என்று பலவிதமான பிரச்சினைகளால் இந்த விதவைகள் கஷ்டப்படுகின்றனர்.
இந்த அனைத்துத் தகவல்களாலும் முன்வைக்க விரும்பும் விடயம் என்னவெனில் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகள் தொடர்பாக அவர்களது பாதிப்பின் மோசமான நிலையை நிவர்த்திக்கும் வகையில் அரசாங்கம் உட்பட எந்தவொரு தரப்பினரும் இதுவரையில் எந்தவிதமான திட்டங்களையும் முன்வைக்கவில்லை என்ற விடயம் ஆகும். அதனால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தற்போதைக்கு ஏழு வருடங்கள் முடிவுற்ற நிலையிலும் இத்தகைய துர்ப்பாக்கிய நிலையொன்று தொடர்வதை நியாயப்படுத்த முடியுமா?