Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

‘ஜனகரலிய’ பணிப்பாளர்
“மொழி , முக்கிய பிரச்சினையாக இருந்து வருகின்றது!”

முதலாவது நாடகத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரித்தோம். இரண்டு குழுக்களும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் பெற்றுக்கொண்டனர்.

13.02.2017  |  
கொழும்பு மாவட்டம்
A scene from the Sri Lankan version of Bertolt Brecht's play, The Caucasian Chalk Circle.

பராக்கிம நிரியெல்ல சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமான திரைப்பட கம்பனியின் பணிப்பாளராவர். அவர் பல்மொழி நாடகங்கள் தொடர்பாக எதிர்நோக்குகின்ற நன்மைகள் மற்றும் தீமைகள் தொடர்பாக ‘கட்டுமரான்’ இணையத்தளத்திற்கு தெரிவித்த கருத்துக்கள் வருமாறு

தமிழ் மற்றும் சிங்கள மொழி கலைஞர்கள் குழுவொன்று 2005 ஆம் ஆண்டு முதல் நாடக ஆக்கம் தொடர்பான செயலமர்வுகள் மற்றும் நாடக அரங்குகள் ஊடாக அவர்களது சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பான பணிகளை முன்னெடுத்து வருகின்றது. ‘மக்களுக்கான அரங்கு’ என்றழைக்கப்படும் ‘ஜனகரலிய’ கலாச்சார மன்றம் சிங்கள மொழியில் ‘ஹூணுவடயே கதாவ’ என்ற நாடக அரங்கை சிறிது காலத்திற்கு முன்னர் தயாரித்தது. இந்த நாடகத்தின் தயாரிப்பில் எதிர்நோக்கிய நெருக்கடிகள் கஷ்டங்கள் தொடர்பாகவும் அது நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அவரிடம் வினவியபோது:-

கட்டுமரான் : ‘ஹூணுவடயே கதாவ’ என்ற கதையை எவ்வாறு நிறைவு செய்தீர்கள்?

பராக்கிரம நிரியெல்ல : 2008 ஆம் ஆண்டு ‘ஹூணுவடயே’ கதைக்கான உரிமையை எங்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த கதையானது ‘பேடோல்ட் பிரெசர்ஸ்ட்’ (Bertolt Brecht’) இன் ‘த கோகேசியன் சோக் சேர்கிள்’     ( Caucasian Chalk Circle.) என்ற நாடகத்தின் சிங்கள மொழிபெயாப்பாகும். 2013 ஆம் ஆண்டு இந்த நாடகத்தின் தயாரிப்பை நாம் நிறைவு செய்தாலும் ஹென்றி ஜயசேனாவால் முன்வைக்கப்பட்டபோது பல விடயங்களை அதில் உட்படுத்த முடியாமல் போனது. அது 1967 ஆம் ஆண்டு; தயாரிக்கப்பட்டபோது போர் தொடர்பான பலவிடயங்கள் அதில் சேர்த்துக்கொள்ளப்பட வில்லை. அதற்கான காரணம் அப்போது யுத்தம் தொடர்பாக எமது நாட்டிற்கு எந்தவிதமான அனுபவமும் இருக்கவில்லை. அதனால் நாம் நாடகத்தை தயாரித்தபோது வெளிப்படை யாகவே இதனை மாற்றம் செய்ய வேண்டியேற்பட்டது.

பராக்கிம நிரியெல்ல
பராக்கிம நிரியெல்ல
கட்டுமரான் : எவ்வாறு தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்தீர்கள்?

நிரியெல்ல : யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த கலைஞராக குழந்தை எம் சண்முகலிங்கம் இருந்து வருகின்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அவர் நாடகத்துறையில் கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்காக பல நாடகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்திருப்பதாக நான் அறிந்துகொண்டேன்.

அதனால் நாம் யாழ்ப்பாணத்திற்கு சென்று சில செயலமர்வுகளை நடத்தினோம். அந்த செயலமர்வின் முடிவில் 16 இளம் கலைஞர்களை தெரிவு செய்து குறிப்பிட்ட நாடகம் அவர்களது வாழ்வுடன் எவ்வாறு பொருந்துகிறது என்பதை அவர்களிடம் கல்ந்துரையாடி பெற்றுக் கொண்டோம். அதன்படி நாம் நாடகத்தை தயாரித்தோம்.

கட்டுமரான் : தயாரிப்பின்போது எத்தகைய வரவேற்பு உங்களுக்கு இருந்தது?

நிரியெல்ல : சிறந்த முறையில் வரவேற்பு இருந்தது. அதிக விமர்சனங்களை பெற்றுக்கொண்டோம். நாடகத்தினுடாக சகவாழ்வை மேம்படுத்துவதற்கு சிறந்த உதாரணமாக இந்த நாடகம் அமைந்துள்ளது. இது இன்றைய காலகட்டத்தின் தேவையும்கூட.

கட்டுமரான் : பிரிஜட் கதையுடன் இலங்கையின் யுத்த அனுபவம் எவ்வாறு பொருந்துகின்றது?

நிரியெல்ல : யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல விடயங்கள் இதில் உள்ளன. அதில் சில வருமாறு, சில ஆண்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வதை அல்லது இணைவதை தவிர்ப்பதற்காக நோய்வாப்பட்டிருப்பது போன்று பாசாங்கு செய்தனர். அத்துடன் சில பெற்றோர் தமது பெண் பிள்ளைகளை வயது முதிர்ந்த ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். காரணம்; இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பததைத் தவிர்ப்பதற்காகவேயாகும்.

நாடகத்தில் காணப்படக்கூடிய மற்றைய விடயம் தான் (ஹிரோயின்) குருஷா அவளது சகோதரனின் வீட்டுக்கு போகின்றாள். ஆனால் அவள் வரவேற்கப்படவில்லை. அவளுக்கு அது ஒரு நிகழ்வாகின்றது. யுத்தம் காரணமாக உயிர் பிழைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தமது உறவினர்களது வீடுகளுக்கு சென்றாலும் அவர்களை உறவினர்கள் வரவேற்கவில்லை.

கட்டுமரான் : இலங்கை கலைஞர்களை அரசியல் சூழ்நிலை எவ்வாறு பிரித்துவைத்துள்ளது?

நிரியெல்ல : சிங்களத்தை தேசிய மொழியாக மாற்றியமை மிகவும் முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகின்றது. தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களிடையேயான பிரிவினை பலவிதமான முரண்பாடுகளுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக அமைந்தன. சிங்களவர்களோடு இணைந்து தொழில் செய்வதை தமிழ் கலைஞர்கள் நிறுத்திக்கொண்டனர். அதேபோன்று சிங்கள கலைஞர்கள் அவர்களது சிங்கள சமூகத்தை மட்டும் இலக்காகக் கொண்டு விடயங்களை தயாரித்ததோடு தமிழ்க் கலைஞர்கள் அவர்களது சமூகத்தை மட்டும் நோக்காகக் கொண்டு விடயங்களை முன்வைக்கும் நிலை எற்பட்டது.

கட்டுமரான் : இலங்கையில் நல்லிணக்கத்திற்கு ‘ஜனகரலிய’ நிறுவனம் எவ்வாறு பங்களிப்பு செய்கிறது?

நிரியெல்ல : ஜனகரலிய திட்டத்தை நாம் ஆரம்பித்தவுடன் அதற்காக விளம்பரங்களை பிரசுரித்ததோடு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களை எங்களால் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவற்றில் இருந்து சிங்கள மொழிமூலம் 11 விண்ணப்பங்களும் தமிழ் மொழி மூலம் 09 விண்ணப்பங்களையும் நாம் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு மூன்று மாதங்களாக கடுமையான பயிற்சிகளை வழங்கியதோடு சமாதானம் என்ற முதலாவது நாடகத்தை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரித்தோம். இரண்டு குழுக்களும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இரண்டாவது நாடகத்தில் கதை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாகும்.சிங்களவர்கள் தமிழையும் தமிழர்கள் சிங்களத்தையும் கற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது. எவ்வாறாயினும் இன்று இரண்டு குழுக்களும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளை கற்றுக்கொண்டுள்ளனர்.