Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

ஜின்னா நகர் !
பௌத்த வழிபாட்டு தலத்தை பாதுகாக்கும் முஸ்லிம் குடும்பம்!

“நானும் எமது ஊரில் உள்ள ஒரு சில இளைஞர்களும் சேர்ந்து இந்த இடத்திற்கு வர்ணம் பூசினோம். நான் அதற்காக எனது பணத்தை செலவு செய்தேன் வர்ணம் பூசிய பின்னர் அந்த இடம் மிகவும் அழகாக இருக்கின்றது. இரவில் மின்னொளியில் பிரகாசிக்கும் இந்த தூபி மேலும் ஜொலிக்கின்றது”

26.03.2017  |  
திருகோணமலை மாவட்டம்
Mohamed Ismail Maharoof takes care of the only Buddhist shrine in his Muslim-majority village.

கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள மூதூர் இலங்கை முழுவதிலும் அறியப்படுவது ‘குட்டி அரேபியா’ என்ற பெயரினாலாகும். காரணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அங்கு வாழ்கின்றனர்.
குறிப்பாக திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள ஜின்னா நகர் என்ற கிராமத்தில் ஒரு பௌத்த குடும்பங்கூட இல்லை. ஆனாலும் அங்கு சிறிய பௌத்த வழிபாட்டுத் தலம் ஒன்று அழகாக காட்சி தருகின்றது. இரவில் ஒளியேற்றப்பட்டு பிரகாசிக்கின்றது.
இந்த பௌத்த வழிபாட்டு தலம் பற்றி மேலும் குறிப்பிடுவதாயின் அங்கு பொலீஸ் பாதுகாப்பு சாவடியும் இல்லை. சில சந்தர்ப்பங்களில் யுத்த காலங்களில் இப்பிரதேசங்களில் காணப்பட்ட புத்தர் சிலைகள் தாக்கி அழிக்கப்பட்டதாயினும் தனி முஸ்லிம் கிரமத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த புத்தர் சிலை பாதுகாப்பாக இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ள விடயமாகும்.
இந்த இடம் இவ்வளவு நேர்த்தியாக இருப்பதற்கு காரணம் இங்கு வாழ்ந்து வரும் முஸ்லிம் கிரமவாசியான 56 வயதுடைய இஸ்மாயீல் மஹ்ரூப் என்பவராகும். இவர் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த விவசாயியும் வியாபாரியுமாவார். இவர் இதற்கு முன்னர் அப்பிரதேச பள்ளிவாயலின் உப தலைவராகவும் உள்ளுராட்சி மன்றத்தின் அங்கத்தவராகவும் இருந்துள்ளார். சாதாண நிலையில் வாழ்ந்துவரும் அவர் மிக விரைவில் சவுதி அரேபியாவில் அமைந்துள்ள உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்களால் போற்றப்பட்டு புனித பிரயாணம் மேற்கொள்ளும் மக்காவுக்கு பிரயாணம் மேற்கொள்வதற்கும் உத்தேசித்துள்ளார்.


“ நாங்கள் இங்கிருந்து போகின்றோம். இங்கு பௌத்தர்கள் எவரும் இல்லை. அதனால் இந்த வழிபாட்டுத் தலத்தையும் இடித்து தரைமட்டமாக்கி விடுகின்றோம். “

அவர் இந்த இடத்தின் பொறுப்பை ஏன் ஏற்றார் என்பது தொடர்பாக மஹ்ரூப் விளக்கமளித்தார். 1990 ஆம் ஆண்டு ஜின்னா நகரில் வாழ்ந்த அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நிர்ப்பந்தம் காரணமாக தமது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. அப்பிரதேசம் சிவில் யுத்தம் நடைபெற்று வந்த காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசமாகும்.

with-wife
மஹ்ரூபின் மனைவி அவரது வேலைகளில் உதவி புரிகின்றார்.

இவ்வாறு வெளியேறிய மஹ்ரூபின் குடும்பத்தாரும் இலங்கை இராணுவத்தால் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி வருமாறு அழைக்கும் வரையிலான காலப்பகுதியில் முகாமில் தங்கியிருந்தனர். அங்கு பொருட்கள் யாவும் சூறையாடப்படடிருந்ததால் மக்கள் அவர்களது உடமைகளை; அனைத்தையும் இழந்திருந்தனர். ஆனாலும் அதிஷ்டவசமாக மஹ்ரூபின் குடும்பத்தாரின் உடமைகள் பாதுகாப்பாக இருந்தன. காரணம் அப்போதைய சந்தர்ப்பத்தில் அப்பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவம் படைமுகாமாக பயன்படுத்தியது மஹ்ரூபின் வீட்டையாகும். அந்த சந்தர்ப்பத்தில்தான் அங்கு படையினரால் சிறிய பௌத்த வழிபாட்டு தலமும் புத்தர் சிலையும் நிர்மாணிக்கப் பட்டிருக்கின்றது.
சிவில் யுத்தும் நடைபெற்ற காலப்பகுதியைக் கடந்து 20 வருடங்களின் பின்னர் மஹ்ரூப் என்பவரும் அவரது மணைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய குடும்பம் மீண்டும் அவர்களது சொந்த இடத்திற்கு திரும்பினர். “நான் அங்கு சென்ற போது ஒரு அதிகாரி திகதியொன்றை குறிப்பிட்டு அந்த திகதியில் அங்கு வருமாறு என்னை பணித்தார்” என்று மஹ்ரூப் கூறுகின்றார். “ நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எனக்கு எனது பிள்ளைகள் பிறந்த இடமான வீட்டிற்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடிந்தது. நான் 20 வருடங்களுக்கு முன்னர் நட்ட தென்னை மரங்கள் காய்த்துக் குலுங்கியிருந்தன. எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. நானும் எனது மனைவியும் எனது 20 வருடங்களுக்கு முன்னர் கைவிட்டு வந்த வீட்டுக்கு சென்ற போது இராணுவத்தினர் உரிய ஆவணங்களை என்னிடம் ஒப்படைத்தனர். அதுமட்டுமல்லாது ஒரு படை அதிகாரி என்னிடம் இவ்வாறு கூறினார்
“ நாங்கள் இங்கிருந்து போகின்றோம். இங்கு பௌத்தர்கள் எவரும் இல்லை. அதனால் இந்த வழிபாட்டுத் தலத்தையும் இடித்து தரைமட்டமாக்கி விடுகின்றோம். “
அப்போது 25 வருடங்களாக அவர்களால் வழிபாடு செய்து வந்த ஒரு இடம் இப்போது அழிக்கப்படுவது அவ்வளவு விரும்பத்தக்க செயல் அல்ல. நாங்கள் மத அடிப்படையில் வேறுபட்டவர்களாக இருந்தாலும் ஏனைய மதத்தவர்களது மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடாகும். அதனால் இந்த வழிபாட்டு இடத்தை அழித்து தரைமட்டமாக்குவது என்றவுடன் எனக்கும் வேதனையாக இருந்தது. இங்கு இராணுவம் நிலை கொண்டிருந்த 25 வருடங்களாக அவர்கள் அன்போடு வழிபாடு செய்த இடமாகும்.
“அப்போது நான் சொன்னேன். ‘சேர் இந்த இடத்தை அழிக்க வேண்டாம். நான் இந்த இடத்தை பாதுகாப்பேன். கிராம மக்களும் அதற்கு இணங்குகின்றார்கள்’ என்றேன். ஆனால் இராணுவ அதிகாரி முதலில் அதற்கு சம்மதிக்கவில்லை. இருந்தாலும் நான் கேட்டுக்கொண்டதால் அவர் பின்னர் எனது வேண்டுகோளுக்கு இணங்கினார்”.

ஆதன் பின்னர் மஹ்ரூப் இந்த இடத்தை புனரமைப்பு செய்துள்ளார். அவரது சொந்த வீட்டை திருத்த முன்னர் இந்த பௌத்த வழிபாட்டு தலத்தைத் திருத்தி வர்ணம் பூசி அழகு படுத்தியுள்ளார்.“நானும் எமது ஊரில் உள்ள ஒரு சில இளைஞர்களும் சேர்ந்து இந்த இடத்திற்கு வர்ணம் பூசினோம். நான் அதற்காக எனது பணத்தை செலவு செய்தேன் வர்ணம் பூசிய பின்னர் அந்த இடம் மிகவும் அழகாக இருக்கின்றது. இரவில் மின்னொளியில் பிரகாசிக்கும் இந்த தூபி மேலும் ஜொலிக்கின்றது” என்று மஹ்ரூப் கூறினார்.

இந்த பிரதேசத்திற்கு சுற்றுலா வரும் சிங்கள மக்கள் இந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி விலக்கேற்றி மலர்களையும் வைத்து வழிபடுகின்றனர். இந்த இடத்தை பாதுகாத்து வரும் மஹ்ரூபின் சேவையையும் அவர்கள் பாராட்ட தவறுவதில்லை.
“இதுபோன்ற ஒரு விதமான மகிழ்சியை எந்த விலை கொடுத்தும் உங்களால் பணத்திற்கு வாங்க முடியாது” என்று இதனால் திருப்தியடையும் பாதுகாவலரான மஹ்ரூப் கூறுகின்றார். அவரே தினமும் காலையில் இந்த இடத்தைக் கூட்டி துப்பரவு செய்வதோடு அவரது மனைவியும் இடையிடை அவருக்கு உதவுகின்றார்.
அவர் ஏன் இந்த புத்தர் சிலைக்கும் கைவிடப்பட்ட இந்த இடத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமான கேள்வியாகும். அவரது ஏனைய மதத்தவர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்ற மேலான உணர்வே காரணமாகும். அதற்கு மேல் வேறு எதுவும் இல்லை.
மஹ்ரூபின் பதில் மிகவும் இலகுவானதாகும். அவரது பதிலின்படி “இறைவன் எல்லோருக்கும் உரித்தனவன்” என்பதே உண்மையான அர்த்தமாகும்.