Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

அலியாவத்தை
‘எறும்பு மனிதர்களைக்’ காண அதிகாரிகளே இந்த மலை மீது ஏறுங்கள் !

மொனராகலைக்கு மிகவும் உயரமாக அமைந்திருப்பது அலியாவத்தை கிரமமாகும். இந்த கிராமம் மிகவும் உயரமான பகுதியில் அமைந்திருப்பதாலும் அங்கு வாழ்வது தமிழர்களாக இருப்பதாலும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அங்கு வாழும் மக்கள் மிகவும் சிறியவர்களாகவே தென்படுகின்றனர். இந்தச் சிறியவர்களின் வாழ்கையை சற்று பெரிதாகக் காட்டும் ஒரு பிரதி பிம்பமே இக்கதை. “நாங்கள் தமிழர்கள் ஐயா! அதுவும் வடக்கில் உள்ளவர்களைப் போல,ஆனால் எம்மை யாரும் கண்டு கொள்வதில்லை. பிறந்த குற்றதிற்காக வாழ்கின்றோம். மின்சாரம் இல்லை. பாதை இல்லை. மரகல கந்தை என்றழைக்கப்படும் […]

01.09.2016  |  
மொணராகலை மாவட்டம்
அம்பலந்தையில் ஒரு நாளைக்கு ருபா 1000 சம்பளத்திற்கு கரும்பு வெட்டுவதற்காக போய்வரும் சத்தியதேவி

மொனராகலைக்கு மிகவும் உயரமாக அமைந்திருப்பது அலியாவத்தை கிரமமாகும். இந்த கிராமம் மிகவும் உயரமான பகுதியில் அமைந்திருப்பதாலும் அங்கு வாழ்வது தமிழர்களாக இருப்பதாலும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் அங்கு வாழும் மக்கள் மிகவும் சிறியவர்களாகவே தென்படுகின்றனர். இந்தச் சிறியவர்களின் வாழ்கையை சற்று பெரிதாகக் காட்டும் ஒரு பிரதி பிம்பமே இக்கதை.
“நாங்கள் தமிழர்கள் ஐயா! அதுவும் வடக்கில் உள்ளவர்களைப் போல,ஆனால் எம்மை யாரும் கண்டு கொள்வதில்லை. பிறந்த குற்றதிற்காக வாழ்கின்றோம். மின்சாரம் இல்லை. பாதை இல்லை. மரகல கந்தை என்றழைக்கப்படும் கரடு முரடான கற்கல் குவிந்த மலைமீது ஏறித்தான் எங்கள் வீடுகளுக்கு போக வேண்டும்.”
அலியாவத்தையில் வசிக்கும் சிரியானிக்கு வயது 20 ஆகின்றது. கணவன் கொழும்பில் எங்கோ ஓரிடத்தில் வேலை செய்வதை அறிந்து வைத்துள்ள அவள் எப்போதாது தொலைபேசியில் அவனுடன் கதைப்பாள். அவர்களுக்கிடையிலான உறவு புதுப்பிக்கப்படுவது ஒரு மாதத்திற்கொரு முறை அவன் பணம் அனுப்பும் போதும், மூன்று மாதங்களுக்கொரு முறை அவன் அவளைப்ப பார்ப்பதற்காகவீடு வந்து போகும் போதுமாகும். கொழும்பில் தொழில் என்பதால் அடிக்கடி ஊர் வருவது சிரமம் என்பதால் இவ்வாறு தான் அவர்களது வாழ்க்கை ஓடுகின்றது.
பொட்டுடன் இருக்கும் சிரியானியை நான் மொனராகலையில் சந்தித்தேன். வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும், அது வரையில் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த யாரும்கண்டுகொண்டிருக்காத துன்ப துயரங்களை என் முன்னிலையில் கொட்டிய அவள் ஒரு முறை அலியாவத்தைக்கு வந்து போகுமாறு என்னை கெஞ்சிக் கேட்டுக்கொண்டது அங்குள்ள அனைவரும் அனுபவிக்கும் துயரங்களை நேரடியாக காண்பதற்காகவாகும். அதன் மூலமாவது அந்த மக்களது துயரங்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்த நான் உதவலாம் என்று அவள் கருதியிருப்பாள். அவர்களது துயர சுமையை காண்பதற்காக “மரகல கந்தை” என்ற உயரமான மலை உச்சிக்கு ஏறவேண்டியேற்பட்டது.

/sriyani

மொனறாகலையில் சந்தித்த சிரியானி

மலை ஏறுதல்
நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுவதற்காக சிரிகல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டிருந்த பாட்டனை பார்வையிடுவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும் சத்திய தேவியும் அவளின் மகனும், கதிரவன் நடு உச்சியில் இருக்கும் இந்த சுட்டெரிக்கும் வெயிலில் மலை ஏறிக் கொண்டிருக்கின்றனர். சத்தியதேவி அம்பலந்தையில் ஒரு நாளைக்கு ருபா 1000 சம்பளத்திற்கு கரும்பு வெட்டுவதற்காக போயிருந்தாள். கரும்பு வெட்டுவதை விட மாலையில் மலை மீது ஏறி வீட்டை சென்றடைவதுதான் அவளுக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. சங்கிலி போன்ற இரண்டு மூன்று சுற்று வளைவை சுற்றி சுற்றி மலை மீது ஏறி மொனராகலையை பார்க்கும் போது கண்ணுக்கு தெரிகின்ற தூரத்தில் மொனராகலை எழில் கொஞ்சும் கண்கொள்ளாக் காட்சியாக தென்படுகின்றது. அந்த அழகு கண்களுக்கு மட்டுமே தென்படும் அழகாகும். இலங்கையில் உள்ள வறுமை மிக்க மாவட்டத்தில் மலை உச்சியில் இருக்கும் அலியாவத்தைக்கு எல்லாம் கனவு மட்டுமே.
அலியாவத்தையில் வாழும் மக்கள் இந்தியாவில் இருந்து அன்றைய காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களாக வரவழைக்கப்பட்டவர்களாவர். மரகலை மற்றும் ஜீலோன் பிரதேசத்தை சூழ அடர்த்தியாக வளர்ந்திருந்த இறப்பர் தோட்டங்களில் இவர்கள் அடிமைகள் போன்று வியர்வை சிந்தி இறப்பர் பால் வெட்டும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்களது வியர்வை தான் அந்த தோட்டங்களுக்கு நீராக பாய்கின்றது. இவர்களது உழைப்பைச் சுரண்டி பெருத்த முதலாளியான வெள்ளைக்காரன் தம் தயாகம் திரும்புவதற்காக கப்பல் ஏறும் போது அவர்களது இரப்பர் தோட்டங்களையும் பங்களாவையும் காட்டுக்குச் சொந்தமானதாக்கிவிட்டே கப்பல் ஏறினர். வெள்ளையர்களால் கைவிடப்பட்ட இறப்பர் தோட்டங்களில் வாழும் இந்த மக்கள் அன்றாட ஜீவனோபாயத்திற்காக பெரிதும் சிரமப்பட வேண்டிய நிலை எற்பட்டிருக்கின்றது. இங்கு தமது அன்றாட உழைப்புக்காக சிறிய சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்காவது எங்குமே நீர் வளம் இல்லை. கீழ்ப்பகுதியில் உள்ள சிங்கள பிரதேசங்களுக்கும் குடிபெயர முடியவில்லை.
“அழகபுரம்” இராச்சியம்
கதிரவனின் பொற்கதிர்கள் மெதுவாக மேல் நோக்கி நகர இவர்கள் அடிமேல் அடி வைத்து மெதுவாக ஏறி நின்ற இடமாக அலியாவத்தையில் அழகபுரம் அமைந்திருந்தது. இருநூறு அல்லது முன்னூறு குடும்பங்கள் அளவில் வாழும் அலியாவத்தையில் தமிழர்களுக்கு எஞ்சியிருப்பது சிறிதளவு நீர் வளமும் கொஞ்சம் நிலமுமாகும். சோளம், பூசணி, கெகிரி, குரக்கன் மற்றும் வாழை போன்ற சிறு போக விவசாய பயிர்களைச் செய்து சீவியம் நடத்தும் தமிழ் குடும்பங்கள் போதாக் குறையை ஈடு செய்ய கீழ் பிரதேசத்தில் உள்ள சிங்கள கிராமங்களுக்கு வந்து கூலி வேலை செய்து நாள் கூலியாக ஒரு தொகையை உழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கூர்மையான ‘பிளேட்’ போன்று கை கால்களை வெட்டும் கரும்பின் இலையையும் பொருட்படுத்தாது கரும்பு வெட்டுவதில் நாட்டம் காட்டுவதற்கு காரணம் கரும்பை பிழிந்தால் வரும் கரும்புச் சாற்றின் இனிமையைவிட அன்றாட சீவியத்தை ஓட்ட கிடைக்கும் ஒரு நாள் கூலி ஆயிரம் ரூபாவின் மகிமை சுவை மிக்கதாக இருப்பதால் ஆகும்.

மண் தங்கம் போல இருந்தாலும் இங்கே கவலை இல்லை. இளைஞர்கள் விவசாயத்தில் இறங்க விரும்புவது இல்லை.
மண் தங்கம் போல இருந்தாலும் இங்கே கவலை இல்லை.இளைஞர்கள் விவசாயத்தில் இறங்க விரும்புவது இல்லை.  கூறும் கோபால் ராஜூ

அலியாவத்தையில் வசிக்கும் கோபால் ராஜூவின் வயது 62 ஆகின்றது. தான் வாழ்ந்த சொந்த ஊரில் இருந்து தனிமைப்பட்டு தனிமையின் வாட்டத்தால் துன்பப்படும் அவர் கூறுவதெல்லாம் இந்த ஊர் புறக்கோட்டையில் உள்ள வியாபார ஸ்தலங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும்  தொழிலாளர்களை விநியோகம் செய்யும் பிரதேசமாக  மாறியிருக்கின்றது என்ற கதையையாகும். “இங்கு மண் வளம் மிக்கதாக, பொன் போன்றதாக இருந்தாலும் பலன் இல்லை. இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவதில்லை. விவசாயம் செய்து சாகுபடியாக கிழங்கு 50 சாக்கு அறுவடை செய்தாலும் அதனை மலை அடிவாரத்திற்கு கொண்டு போக 50 முறை ஏறி இறங்க வேண்டும். அல்லது கூலிக்கு ஆள் தேட வேண்டும். வாழை குலை போட்டாலும் அப்படித்தான். கடைசியாக மொனராகலை சந்தைக்கு கொண்டு போனால் அங்கு அதற்கான விலையும் இரண்டு துட்டு (மிக மிக குறைவு) தான். சரியான விலை தரமாட்டார்கள்”.கடைசியில் மொனராகலையில் பஸ்ஸில் ஏறும் இளைஞர்கள் புறக்கோட்டையில் இறங்குவது தேநீர் கடைகளில் வெயிட்டர்களாக அல்லது கை வேலைக் காரர்களாக வேலை செய்வதற்காகும்.
மங்கும் ஒளி
அலியாவத்தை பிரதேசத்திற்கு மொனராகலை பகுதி காட்சி தருவது உலக வர்த்தக மையத்திற்கு கொழும்பு மாநகரம் காட்சியளிப்பது போன்றாகும். இரவு நேரத்தில் தெரியும் மின் விளக்குகளின் அலங்காரமோ சொல்லில் வடிக்க முடியாத அழகு. அந்த அழகின் ரசனையில் வாழ் நளை கழித்தாலும் அவர்களது வீட்டில் ஒரு மின்சார சுவிட்சை அமத்தி அதில் ஒளிரும் மின் விளக்கின் அழகை ரசிக்கும் வாய்ப்போ ஒருபோதும் இல்லை. இவர்களுக்கிருக்கும் ஒரே அலங்கார மின் வசதி மண்ணெண்ணெய்யில் எரியும் குப்பி லாம்பு மட்டுமே. இந்த குப்பி லாம்பு காரணமாக எத்தனையோ குழந்தைகள் உடம்பில் மண் எண்ணெய் விளக்கு புரண்டு உயிரை மாய்த்துள்ள சோகக் கதைகளும் ஏராளம். முழு வெல்லஸ்ஸ பிரதேசத்தையும் மின்சாரத்தால் அலங்கரிப்போம் என்று வாக்குறுதி வழங்கும் அரசியல் வாதிகள் அதற்காக ஒதுக்கியுள்ள மின் கம்பங்களை மலை உச்சிக்கு கொண்டு போக பாதை இல்லாததால் மின்சாரம் வழங்க முடியவில்லை என்ற கதையை ஜெயகுமார் நினைவுபடுத்தினார். “நாங்கள் அவர்களுக்கு பாதையை செய்து தர வேண்டுமாம். இது மிகப் பெரிய நகைச்சுவை ஐயா. எங்களால் இந்த மலையை உடைத்து பாறாங்கற்களை ஒதுக்கி பாதை செய்ய முடியுமானால் நாமும் சும்மா இருப்போமா” என்று ஜெயகுமார் கேள்வி எழுப்புகின்றார்.

මේ ගල් කුළු කඩලා පාර හදන්න පුළුවන්නම් අපිත් නිකම් ඉන්නවා பாதையை செய்ய முடியுமானால் நாம் செய்யாமல் இருப்போமா? கூறும் ஜெயகுமார்
பாதையை செய்ய முடியுமானால் நாம் செய்யாமல் இருப்போமா? கூறும் ஜெயகுமார்

ஒழுங்காக ஒரு மலசல கூடத்தையாவது அமைத்துக்கொள்ள ஒரு சீமெந்து பையை கொண்டு போகவாவது ஒழுங்கான பாதை இல்லை ஐயா. ஜெயகுமார் சொல்ல மறந்ததை சிரியாணி நினைவுபடுத்தினாள். சில நோயாளிகளை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போகும் போது இடையிலே இறந்து விடுகின்றனர். பிரசவத்திற்காக பெண்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சிரிகல ஆஸ்பத்திரியில் தங்கி விடுகின்றனர். எந்த நேரம் என்று தெரியாதல்லவா?
இந்த மலைமீது ஏறுங்கள்
எது எவ்வாறாயினும் பிரச்சினைகள் மூட்டை மூட்டையாக இருந்தபோதும் காணி நிலம் இருக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக அலியாவத்தை பகுதி மக்களை புறக்கணிக்க முடியாது. அவர்கள் வாழும் நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை. அவை காணிப்பதிவுத் திணைக்களத்திற்கு (எல்,ஆர்.சி) சொந்தமானதாகும். அவர்களது காணிக்கு உரித்து பத்திரம் தேவையாயின் அதற்காக பணம் வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அத்தோடு இந்த ஊரில் சில இடங்களில் மண்சரிவு எற்படும் அபாயமும் இருந்து வருகின்றது. செய்வதற்கிருக்கும் ஒரே வேலை சொல்பவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருப்பதாகும். இவ்வூரின் மேல் பகுதி அரச வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப் பட்டிருக்கின்றது. அதில் எட்டு வீடுகளும் ஒரு கோயிலும் அமைந்திருக்கின்றது. இவர்களுக்கு காணி உரிமை இல்லாத ஒரே காரணத்திற்காக தேர்தல் இடாப்பில் பெயர் பதிவதற்காக பிரதேச செயலகத்திற்கே போக வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.
இந்த அலியாவத்தை பகுதி மொனராகலைக்கு மிகவும் உச்சியில் இருப்பதால் அரசியல் வாதிகளுக்கு இவர்கள் எறும்பு போன்று மிகவும் சிறியவர்களாகவே தென்படுகின்றனர். ஆனாலும் கீழ் பகுதியில் அமைந்திருக்கும் சிங்கள அலியாவத்தைக்கு கொங்ரீட் வீதிகள், மின்சாரம் உட்பட மற்றும் வசதிகள் அனைத்தும் கிடைத்திருப்பதற்கு காரணம், மொனராகலை அரசியல்வாதிகளுக்கு அவர்கள் பெரிதாக தென்படுவதால் ஆகும். முன்னர் நியமிக்கப் பட்டிருந்த சிங்கள குடும்ப சுகாதார மாது (மிட்வைப்) இந்த மலை உச்சிக்கு ஒருபோதுமே ஏறவில்லை. அதனால் கர்ப்பிணித் தாய்மார்கள் பிரசவ பரிசோதனை, திரிபோசா போன்றவற்றிற்காக மிகவும் சிரமத்துடன் கீழே இறங்கினர். பின்னர் ஒரு தமிழ் குடும்ப சுகாதார மாது (மிட்வைப்) நியமிக்கப்பட்ட பின்னரே அந்தக் கஸ்ரம்நீங்கியது.
சமுர்தியால் கிடைக்க வேண்டிய காப்புறுதி பணம், திருமணத்தின் போது வழங்கப்படும் நிவாரண நிதி என்று எதுவுமே இவர்களுக்கு கிடைத்ததில்லை. கணக்கெடுப்பின்போது இவர்களிடம் இருந்து அதிகாரிகளால் பெற்றுச் சென்ற பதிவு படிவங்களை சரியான முறையில் அதிகாரிகள் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்காததால் இவர்களுக்கு அந்த நிவாரணங்களை வழங்க முடியவில்லை என்று கூறுகின்றனர். இறுதியில் எதையுமே இவர்களுக்கு இலகுவாக வழங்கக்கூடியதாக இல்லை. ஏனெனில் இவர்கள் வடக்கில் இல்லாமல் மிகச் சிறிய எறும்பு போன்ற மனிதர்களாக எவருடைய கண்களிலும் படாமல் வாழ்ந்து வருவதால் ஆகும்.
வருடக்கணக்காக நீடிக்கும் பிரச்சினைகளை ஒரே இரவில் தீர்த்துவைக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆனாலும் தாமதிக்காது எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டும். அந்த ஆரம்பம் எங்கிருந்து என்பதை மட்டும் எம்மால் காட்டித்தர முடியும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளே, அலியாவத்தையில் வசிக்கும் இதுவரையில் யாரும் கண்டுகொள்ளாத எறும்பு மனிதர்களை காண்பதற்காக இந்த மலைமீது ஒருமுறை ஏறுங்கள்.