Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

உடல் உழைப்பு.
இப்போதும் திறந்தவெளி ஆடைச் சலவையகங்கள் செழிப்பாக இயங்குகின்றன.

நாங்கள் வேலையிலிருந்து விடுப்புப்பெற முடியாது. அத்துடன் சில நாட்களில் காலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை வேலை செய்வோம். நாங்கள் வேலையை முடிக்க வேண்டும்.

23.03.2017  |  
கொழும்பு மாவட்டம்
The ironing rooms are filled with the smell of fresh laundry .

கொழும்பிலே திறந்த வெளியில் ஆடைகளைக் கழுவி இஸ்திரிப் பெட்டியால் அழுத்தும் வேலை செய்யும் குடும்பங்கள் அநேகமாக இத் தொழிலில் ஒரு நூற்றாண்டு காலமாக ஈடுபடுகின்றனர். தலைநகரின் ‘லோன்றிவத்தை’ எவ்வாறு தானியங்கி இயந்திர யுகத்துடன் போட்டியிடுகிறது?

தனது இளம் வயதான 15இல் சு.சுமணசிறி ஆடைகளைக் கழுவ ஆரம்பித்தார். இப்பொழுது அவருக்கு வயது 57. அவருடைய முகத்திற் சுருக்கங்களும் தலைமுடி நரைத்தும் இடுப்பில் பெருத்த தொந்தியுடனும் அவர் காட்சியளிக்கிறார்.
லோன்றிவத்தை எனச் சொல்லப்படும் இந்த இடத்தில் சுமணசிறி 42 வருடங்களைக் கழித்துள்ளார். கொழும்பில், இந்த ‘லோன்றிவத்தை’ சந்ததி சந்ததியாகக் திறந்த வெளி சலவை நிலையங்கள் நடத்தப்படும் இரு அமைவிடங்களாகும். இலங்கையின் தலைநகரில் மிகவும் வறியவர்களிலிருந்து பெரும் பணக்காரர் வரையானவர்களின் கைக்குட்டை முதல் வீட்டுத் திரைச் சேலைகள் வரை எல்லாவற்றையும் அவர் சுத்தமாக கழுவியுள்ளார்.
சுமணசிறி வேலைபார்க்கும் லோன்றிவத்தை கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொட்டாஞ் சேனையில் அமைந்துள்ளது. 1922 ஆம் ஆண்டில் துணிகளைக் கழுவுவதற்காக தண்ணீர் தொட்டிகள், களஞ்சிய சாலைகள், துணி துவைப்பதற்குக் கற்கள் என அரசாங்கம் வழங்கி லோன்றிவத்தை பகுதிகளை ஆரம்பித்து வைத்தது. அங்கு வேலை செய்யும் உள்ளுர் வாசிகள் அதற்காக நகரசபைக்கு வாடகை செலுத்துவார்கள். களஞ்சிய வசதிக்காக 11ரூபா 25 சதம் வாடகையாக அறவிறப்பட்டது.
தலைநகரில் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்துவரும் மின்சார சலவையந்திரங்கள் மற்றும் சலவை நிலையங்கள் இருந்தும்கூட லோன்றிவத்தை இன்றும் பிரபலமாக இருப்பதுடன் பல வருடங்களாக கழுவுதல் வேலையில் ஈடுபடும் 30 வரையான குடும்பங்களை அது பணியாளர்களாகக் கொண்டுள்ளது. தலைநகரில் வசிக்கும் உள்நாட்டவர்கள் பலர் இப்பொழுதும் தங்கள் உடுப்புகளைக் கைகளினாலும் அனுவபமுள்ள இந்த வேலை யாட்களைக் கொண்டும் கழுவுவதை விரும்புகின்றனர். தனியார் கம்பனி மற்றும் அரச ஊழியர்களும் சீருடைகளை அல்லது ஏனைய பணித்துறை சார்ந்த துணிகளைத் தொகுதி தொகுதிகளாக லோன்றிவத்தைக்கு அடிக்கடி கொண்டுவருவதுடன் அதற்கென ஒரு கட்டணத்தைத் தாங்களும் சம்பாதித்துக்கொள்கிறார்கள்.

/washing-plant
சுமணசிறி போன்றவர்கள் முழு வருடமும் ஒவ்வொரு நாளும் வேலை செய்வார்கள். “நாங்கள் வேலையிலிருந்து விடுப்புப்பெற முடியாது. அத்துடன் சில நாட்களில் காலை ஐந்து மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை வேலை செய்வோம். நாங்கள் வேலையை முடிக்க வேண்டும். ஒரு நாளாவது, இங்கு நாங்கள் துணிகளைக் கழுவாது அல்லது ஸ்திரிப் பெட்டி போடாது விடமுடியாது. இத் தொழிலில் அப்படிச் செய்ய முடியாது” என்று கூறுகிறார்.
சுமணசிறியின் குடும்பத்தினர் இந்த வேலையில் பல வருடங்களாக உள்ளனர். அவருடைய குடும்பம் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டி களஞ்சிய அறை மற்றும் ஸ்திரிப்பெட்டி போடும் அறை முதலியன அவருடைய தந்தையின் மறைவிற்குப் பின்னர் அவருடைய சகோதரர் வசம் சென்றது. சகோதரருடைய மறைவிற்குப் பின்னர் அவருடைய மைத்துணி இந்த வியாபாரத்தின் தலைவியானார். இப்பொழுது சுமணசிறி அவரிடம் வேலை பார்க்கிறார்.
அப்பெண்மணி சுமணசிறிக்கு மாதமொன்றிற்கு ரூபா. 35,000 வரை (அண்ணளவாக €214) சம்பளமாகக் கொடுக்கிறார். மணமுடிக்காமல் தனியாக வாழ்பவரான சுமணசிறி “அது எனக்குப் போதுமானது” என்கிறார்.


யாரும் அழுக்குத் துணிகளைக் கழுவுவதற்குக் கொண்டு வராது விட்டால் நாங்கள் நகரத்திற்குள் சுற்றித் திரிந்து அவற்றைச் சேகரித்து வருவோம்”

அவருடைய சகோதரர் பிள்ளைகளும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இத் தொழிலைத் தங்கள் வாழ்வாதாரமாகச் செய்வதில் அக்கறை அற்றவர்களாக இருக்கின்றனர். சுமணசிறி இன்னமும் இங்கு தங்கியிருப்பதற்கான காரணங்களில் அதுவுமொன்று.
இளம் தலைமுறையினர் கட்டடம் கட்டும் மேசன்மாராகவும் கொழும்புத் துறைமுகத்திலும் வெளிநாடுகளிலும் என வேறு பல தெரிவுகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
லோன்றிவத்தையிலுள்ள செயல் முறைகள் எவ்வாறு நடைபெறுகின்றன?
“அழுக்குத் துணிகளை எங்களிடம் கொண்டுவரும் கொம்பனிகள் உள்ளன. அப்படி யாரும் அழுக்குத் துணிகளைக் கழுவுவதற்குக் கொண்டு வராது விட்டால் நாங்கள் நகரத்திற்குள் சுற்றித் திரிந்து அவற்றைச் சேகரித்து வருவோம்” என சுமணசிறி விளங்க வைத்தார்.
அழுக்குத் துணிகள் களஞ்சிய அறை ஒன்றினுள் ஒன்று சேர்க்கப்பட்டு அங்கே அவை இலக்கமிட்டு வகைப்படுத்தப்படும். துணிகளில் அவை யாருக்குச் சொந்தானவை என அடையாளமிடப்பட்டு அவற்றைக் கழுவவேண்டிய வகைக்கேற்ப தரம் பிரிக்கப்படும். சிலவற்றை அவிக்க வேண்டும், ஏனையவை ஊறவைக்கப்படும். கறைகளுடன் கூடியவை மிகவும் கவனமாகக் கையாளப்படும். அழுக்கு நீக்கிகளாக வெவ்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படும். அவற்றுள் கோஸ்றிக் சோடா, சாயம் நீக்கி, வெளிறச் செய்பவை மற்றும் சாதாரண அழுக்கு நீக்கிகள் அடங்கும்.
அழுக்குத் துணி களஞ்சிய அறைக்கு அடுத்ததாக ஸ்திரிப் பெட்டி போடும் அறையுண்டு. இங்கு வியாபாரத்தில் ஈடுபடும் 30 குடும்பங்கள் ஒவ்வொன்றும் பயன்படுத்தும் 30 களஞ்சிய அறைகளும் 30 ஸ்திரிப் பெட்டி போடும் அறைகளும் லோன்றிவத்தையில் உள்ளன.

/washed-clothes
காய்ந்த உடுப்புகளைப் பழமையான முறையில் கரி நிரப்பப்பட்ட ஸ்திரிப் பெட்டியினால் அழுத்தி மிருதுவாக்குகின்றனர். துப்பரவான துணிககளின் மணம் ஸ்திரி போடும் அறைகளில் நிறைந்திருக்கும். இந்த வேலையைச் செய்பவர்கள் தமது பெட்டியின் வெப்ப அளவைக் கணிப்பதற்காக ஸ்திரிப்பெட்டியின் அடிப்பாகத்தைத் தமது இடது கையின் நடு விரலால் இலேசாகத் தொட்டுப் பார்த்து மதிப்பிடுவர். இவ் வேலையைப் பலவருடங்களாகச் செய்து வருவதனால் சுமணசிறியின் நடுவிரல் ஓடு போன்று கடினமாகவுள்ளது.
ஆடைகளைக் கழுவி உலரவைத்து ஸ்திரிப்பெட்டி போட்ட பின்னர் சலவை நிலைய அலுவலர்கள் உரியவர்களிடம் கொடுப்பார்கள்.
“நாங்கள் ஒப்படைப்பதாக வாக்களித்த திகதியிலும் நேரத்திலும் அவற்றைக் கொண்டு சென்று கொடுக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் எங்கள் கூலி கொடுக்கப்படும்” எனச் சொல்லும் அவர் “இல்லாதுவிட்டால் எங்கள் மீது உள்ள நம்பிக்கை கெட்டுவிடும். அந்த நபரிடமிருந்து மறுபடியும் உடுப்புகள் எங்களுக்குக் கிடைக்காது. இப்படி நடைபெற்றால் எங்களுக்குத் தொழில் இல்லாது போய்விடும். அதன் காரணமாகத்தான் நாங்கள் ஒவ்வொரு நாளும், நாள் முழுவதும் வேலை செய்கிறோம். இதில் முக்கியமான விடயம் நம்பிக்கைதான். அதன் காரணமாகத்தான் இந்த நவீன உலகத்திலும் இத்தனை வருடங்களாகவும் மக்கள் இன்றும் லோன்றிவத்தைக்கு வருகின்றனரென நான் நம்புகிறேன். எனக் கூறி லோன்றிவத்தை நீடித்திருப்பதற்கும் இன்றும் அதற்கான தேவை பற்றி பகிர்ந்துகொண்டு முடித்துக் கொண்டார்.