Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

குழந்தை இல்லாமல் தாய்ப்பால் சுரந்த தெனகல

தூரத்தே தெரிவது “தெனகல” மலைப்பகுதி. தெனகல என்ற பெயர் வருவதற்கு காரணம் அந்த இடம் ஒரு பெண்ணின் மார்பகங்களைப் போல் தோற்றமளிப்பதுதான். இந்த தெனகல அமைந்திருப்பது லெவலன் (LEVELLON) என்ற தோட்டத்தில். ஒருமுறை பனிச் சால்வையால் இந்த மர்பகங்கள் மூடப்படுகின்றன. மீண்டும் அது நிர்வாணமாக்கப்படுகின்றது. நிர்வாணமாக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெனகல மார்பகச் சோடி பாணையின் கருமை நிறத்தில் காட்சி தருகின்றது. இந்த இனிய காலை நேரத்தில் சூரிய பாலகனுக்கு தெனகல பாலூட்டுவது போன்று தெரிகின்றது. அன்பு வடிந்தோடும் […]

28.06.2016  |  
இரத்தினபுரி மாவட்டம்

தூரத்தே தெரிவது “தெனகல” மலைப்பகுதி. தெனகல என்ற பெயர் வருவதற்கு காரணம் அந்த இடம் ஒரு பெண்ணின் மார்பகங்களைப் போல் தோற்றமளிப்பதுதான். இந்த தெனகல அமைந்திருப்பது லெவலன் (LEVELLON) என்ற தோட்டத்தில். ஒருமுறை பனிச் சால்வையால் இந்த மர்பகங்கள் மூடப்படுகின்றன. மீண்டும் அது நிர்வாணமாக்கப்படுகின்றது. நிர்வாணமாக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெனகல மார்பகச் சோடி பாணையின் கருமை நிறத்தில் காட்சி தருகின்றது. இந்த இனிய காலை நேரத்தில் சூரிய பாலகனுக்கு தெனகல பாலூட்டுவது போன்று தெரிகின்றது. அன்பு வடிந்தோடும் வெள்ளை நிர புஷ்பமாய் தெரிவது தெனகலவில் பால் வடிவதைக் காட்டுகின்றது. ஆனாலும் ஒருபோதும் தெனகலவிற்கு பால் சுரந்ததில்லை. பால் சுரப்பதுமில்லை. பால் சுரக்கும் பிரமாண்டான மார்பகங்கள் இருப்பது இந்த மலையின் அடிவாரத்தில்தான்.
நான் இப்போது இருப்பது ஆயுள் காப்புறுதி எனப்படும் உறுதிப்பத்திரம் எழுதும், கொழும்பில் இருந்து 103 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் மலைப்பகுதியான லெவனன் தோட்டத்தில் ஆகும்.
2880 ஹெக்டேயர்களைக் கொண்ட சிறிய தேயிலைத் தோட்டத்தின் ஒரு சிறிய பகுதியே இந்தப் பொயரால் அழைக்கப்படுகின்றது. இங்கு வாழும் மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. குறைந்தபட்சம் தமது என்று உரிமை பாராட்டத்தக்க வீடொன்று அல்லது காணித்துண்டு என்ற எதுவுமே இல்லை. அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பது பிரிட்டிஷாரால் நிர்மாணிக்பட்ட லயன் வீடுகளிலாகும். நான் இங்கு சொல்ல முற்படுவது தோட்டத் தொழிலாளர்களால் முகம் கொடுக்க நேரிடுகின்ற வாழ்க்கைச் சுமைபற்றியல்ல.
தோட்டப்பகுதி என்றவுடன் ஒவ்வொருவருக்கும் மனதில் வருவது வெவ்வேறு விதமான கதைகள் ஆகும். இழிவான கலாசார முறையொன்றுடன் தேயிலைக் கொழுந்துகளுடன் வாழ்க்கையை கழிக்கும் இழிநிலையில் வாழும் தூய்மையற்ற மனிதக் கூட்டம் என்று பலர் இவர்களைக் கருதுகின்றனர்.

/IMG_4019

சுட்டியன் காடு வீட்டுத் தொகுதியில் தொடர் வீடுகளில் ஒன்றாக ஒரு மூலையில் துயர வாழ்க்கை வாழும் பரமநந்தன் மாரிமுத்துவின் வீடு இருக்கின்றது. 12 சதுர அடிகளைக் கொண்ட ஒரு சிறிய அறைதான் அவரின் மொத்தமான வீடாகும். அந்த லயன் அறையிலும் ஒரு மூலையில் பிரமாண்டான சக்திமிக்க கடவுலர்களின் பூசை இடமும்; அமைந்திருக்கின்றது. எண்ணெய் வற்றி வருகின்ற நிலையில் எரிந்துகொண்டிருக்கும் சிறிய விளக்கின் மெல்லிய ஒளியில் அந்த அரையின் ஒரு மூலையில் இருக்கும் சக்கர நாற்காலி எனக்குச் சொல்கிறது. சோலை அம்மா என்பது மாரிமுத்துவின் பெரியக்கா ஆவார்.
அமர்வதற்கு நாற்காலி இல்லாத இந்த வீட்டில் யாரும் வந்தால் உட்கார பயன்படுவது இந்த சக்கர நாற்காலிதான். யாரோ ஒருவர் அன்பளிப்பாக வழங்கியதே அதுவும்.
அறையின் மூலையில் இருந்த அந்த நாற்;காலியை சோலை அம்மா தள்ளிக்கொண்டு வந்தாள். அரைகுறையான சிங்களத்தில் அவள் “மாத்தியா இந்தகண்ட” என்று என்னைப் பார்த்து கூறினாள். நாங்கள் மிக்கக் கண்ணியமாக அந்த வேண்டுகோளை நிராகரித்தோம். சோலை அம்மாவும் மாரிமுத்துவம் தற்போது வாழ்க்கையின் அந்திம காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் உறுதி.
மாரிமுத்துவுக்கு இப்போது வயது 72 ஆகும். சோலை அம்மாவுக்கு 75 வயதாகின்றது. 75 வயது என்றவுடன் கை, கால்களில் சீவன் அற்றுப்போன வயது என்று நீங்கள் நினைப்பீர்கள். அது உண்மை. இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர் இந்த அக்காவுக்கும் தம்பிக்கும் இரண்டு தங்கைமார்கள் இருந்தனர். ஒரு தம்பியும் இருந்தார். பரமநந்தன் மரிமுத்து பிறந்த நாள் முதல் சிறப்புத் தேவையுடையவாவர். இரண்டு கால்களிலும் சீவன் இல்லை. எழுந்து நிற்க முடியாது. இடுப்புக்கு கீழ்ப் பகுதி முற்று முழுதாகச் செயலிழந்த நிலையில் கஷடப்படும் ஒருவரர். மாரிமுத்துவிற்கு 16 வயதாகும்போது அவனை பராமரித்தவர்கள் இறந்துவிட்டனர்.
அதன் பின்னர் மாரிமுத்துவின் எல்லா கவனிப்பும் அவனது தாயால் செய்யப்பட்டு வந்தது. சிறிது காலத்தில் தாயும் இறந்துவிட்டார். தாயும் தந்தையும் இறந்துவிட்டால் முடமான ஒருவர் இயல்பாகவே ஆதரவற்றுப்போவது இயல்பாகும். உணவூட், நீரூட்ட, குளிப்பாட்ட, மலசலம் கழுவி துப்ர செய்ய யார் முன்வருவர்? தாயும் தந்தையும் இறந்த பின்னர் குடும்ப பொறுப்பை சோலை அம்மா தலையில் சுமந்தாள். குடும்பத்தில் மூத்தவளும் அவளே.
மாரிமுத்துவினதும் சோலை அம்மாவினதும் பெற்றார் இறந்த பின்னர் அவர்களது குடும்பம் சிதறுண்டது. குரங்குகளால் துண்டு துண்டாக கிழித்தெரியப்பட்ட பஞ்சு நிரம்பிய தலையனை போன்று சிதறுண்டு போனது. மாரிமுத்துவின் தங்கைகள் திருமண பந்தத்தில் நுழையும் நோக்கில் இந்த லயன் வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிட்டனர். ஒரே தம்பியும் தூரத்தில் உள்ள வேறு தோட்டத்திற்குச் சென்று விட்டான். இந்த லயன் அறையில் முடமான மாரிமுத்தும் அவனது அக்கா சோலை அம்மாவும் தனிமைப்பட்டுவிட்டனர். ஆழகில் எந்த விதமான குறையும் இல்லாத சோலை அம்மாலுக்கு அயலில் உள்ள சுட்டியன்காடு தோட்டத்தில் வசிக்கும் பல ஆண்களிடம் இருந்து திருமண பேச்சுக்கள் வந்தன. இந்த முடமான மாரிமுத்துவை லயன் அறையின் ஒரு மூலையில் போட்டுவிட்டு சோலை அம்மாளும் அழகாக திருமண வாழ்க்கையின் இன்பத்தை அனுபவித்திருக்கலாம்.
ஆனாலும் சோலை அம்மால் என்ற இந்த பெரிய அக்கா தான் கட்டிவைத்திருந்த எல்லாக் கனவுக் கோட்டைகளையும் தவிடுபொடியாக்கியதோடு தனது வாழ்க்கையின் இன்பத்தை சுவைக்க மறுத்தும் விட்டாள். தாயை இழந்த தம்பிக்கு பாலூட்டாவிட்டாலும் இவல் அவனுக்கு தாயானால். சுயநலமிகள் நிறைந்து வாழும் இன்றைய உலகில் இப்படியான ஒருத்தி இருப்பாளா என்றுகூட நினைக்கமுடியாத அளவிற்கு எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. சகோதர பாசம், மனித நேயம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு ஆகிய பன்புகள் பற்றி ஆலய போதனைகளிலும் அரசியல் மேடைகளிலும் முழங்கும் நாதம் என் காதுகளுக்கு மெல்லியதாக கேட்கின்றது. மிக உயரமான மலை உச்சிகளில் அவை ரீங்காரமிசைக்கும் என்று எதிர்பார்த்தாலும் அத்தகைய பன்புகள் காணப்படுவது இந்த சிறிய தொட்டால் சினுங்கி செடிகளிலாகும். சீவன் இல்லாத மாரிமுத்துவின் கழிவுகளை கழுவி சுத்தம் செய்வது முதல் நீராட்டி, உணவூட்டி, நீரூட்டி மகிழ்விப்பது வரையில் எல்லாம் செய்வது சோலை அம்மாள் அல்லது மாரிமுத்துவின் அக்கா ஆவாள்.
72 வயதான மாரிமுத்துவிற்கு உபசரணை செய்வது 75 வயதுடைய சோலை அம்மாள் மட்டும்தான். அவள் இன்றும் தோட்ட வேலைக்கு செல்கின்றாள். கொழுந்தெடுத்து அவள் உழகை;கும் பணத்தைக்கொண்டுதான் இந்த லயன் அறையில் சோற்றுப் பானை வேகுகின்றது. மாதாந்தம் மூவாயிரத்திற்கு மேல் உழகை;க முடியாததால் சோறு சமைப்பது ஒரு நேரத்திற்கு மட்டுமே. இன்னொரு நேரத்திற்கு இருவருக்கும் இரண்டு ரொட்டிகள். ஆதிக நாள்கள் கழிவது கஞ்சியுடனேயே. இத்தனை குறைபாட்டுக்கும் மத்தியில் சகோதர பாசம் மேலோங்கி நிற்கின்றது. மனித நேயத்திற்கு ஏதோ அர்த்தமிருப்பதாயின் அது இந்த லயன் அறையில் நிரம்பி வழிகின்றது.
எல்லாவிதமான இன்ப சுகங்களையும் எதிர்பார்க்கும் சமூகத்தில் இந்த அக்காவினதும் தம்பியினதும் வாழ்க்கை அவர்கள் வாழும் லயன் அறைக்குக்கூட ஆச்சரியமானதாக இருக்கலாம். மனிதாபிமானம், சகோதர பாசம், அர்ப்பணிப்பு பற்றி உபதேசம் செய்யும் மண்புழுக்கள் போன்ற மனிதர்கள் மத்தியில் சோலை அம்மாள் அர்ப்பணிப்பு, ஈடுபாடு என்ற பன்புகளால் நிரம்பி வழியும் விருட்சமாவாள்.
பணம், பேராசை, பொறாமை, மாறுபாடு போன்ற மோசமான பன்புகளால் நிறைந்த மனிதர்கள் வாழும் இந்த உலகில் சோலை அம்மாள் ஒரு அடையாளச் சின்னம். மனிதர்களை வாழ வைக்க அன்பு, பாசம் வேண்டும். இவை இல்லாத சமூகம் வெறும் வெற்று முட்டைகோது போன்றது. மாரிமுத்துவின் அக்கா சோலை அம்மாள் இன்னும் அவனைப் பராமரிப்பது ஒரு தாய் குழந்தையை பாலூட்டி சீராட்டி வளர்ப்பது போன்றேதான். வாழ்வின் ரம்யமான பகுதியை அவள் தனது சகோதரனுக்காக இழந்துவிட்டாள்.
இந்த முடமான சகோதரனை ஒரு அனாதை இல்லதில் சேர்த்துவிட்டு, ஒருத்தனை கரம்பிடித்து அவளது இன்பகரமான வாழ்க்கை அனுபவித்திருக்கலாம். ஐயோ! அவள் அப்படி செய்யத் துணியவில்லை. கை கால்களில் சீவன் இல்லாத இந்த சப்பாணியை அனாதை இல்லத்தில் ஒப்படைத்து அங்கிருந்து கிடைக்கும் சகாயத்தில் இருந்து சீவியத்தை ஓட்டியிருக்கலாம். ஆனால் அவள் அப்படி நினைக்கவும் இல்லை.
துர் நாற்றமடிக்கும் மனித சமூகத்தில் மனித நேயம் ஓரளவுக்காவது மீதமிருப்பது இத்தகைய சமூகத்தில்தான். குழந்தைகளை நடுத்தெருவில் வீசி எறியும் சமூகத்தில், வயது முதிர்ந்த தாய் தந்தையர்களை வயோதிபர் இல்லங்களில் ஒப்படைக்கும் இன்றைய சமூகத்தில் சோலை அம்மாள் போன்ற மிக உயர்வான தாய்மார் இருக்கின்றனர் என்பதை நினைவுபடுத்த வேண்டும். மனிதாபிமானம், சகோதர பாசம் என்பன வார்த்தைகளிலாவது மீதமிருப்பது இவர்கள்போன்ற உயர்வான மனிதர்களால் மட்டுமேதான்.
சோலை அம்மாளின் அர்ப்பணிப்பு சமூக அமைப்பை மாற்றியமைப்பதற்காக அல்ல. அவளது தியாகம் புரட்சியை ஏற்படுத்தவும் அல்ல என்பது தெளிவாகின்றது. ஆனாலும் மிகவும் பண்பான மனித சமூகங்கள் உருவாவது இவ்வாறான சிறிய குடும்ப குழுக்களில் இருந்து என்பதை நான் உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 75 வயதான சோலை அம்மாள் நாளை காலையும் தோட்டத்தில் கொழுந்தெடுக்க போவாள். தோட்டத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு 60 வயதில் ஓய்வுபெறவேண்டும் என்ற சட்டம் இருக்கின்றது. ஊழியர் சேமலாப நிதியால் ஓய்வில் இருந்து வாழ்க்கையை கொண்டு நடத்தலாம் என்று கற்றறிந்த புத்திசாலி மனிதர்கள் கருதுவார்கள். ஆனால் அது அப்படியல்ல. கணவான்களே அது வேரொரு கதை. மிகவும் கவலையான கதை. எது கிடைக்காவிட்டாலும் தன் கை, கால்களில் நம்பிக்கை வைத்துள்ள சோலை அம்மாள் நாளை காலையிலும் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்தெடுக்க புறப்படுவாள்.
இலட்சியத்தை குறிக்கேளாகக் கொண்ட அவளது பொற்கரங்களுக்கு மேலும் பலம் கிடைக்க வேண்டும். எனக்கு மீண்டும் தெரிவது சோலை அம்மாளின் லயன் அறையின் ஒரு மூலையில் பெரிய சக்திமிக்க சாமிக்காக எரிந்துகொண்டிருக்கும் விளக்குத்தான். அவளின் சகோதர பிரமை, அர்ப்பணிப்பு, ஈடுபாடு, தியாக உணர்வு என்பன அவள் வணங்கும் எல்லாத் தெய்வங்களையும் மிஞ்சியதாக மேலோங்குகின்றது. அவள் ஏற்றும் தீபத்தை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது அதனால்தான்.