Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

பட்டம் விடுவோம்… பட்டம் விடுவோம்…வாழ்வதற்காக!

வேலை செய்யும் பொழுது ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக உடல் ஊனமுற்ற சமன் குமாரா மேலே ஒரு மரத்தை அண்ணாந்து பார்த்ததும் வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார்.

04.12.2018  |  
இரத்தினபுரி மாவட்டம்

இந்தப் பட்டங்கள் எங்கள் உயிர்களைப் போன்றவைகளே. அவற்றை நாம் சம நிலையான நிறையில் அமைக்காதுவிட்டால் அவை அங்குமிங்குமாக ஆடிக் கொண்டிருக்கும். பட்டங்களில் தொங்கும் குஞ்சங்களில் ஓரிரு இழைகளை அகற்றுவதன் மூலம் அதன் சமநிலையை மீண்டும் சரி செய்துவிடலாம். ஆனால் மக்களின் வாழ்க்கைகளைச் சமநிலைப்படுத்துவது மிகவும் சிரமம். அனுபவத்தின் வாயிலாக நான் இதைக் கூறுகிறேன். உயிர் வாழ்வதற்கான முயற்சியில் இருக்கும் போது இனத்துவ அல்லது மத அடையாளங்கள் இருப்பதில்லை.

சமன் குமாரா பலாங்கொடையிலுள்ள ஒவ்வொருவரினாலும் “பட்டம் சமந்த” என அறியப்பட்ட ஒருவர். முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட பகுதியான தெஹிகஸ்தலாவ என்னும் இடத்தைச் சேர்ந்தவரும் பட்டம் மற்றும் வெளிச்சக்கூடுகளைச் செய்பவருமான 36 வயதான இவர் ஒரு மேசன் உதவியாளாக வாழ்க்கையை ஆரம்பித்தார். வேலை நேரத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தின் பின்னர் சமந்த ஊனமுற்றவரானார். சில்லறை வேலைகள் செய்வதன் மூலம் அவர் தனது குடும்பத்தைத் தாங்கினார். ஓரு பட்ட மரத்தை அவர் அண்ணாந்து பார்த்த பொழுதுதான் அவருடைய புதிய தொழில் அவருக்கு வந்து சேர்ந்தது..

அப்போது சமந்தவிற்கு ஒரு பட்டத்தையோ அல்லது ஒரு வெசாக் கூட்டையோ செய்யத் தெரிந்திருக்கவில்லை. அவர் அதனைக் கற்றுக் கொள்ள முயன்றபோதிலும் அந்தக் கலை தெரிந்தவர்கள் அவருக்கு அதைக் கற்றுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகவே அவர் கூர்ந்த அவதானிப்பின் மூலம் கற்றுக் கொண்டார்.

/

“நான் சிலருக்கு வெளிச்சக் கூடுகள் செய்து கொடுத்தேன். பணத்திற்காகவல்ல. ஆனால் அவர்கள் எனது கிராமத்தவர்கள் என்ற காரணத்திற்காக. ஆனாலும் சிலர் எனது முயற்சிக்காக ஏதாவது கொடுத்தர்கள். விபத்து ஏற்பட்டபின்னர் இதுவே எனது தொழிலாக எனது மூளையில் தோன்றியது.

வெசாக் தினத்திற்கு முந்திய ஒரு வாரத்திலிருந்தே மக்கள் வெசாக் வெளிச்சக்கூடுகளைத் தெரு ஓரங்களிலும் கடைகளிலும் காணத் தொடங்குவார்கள். வெசாக் தினம் பௌத்தர்களினாலும் இந்துக் களினாலும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ஒரு விடுமுறையாகும்.

நானும் எனது மனைவியும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கான ஏற்பாடுகளுக்காக அதற்கு முந்திய வருடம் ஓகஸ்ற் மாதத்திலேயே தயாராகிவிடுவோம். இதிற் பல வேலைகள் உண்டு. நாங்கள் பட்ட மரங்களைத் தேடிச் சென்று அவற்றை வெட்டி ஓகஸ்ற்றிலே கொண்டுவருவோம்.

அவைகளைச் சுத்தஞ் செய்து தேவையான அளவுகளுக்கேற்ற விதத்தில் வெட்டித் தாயார்படுத்த வேண்டும். அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு வெளிச்சக் கூடுகளைக் கட்டுதல் வேண்டும். இறுதியில் வெசாக் தினம் நெருங்கி வந்ததும் அவற்றைக் கடைகளுக்குக் கொடுபோம். நானும் தெரு ஓரத்தில் கூரைத் தகடுகளைக் கொண்டு கடையொன்றை அமைத்து வெசாக் வெளிச்சக் கூடுகளை விற்பனை செய்வேன். அதன் மூலம் நாங்கள் எங்கள் வருமானத்தை அதிகரிப்போம்.

சமந்தவின் பட்டங்களுக்கான காட்சிக்கூடம் பலாங்கொடை பொது மைதானத்திலிருக்கிறது. சமந்தவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஒரு நுக மரநிழலின் ஒரு பக்கத்தை இயற்கை வழங்கியுள்ளது. அந்த மரத்தின் கிளைகளிலே தொங்கும் பட்டங்களினால் அந்தக் கிளைகளும் பல வர்ணமுடையனவாய் தெரிகின்றன.

சில பட்டங்கள் பாம்புகள் போலவும் சில வெளவால்கள் போன்றும் மற்றும் சில பறவைகள் போல அல்லது வெவ்வேறு உருவங்களிலும் காணப்படுகின்றன. அவற்றின் விலைகளும் நூறிலிருந்து முன்னூறு வரையில் உள்ளன. அன்று நாம் அந்த இடத்திற்குப் போனபோது பெரும்பாலான பட்டங்கள் விற்பனையாகிவிட்டன.

“இரண்டிலிருந்து மூவாயிரம் அடிகள் பறக்கக்கூடிய வகையில் பட்டங்களைச் செய்யமுடியும். அது ஒரு கலை. எல்லோராலும் அதனைச் செய்ய முடியாது. அந்தப் பட்டத்தைப் பாருங்கள். இரண்டாயிரம் அடிக்கு மேல் காற்றிலே அசைந்தாடும்” என்று பட்டத்தைக் காண்பித்தபடி கூறினார்.

சமந்த தனது பட்டங்களை மொத்த விலையிலேயே கடைகளுக்கு விற்பனை செய்வார். ஆனாலும் இரண்டு மலைக் குன்றுகளுக் கிடையிலிருக்கும் சமதளத்தில் அமைந்துள்ள பொது மைதானத்தில் வைத்து அவைகளைத் தானே விற்பனை செய்வதை அவர் கூடுதலாக விரும்புகிறார். அந்தப் பகுதியூடாக பெரும்பாலான வேளைகளில் வீசும் குளிர்மையான காற்று அந்த இடத்தைப் பட்டம் விடுவதற்கு மிகவும் பொருத்தமான இடமாக்குகின்றது.

“இதில் முக்கியமான விடயம் யாதெனில் எல்லா வகையான மக்களும் இங்கு வருவார்கள். வெசாக் வெளிச்சக் கூடுகளை சிங்களவர்கள் மட்டுமே வாங்குவார்களாயினும் முஸ்லிம்கள் பட்டங்களை விரும்புவார்கள். பட்டங்கள் வாங்குபவர்களிடம் இரக்கமுள்ள இதயமுண்டு.” எனக் கூறுகிறார்.

“இந்த மைதானத்தில் பட்டம் விடும்போது எல்லோரும் சமத்துவத்துடன் இருக்தகின்றனனர். அதன் மூலம் எல்லோரும் மகிழ்ச்சியடைகின்றனர்.”